இந்தியாவின் மாபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஹோலி திருவிழா மார்ச் 8-ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளம், குறும்புத்தனம் மற்றும் பல நிரம்பியிருப்பதை கொண்டாடும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீயவற்றை நல்லவை வெற்றி கொண்டதன் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் ‘பால்குணா’ மாதத்தில் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
ஹோலி பண்டிகையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரும் தெருக்களில் ஒன்றுகூடி ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஹோலி பண்டிகை நாளில் நீங்கள் எத்தகைய ஆடையை அணிந்திருந்தாலும், உங்கள் ஆடையின் வண்ணம் மாற்றப்படும் என்பது உறுதி.
குளிர்காலத்தை வழி அனுப்பிவிட்டு வசந்த காலத்தை வரவேற்பதாகவும் ஹோலி பண்டிகை அமைகிறது. ஹிந்து கலாசாரத்தில் கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகளைப் போலவே ஹோலி பண்டிகைக்கும் பெரும் முக்கியத்துவம் மற்றும் கலாச்சார பின்னணி உண்டு. ஹோலி பண்டிகையின் முதல் நாளில் மக்கள் அனைவரும் பொது இடத்தில் ஒன்றுகூடி ஹோலிகா என்ற பெயரில் சிறப்பு பூஜைகளை செய்கின்றனர்.
வண்ணங்களின் பண்டிகை ஹோலி:
இறை அவதாரமான கிருஷ்ணருக்கு சிறுவயதில் ஊட்டப்பட்ட தாய்ப்பால் விஷமாக மாறியதால், அவரது கன்னம் நீல நிறம் அடைந்ததை எண்ணி அவர் வருந்திக் கொண்டிருந்தாராம். தன்னுடைய நீல கன்னத்தை பார்த்து ராதை மற்றும் இதர பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று கிருஷ்ணர் நினைத்தாராம்.
மகனின் கவலைகளை கண்டு மனம் வருந்திய தாய் யசோதா, கிருஷ்ணருக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ராதையின் முகத்திலும் வண்ணங்களை பூசினாராம். ஆக, ஹோலி என்பது கிருஷ்ணர் மற்றும் ராதையின் புனிதம் மிகுந்த காதலை பிரதிபலிக்கிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று பலர் நம்புகின்றனர்.
என்னென்ன வண்ணங்களுக்கு என்னென்ன முக்கியத்துவம்.!!
சிவப்பு நிறம் அன்பை குறிக்கிறது. கருணை மற்றும் கருத்தரித்தல் போன்றவற்றை குறிப்பதாகவும் சிவப்பு வண்ணம் அமைகிறது. ஆரஞ்சு வண்ணம் புதிய தொடக்கத்தையும், மன்னிப்பின் அவசியத்தையும் உணர்த்துகிறது.
மஞ்சள் நிறமானது மகிழ்ச்சி, அமைதி, கொண்டாட்டம், தியானம், அறிவு மற்றும் கற்றல் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. கனிவு, கருணை மற்றும் நல்லெண்ணத்தை போதிப்பதாக பிங்க் நிறம் அமைகிறது. பச்சை நிறம் என்பது இயற்கை, வளமான வாழ்க்கை மற்றும் பலன் அறுவடை போன்றவற்றை உணர்த்துகிறது.
Also Read : ஹோலி கொண்டாட்டத்தில் வாட்டர் கலர்களை ஏன் பயன்படுத்த கூடாது.? பாதுகாப்பாக கொண்டாட்ட வழிகள்
நீல நிறம் மற்ற நிறங்களை காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் இது கிருஷ்ணரின் நிறத்தை குறிப்பதாகவும், வலிமை மற்றும் ஆன்மீக வளர்ச்சியை உணர்த்துவதாகவும் அமைகிறது. மாயம் மற்றும் மந்திரங்களின் சக்தியை உணர்த்துவதாக பர்பிள் நிறம் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Holi, Holi Celebration, Holi Festival