Home /News /lifestyle /

கிருஷ்ண ஜெயந்தி 2022 | விரதத்தின் போது செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை..!

கிருஷ்ண ஜெயந்தி 2022 | விரதத்தின் போது செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை..!

கிருஷ்ண ஜெயந்தி விரதம்

கிருஷ்ண ஜெயந்தி விரதம்

Krishna Janmashtami 2022 | இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள கிருஷ்ண பக்தர்களிடையே மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் விசேஷம் தான் கிருஷ்ண ஜெயந்தி. இந்தப் பண்டிகை கிருஷ்ண ஜன்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்றும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளான கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்படுகிறது. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் கிருஷ்ணரின் பிறந்தநாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜென்மாஷ்டமியில் விரதம் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தவர் என்பதால் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு தான் கிருஷ்ண ஜெயந்திக்கான பூஜை பெரும்பாலும் துவங்கும். மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தார் என்று நம்பப்படுவதால், பக்தர்கள் 24 மணி நேர விரதத்தை நள்ளிரவில் முடித்து கொள்கிறார்கள்.

இந்து நாட்காட்டியின் படி இந்த ஆண்டு அஷ்டமி திதி ஆகஸ்ட் 18-ம் தேதி இரவு 9.20 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 19, 2022 அன்று இரவு 10:59 மணிக்கு முடிவடைகிறது. கிருஷ்ண ஜென்மாஷ்டமி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் எப்போதும் செல்வச் செழிப்புடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இந்த நேரத்தில் நீங்கள் விரதம் இருக்க நினைத்தால் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

ஜென்மாஷ்டமி விரதம் இருப்பவர்கள் செய்ய கூடியவை:

- ஜென்மாஷ்டமி அன்று பலர் நிர்ஜல விரதம் இருப்பார்கள், அதாவது உணவு மட்டுமல்லாமல் தண்ணீர் கூட குடிக்காமல் விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். சிலர் உணவுகளை சாப்பிடாமல் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் விரதத்தின் போது நீங்கள் ஜவ்வரிசி கஞ்சி, கிச்சடி, சப்பாத்தி மற்றும் பசு நெய்யில் சமைத்த சாதம் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். 

- உணவு மற்றும் தண்ணீர் தானம் செய்வது உன்னதமான செயல் என்று முன்னோர்கள் கருதுகிறார்கள். அதிலும் குறிப்பாக உண்ணாவிரதம் இருக்கும் போது, தேவைப்படுபவர்களுக்கு அன்னதானம் செய்வது நம் வாழ்வின் மகிழ்ச்சி நிலைக்கவும், செழிப்பாக மாறவும் உதவுகிறது.

- பசுக்கள் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் நெருக்கமாகவை. எனவே ஜென்மாஷ்டமி அன்று விரதத்தின் போது பசுக்களுக்கு உணவளிப்பதும் உன்னதமானதாகக கருதப்படுகிறது.

Also Read : தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற பஞ்ச கிருஷ்ண தலங்கள்.!

- விரதத்தின் போது உடலை சோர்வாகாமல் வைத்திருக்க பழங்கள் அல்லது உலர்பழங்களை உட்கொள்ளலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் இவை ஆற்றலையும் அதிகரிக்க உதவுகின்றன. ஆப்பிள்கள், ப்ளாக்பெர்ரிகள், வாழைப்பழங்கள், திராட்சைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் பேரீட்சை உள்ளிட்டவற்றை எடுத்து கொள்ளலாம்.

- பால் மற்றும் தயிர் இல்லாமல் ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் முழுமையடையாது. விரதத்தின் போது, நீங்கள் பழங்களால் செய்யப்பட்ட அல்லது இனிப்பு லஸ்ஸி பானங்களை அருந்தலாம்.ஜென்மாஷ்டமி விரதம் இருக்கும் போது செய்ய கூடாதவை..

- ஜென்மாஷ்டமி விரதத்தின் போது வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்கப்பட்ட உணவுகள் இருக்க கூடாது. வெங்காயம் அல்லது பூண்டை பயன்படுத்தவோ சாப்பிடவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

- பெரும்பாலான இந்து பண்டிகைகளின் போது பழங்கள் மற்றும் சைவ உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே விரதத்தின் போது இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை உட்கொள்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

Also Read : கிருஷ்ண ஜெயந்தி எப்போது.?  சரியான தேதி, பூஜைக்கான நேரம்..!

- சிலர் விரதத்தின் போது சுறுசுறுப்பாக இருக்க டீ அல்லது காபி குடிப்பார்கள். இரண்டுமே தவிர்க்க வேண்டும்.

- சாப்பிட அல்லது பரிமாற பயன்படுத்தப்படும் அனைத்து பாத்திரங்களும் சுத்தமாகவும் அசைவ உணவுக்குப் பயன்படுத்தப்படாமலும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

- விரதத்தின் போது எண்ணெய் உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். அதற்கு பதில் பழங்கள், பால் மற்றும் பழச்சாறுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Fasting, Festival, Krishna Jayanthi

அடுத்த செய்தி