Home /News /lifestyle /

நியூஸ்18 வழங்கும் மருத்துவ விருதுகள் 2022 : சிறந்த மருத்துவமனைகளை நீங்களும் பரிந்துரைக்கலாம்!

நியூஸ்18 வழங்கும் மருத்துவ விருதுகள் 2022 : சிறந்த மருத்துவமனைகளை நீங்களும் பரிந்துரைக்கலாம்!

 நியூஸ்18 வழங்கும் மருத்துவ விருதுகள் 2022

நியூஸ்18 வழங்கும் மருத்துவ விருதுகள் 2022

News18 Maruthuva Viruthugal 2022 | பெருங்கருணைக்குச் சொந்தக்காரர்கள் மருத்துவர்கள், அத்தகைய மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றால், அவர்களின் பணியிடமான மருத்துவமனை கோயில். அத்தகைய கோயில்களை கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி இந்த மருத்துவ விருதுகள் 2022.

மேலும் படிக்கவும் ...
    பாராட்டும்…புகழும்…  ஒருவரை அடுத்தகட்டத்திற்கு உந்தித் தள்ளும். அதற்கு அங்கீகாரமும் அவசியமானது. அது மட்டும்தான் புதிய தேடல்களோடு இன்னும் இன்னுமாய் இயங்கச் செய்யும். அப்படி மருத்துவ உலகின் பல்வேறு துறைகளில் கோலோச்சும் மருத்துவ மையங்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் அரிய முயற்சிதான் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நடத்தும் மருத்துவ விருதுகள் 2022 நிகழ்ச்சி.

    மண்ணின் மாண்புகளைப் போற்றும் மனிதர்களைக் கொண்டாடும் மகுடம் விருதுகள், உழவுக்கு வந்தனை செய்யும் உழவன் விருதுகள்.. உயர்தனிக் கல்விச்சோலைகளைப் போற்றும் கற்றல் விருதுகள் வரிசையில் நியூஸ்18 குழுமத்தின் மற்றொரு அலங்கார ஆபரணம் மருத்துவ விருதுகள் 2022 . நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் – என்பது வான்புகழ் கொண்ட வள்ளுவன் வாக்கு…

    நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன என்பதை ஆய்ந்தறிந்து அதற்கான சரியான சிகிச்சை அளிப்பதே நல்ல மருத்துவம் என்கிறார் பொய்யாமொழிப் புலவர். மரணம் தவிர்க்க முடியாதது என்றாலும், அதன்மீதான அச்சம் நமக்கு இல்லாதிருப்பதற்கு முழுமுதல் காரணம் மருத்துவர்களே….

    துயரங்கள் துரத்திக்கொண்டிருக்கும் போது, வரவேற்பறை வரை வரும் ரணம், மருத்துவரின் அறைக்குள் செல்லும்போது பாதியாகக் குறைகிறது என்பார்கள், அத்தகைய பெருங்கருணைக்குச் சொந்தக்காரர்கள் மருத்துவர்கள், அத்தகைய மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றால், அவர்களின் பணியிடமான மருத்துவமனை கோயில். அத்தகைய கோயில்களை கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி இந்த மருத்துவ விருதுகள் 2022.

    சிறந்த மருத்துவமனை, சிறந்து மருத்துவ கட்டமைப்பு, சிறந்த சிகிச்சை எனப் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி பெருமைப்படுத்த காத்திருக்கிறது நியூஸ்18 தமிழ்நாடு. நேயர்களாகிய உங்களது பரிந்துரையின் அடிப்படையில் விருதாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

    உங்களுக்கு அருகில், மாவட்டத்தில், சொந்த ஊரில் இயங்கும் மருத்துவ மையங்கள் கூட பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறலாம். நீங்கள் பரிந்துரைக்கும் மருத்துவமையங்கள் குறித்த சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு Maruthuvaviruthugal@nw18.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

    விருதுக்கான பிரிவுகள் 

    • Best Multispecialty in Chennai
    • Best Diabetics Hospital
    • Best Fertility Hospital in Tamil Nadu
    • Cardiology
    • Best Hospital in Trichy
    • Best Hospital in South Tamil Nadu
    • Best Hospital in Delta Belt
    • Best Diagnostic laboratories in south TN.
    • Best Implantation Hospital Implantation Liver
    • Best Cardiology Hospital In Madurai
    • Fertility Hospital
    • Best Medical APP for online consolation
    • Best Orthopaedics Hospital in Kongu Belt
    • Best Cardio Hospital in Kongu Belt
    • Multispecialty Hospital from Salem
    • Best oncology hospital from Salem
    Published by:Vijay R
    First published:

    Tags: Maruthuva Viruthugal

    அடுத்த செய்தி