Home /News /lifestyle /

மருத்துவ விருதுகள் 2022: சிறந்த மருத்துவ மையங்களுக்கு நியூஸ்18 சார்பில் விருது வழங்கும் விழா

மருத்துவ விருதுகள் 2022: சிறந்த மருத்துவ மையங்களுக்கு நியூஸ்18 சார்பில் விருது வழங்கும் விழா

Youtube Video

கொரோனா காலகட்டத்தில் தன்னலமின்றி பணியாற்றியவர்களுக்கு கொரோனா வாரியர்ஸ் விருதை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி வழங்கி பெருமை படுத்தியது.

    மருத்துவ உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மருத்துவ மையங்களுக்கு, நடப்பாண்டுக்கான நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் மருத்துவ விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

    மருத்துவ உலகின் பல்வேறு துறைகளில் கோலோச்சும், மருத்துவ மையங்களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு மருத்துவ நிறுவனங்களை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி, துறை வல்லுனர்கள் உதவியுடன், தெரிவு செய்தது. அந்நிறுவனங்களை கவரவிக்கும் நிகழ்ச்சி, நியூஸ் 18 தமிழ்நாடு மருத்துவ விருதுகள் 2022, என்ற பெயரில் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நியூஸ்18 குழுமத்தின் நிர்வாகிகளும், சிறப்பு விருந்தினர்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் உள்ள மருத்துவ மையங்களில் மருத்துவ வசதிகள், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, அவற்றில் தலை சிறந்தவற்றை தேர்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டு, மொத்தம் 17 பிரிவுகளில் மருத்துவ விருதுகள் இறுதிசெய்யப்பட்டு அம்மையங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.

    1. சிறந்த பன்நோக்கு மருத்துவமனை விருது - சிம்ஸ் மருத்துவமனை, சென்னை.

    இவ்விருதினை எஸ்.ஆர்.எம் குழும தலைவர் ரவி பச்சமுத்து பெற்றுக்கொண்டார்.

    இவ்விருதினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

    2. சிறந்த கிராமப்புற மருத்துவ சேவை விருது - தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெரம்பலூர்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதை வழங்கினார்.

    தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீனிவாசன் மற்றும் நீல்ராஜ், மரகதமணி, ராமலிங்க ரெட்டி ஆகியோர் விருதினைப் பெற்றுக் கொண்டார்.

    3. சிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனை விருது - மதுரை வேலம்மாள் மருத்துவமனை

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் விருதினை வழங்கினார்.

    மதுரை வேலம்மாள் மருத்துவமனை இயக்குனர் கார்த்திக் மற்றும் மருத்துவர் செந்தில் முத்துராமன் விருதினை பெற்றுக் கொண்டனர்.

    4. கொங்கு மண்டலத்தின் சிறந்த மருத்துவமனை விருது - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோயம்புத்தூர்

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விருதினை வழங்கினார்.

    இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், தலைமை செயல் அலுவலர் ராம்குமார் ஆகியோர் விருதினைப் பெற்றுக் கொண்டனர்

    5. சென்னையின் சிறந்த கல்லீரல் மற்றும் இரைப்பை குடல் மருத்துவமனை விருது - க்லேநேக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதை வழங்கினார்.

    மருத்துவர்கள் ஜாய்வர்கீஸ், மகாதேவன் உள்ளிட்டோர் விருதினை பெற்றுக்கொண்டனர்.

    6. தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனை விருது - மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதினை வழங்கினார்.

    அம்மருத்துவமனையின் மருத்துவ மேலாளர் கண்ணன் விருதினைப் பெற்றுக் கொண்டார்

    7. தென் தமிழகத்தின் சிறந்த இதயவியல் மருத்துவமனை விருது - மதுரை வேலம்மாள் மருத்துவமனை

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் விஐபி ஹேர் கலர் சேம்பு ஆர் நிறுவனர் ஆர்.கே ஆகியோர் விருதினை வழங்கினர்.

    மருத்துவமனை இயக்குனர் கார்த்திக் மற்றும் சண்முக சுந்தரம் ஆகியோர் விருதுனை பெற்றுக்கொண்டனர்.

    8. கொங்கு மண்டலத்தின் சிறந்த பன்னோக்கு மருத்துவமனை விருது - ஏ.பி மருத்துவ மையம் மற்றும் பன்நோக்கு மருத்துவமனை, சேலம்

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் ஆகியோர் விருதினை வழங்கினர்.

