Home /News /lifestyle /

Raksha Bandhan 2022 | ரக்ஷா பந்தன் என்றால் என்ன? புராணங்கள் சொல்லும் கதையும் வரலாறும்

Raksha Bandhan 2022 | ரக்ஷா பந்தன் என்றால் என்ன? புராணங்கள் சொல்லும் கதையும் வரலாறும்

ரக்ஷா பந்தன்

ரக்ஷா பந்தன்

Raksha Bandhan 2022 | சகோதரத்துவத்தை பாதுகாத்து மேம்படுத்தும் ரக்ஷா பந்தனின் வரலாறு இன்று நேற்று தொடங்கியது அல்ல. மகாபாரத காலத்திலேயே இது தொடங்கப்பட்டது என்று புராணக் கதைகள் உள்ளன. அதை பற்றி இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ரக்ஷா பந்தன் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்றே ரக்ஷா பந்தன் வருகிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்கள் என்பவர்களுக்கான பண்டிகை என்பதை கடந்து, ரக்ஷா பந்தன் சகோதரத்துவத்தை, உடன் பிறந்தவர்களுக்கு இடையிலான அன்பையும் பிணைப்பையும் மேம்படுத்துவதை வலியுறுத்தியது. எனவே, இது ஒரு சமூகம் ஒரு மாநிலம் என்பதை கடந்து மத ரீதியான கொண்டாட்டமாக பண்டிகையாக அல்லாமல், நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் 11 அன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட இருக்கிறது.

ரக்ஷா பந்தன் தொடங்கிய புராணம்

சகோதரத்துவத்தை பாதுகாத்து மேம்படுத்தும் ரக்ஷா பந்தனின் வரலாறு இன்று நேற்று தொடங்கியது அல்ல. மகாபாரத காலத்திலேயே இது தொடங்கப்பட்டது என்று புராணக் கதைகள் உள்ளன. அதை பற்றி இங்கே பார்க்கலாம்.மகாபாரத கதைகளின்படி, ஒரு முறை கிருஷ்ணர் காத்தாடி விட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த நூல் அவரது விரலை கிழித்து காயமாகி விடுகிறது. கிருஷ்ணரின் விரலில் ரத்தம் வழிவதைக் கண்ட திரௌபதி வேதனை அடைந்தார். உடனடியாக, தன்னுடைய சேலையின் ஒரு பகுதியைக் கிழித்து, கிருஷ்ணரின் விரலில் கட்டுப்போட்டு விடுகிறார். இதனால் நெகிழ்ந்த கிருஷ்ணர், திரௌபதியை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டு, எப்போதும் பாதுகாப்பதாக வாக்களித்தார்.

பிரமிப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் தனித்துவமான இடங்கள் பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள் இங்கே.!

ரக்ஷா என்றால் பாதுகாப்பு

பந்தன் என்றால் உறவு, ரத்த பந்தம்

திரௌபதியை தனது சகோதரியாக ஏற்ற கிருஷ்ணர் பாதுகாப்பாக இருப்பார் என்று பொருள்.

அதே போல பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடந்த பகடை விளையாட்டில் எல்லாவற்றையும் பாண்டவர்கள் கௌரவர்களிடம் பறிகொடுத்து விட்டு, இறுதியாக திரவுபதியை வைத்து விளையாடினர். அந்த ஆட்டத்திலும் தோற்ற பாண்டவர்களை அவமானப்படுத்துவதற்காக துச்சாதனன் திரௌபதியை சபையின் நடுவே நிறுத்தி, சேலையை துகிலுரிய துவங்கினான். எப்பொழுதுமே பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் கூறிய வாக்கின்படி திரௌபதியை கிருஷ்ணன் காத்தார்.