    மருத்துவர் சங்கர் நாராயணன் மற்றும் பெருமாள் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர்.

    9.சிறந்த நீரிழிவு மருத்துவமனை விருது - டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம், சென்னை

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதினை வழங்கினார்.

    மருத்துவர்கள் ஜெகதீஷ், வரமஹாலக்ஷ்மி ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர்.

    10.சென்னையில் சிறந்த மகளிர் நலம்  மற்றும் மகப்பேறு மருத்துவமனை விருது - சூர்யா மருத்துவமனை, சென்னை

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருதினை வழங்கினர்.

    முதன்மை செயல் அலுவலர் மருத்துவர் ராஜுவ் ஸ்ரீகுமார் விருதினை பெற்றுக்கொண்டார்.

    11.தமிழ்நாட்டின் சிறந்த கருத்தரிப்பு மையம் விருது - ஏ.ஆர்.சி சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நியூஸ் 18 குழும பொது மேலாளர் சரஸ்வதி ஆகியோர் விருதினை வழங்கினர்.

    மருத்துவமனை நிறுவனர் மகாலட்சுமி சரவணன் விருதினை பெற்றுக் கொண்டார்.

    12. டெல்டா மண்டலத்தின் சிறந்த மருத்துவமனை விருது -மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருதினை வழங்கினர்

    மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர்(operations) பாலமுருகன் விருதினை பெற்றுக்கொண்டார்.

    13. கொங்கு மண்டலத்தின் சிறந்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவமனை விருது - குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கோவை.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்கத்தின் கூடுதல் இயக்குனர்  வசந்தாமணி ஆகியோர் விருதினை வழங்கினர்.

    குப்புசாமி நாயுடு மருத்துவமனை மருத்துவர் ராஜ்பால் கே அபைசந்த், மருத்துவர் சந்திரசேகர் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர்.

    14. கொங்கு மண்டலத்தின் சிறந்த நரம்பியல் மருத்துவமனை விருது - நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை, சேலம்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் சங்குமணி ஆகியோர் விருதினை வழங்கினர்.

    நியூரோ பவுண்டேஷன் மருத்துவர்கள் சேகர், ராஜேஸ்வரி ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டார்.

    15. கொங்கு மண்டலத்தின் சிறந்த சிறுநீரகவியல் மருத்துவ மையம் விருது - குளோபல் மெடிக்கல் சென்டர், சேலம்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருதினை வழங்கினர்.

    குளோபல் மெடிக்கல் சென்டர் மருத்துவர் ஞானசேகரன் விருதினை பெற்றுக்கொண்டார்.

    16.சென்னை மண்டலத்தின் சிறந்த நரம்பியல் மருத்துவமனை விருது - க்லேநேக்கல்ஸ் (Gleneagles global health city) குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கினர்.

    மருத்துவர் தினேஷ் நாயக், மருத்துவர் சதீஷ்குமார், மருத்துவர் நைஜல் பீட்டர் சீம்ஸ் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர்.

    17. தென் தமிழகத்தின் சிறந்த நோய் கண்டறிதல் மையம் விருது - மதுரை மீனாட்சி மருத்துவ ஆய்வகம்.

    முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நியூஸ் 18 குழும தென் மண்டல ஆசிரியர் விவேக் நாராயண் ஆகியோர் விருதினை வழங்கினர்.

    மதுரை மீனாட்சி மருத்துவ ஆய்வக மருத்துவர் மதுசூதனன் விருதினை பெற்றுக்கொண்டார்.

    மருத்துவ விருதுகள்


    முன்னதாக, கொரோனா காலகட்டத்தில் தன்னலமின்றி பணியாற்றியவர்களுக்கு கொரோனா வாரியர்ஸ் விருதை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி வழங்கி பெருமை படுத்தியது.

    1. பொன்னுசாமி, மருத்துவ பணியாளர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை

    2.பொம்மி, செவிலியர், ஸ்டான்லி அரசு மருத்துவமனை சென்னை

    3.பக்ருதீன், திணைநிலவாசிகள் அமைப்பு

    4.மாரியாயி, மயான பணியாளர், சிறப்பு அங்கீகாரம்.

    5.யேகவதி, சுகாதார ஊழியர், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை

    ஆகியோருக்கு கொரோனா வாரியர்ஸ் விருது வழங்கப்பட்டது.
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Maruthuva Viruthugal

    அடுத்த செய்தி