 இந்த நாளை நினைவு கூறும் வகையில், ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

வேறொரு புராணக் கதையின் படி, தனது தீவிர பக்தனான பாலி என்ற அசுரனுக்கு வரம் தந்தார் மகா விஷ்ணு. வைகுண்டத்தை விட்டு, தனது அரக்க ராஜ்ஜியத்தை காக்குமாறு வரம் வேண்டினான் பாலி. அங்கு வந்த மகாவிஷ்ணுவை பாலி சிறைபிடித்தார். மகா விஷ்ணு இல்லாத வைகுண்டத்தில் வசிக்க விருப்பமில்லாத லக்ஷ்மி தேவி, பாலியின் ராஜ்ஜியத்தில் ஒரு சாதாரணப் பெண் போல வசித்தார். ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று நடக்கும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட மகாலக்ஷ்மி, மன்னர் பாலிக்கு, அவரை சகோதரனாக பாவித்து மணிக்கட்டில் ஒரு கயிறு கட்டினார். அப்போது பாலி எதற்காகக் கயிறு கட்டினாய் என்று பெண் வேடத்தில் இருந்து லக்ஷ்மி தேவியை கெட்ட போது, அவர் தனது உண்மையான சொரூபத்தை வெளிப்படுத்தினார். மகாலட்சுமியை வணங்கிய பாலி, அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, மகாவிஷ்ணுவை வைகுண்டம் செல்ல அனுமதித்தார். இந்த நினைவாக, ஷ்ரவண பூர்ணிமா என்றும், பாலிவா என்றும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

99 சதவீதம் பேர் தோல்வி... ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி இந்த கணக்கை சமன் செய்ய முடியுமா.?

ரக்ஷா பந்தன் பண்டிகை தொடங்கியதாக மற்றொரு வரலாற்று நிகழ்வு உள்ளது. பகதூர் ஷா, சித்தூர் நாட்டை ஆண்ட கர்ணாவதி என்ற ராணிக்கு எதிராக போர் தொடுத்த போது, முகலாயப் பேரரசர் ஹுமாயுனிடம் உதவி கோரி, சகோதரியாக நினைக்குமாறு ஒரு புனித நூலை அனுப்பியதாக வரலாறு உள்ளது.இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன்

ஒரு சில விசேஷ தினங்களுக்கு பான் இந்தியா என்று சொல்லும் அளவுக்கு நாடு முழுவதும் பெரிய வரவேற்பு இருக்கும். உதாரணமாக காதலர் தினத்தை சொல்லலாம். காதலர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆன்லைன் தளங்கள், கடைகள் என்று எல்லாவற்றிலுமே சிறப்பு சலுகைகளும் சிறப்பு பொருட்களும் வழங்கப்படும். அதேபோல ரக்ஷா பந்தன் என்பது இந்திய அளவில் கொண்டாடப்படும் விமர்சையான பண்டிகையாக மாறிவிட்டதால், ரக்ஷா பந்தனுக்கு, சகோதர சகோதரிகளுக்கு வழங்குவதற்கு பரிசுகள், ரக்ஷா பந்தன் ராக்கி, ஆரத்தி தட்டு என்று பலவிதமான பொருட்களுடன் ஆன்லைன் தளங்கள் மற்றும் கடைகளில் வியாபாரம் களைகட்டி வருகிறது.

கட்டாயம் ட்ரை பண்ண வேண்டிய இந்திய ராஜ வம்சங்களை சேர்ந்த 7 உணவுகள்...

ரக்ஷா பந்தன் அன்று, பெண்கள் ஒரு தட்டில், மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள் மற்றும் ராக்கி கயிறு வைத்து, தனது சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து, இனிப்புகள் ஊட்டி, அவனுடைய கையில் ராக்கி கயிறு கட்டி, பரிசும் ஆசியும் பெறுவார்கள். சில சமூகங்களில் இந்த பண்டிகை மிகவும் முக்கியமானதாகும். இதனால், திருமணமான பெண்கள், ரக்ஷா பந்தன் என்று தனது சகோதரன் இல்லத்துக்கு சென்று ராக்கி கட்டி கொண்டாடுவார்கள். வசதிக்கு ஏற்றவாறு, ராக்கி கயிறு, சாதாராண கயிறு முதல், தங்கம், வெள்ளி, மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட கயிறாகவும் கட்டலாம். அதே போல, சகோதரனும், தங்கள் வசதிக்கு ஏற்றவாறு, பரிசுகளாகவோ, ரொக்கப் பணமாகவோ சகோதரிக்கு வழங்குவார்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Festival, India

அடுத்த செய்தி