ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Bakrid 2022 : பக்ரீத் கொண்டாட்டத்தின் தேதி, நேரம், மற்றும் அதன் முக்கியத்துவம்!

Bakrid 2022 : பக்ரீத் கொண்டாட்டத்தின் தேதி, நேரம், மற்றும் அதன் முக்கியத்துவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Bakrid Celebrations |உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகள் பக்ரீத் கொண்டாட்டத்தை ஜூலை 10ம் தேதி அதாவது ஞாயிறு அன்று கொண்டாட இருக்கின்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பக்ரீத் என்பது உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இது ரம்ஜான் கொண்டாட்டம் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு 4 நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும். தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த கொண்டாட்டம் சுல் ஹிஜ்ரா என்ற அரேபிய மாதத்தின் பத்தாவது நாள் கொண்டாடப்படுகிறது. ‘ஈத் அல்-அதா’ என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படும் இந்த கோலாகலமான திருநாள் பற்றி இங்கே பார்க்கலாம்.

பக்ரீத் திருநாளின் முக்கியத்துவம் :

தியாகத் திருநாள் என்று அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம், இந்த நாளின் போது, இயன்றவர்கள், தங்களால் இயன்றதை இயலாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான். இது, இப்ராஹீம் நபிக்கு மரியாதையை செலுத்தும் வண்ணம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் நடந்த கொடூரமான ஆட்சியின் போது, இறையுணர்வை பறைசாற்றியவர் நபி. நாடு நாடாக பயணித்து மக்களிடையே அன்பின் மார்க்கத்தை பரவ செய்தார்.

நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்தவருக்கு, பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து இறைப்பணியை செய்து வந்த நபி இப்ராஹிமுக்கு, ஒரு நாள் தன்னுடைய மகனை இறைவனுக்கு பலி கொடுப்பதாக கனவு வந்தது. இதை தனது மகனிடம் தெரிவித்த நபியின் வார்த்தைக்கு மறுவார்த்தை கூறாமல், இறைவன் கட்டளையை நிறைவேற்றக் கூறினார். இறைவனுக்காக தனது மகனை தியாகம் செய்தார் நபி.

பக்ரீத் திருநாளன்று ஏன் ஆடு, மாடுகள் பலியிடப்படுகின்றன?

பக்ரித்தின் முக்கியமான சடங்குகளில் ஒன்று விலங்குகளை பலியிடுவது. ஆடு மாடு மற்றும் ஒட்டகம் உள்ளிட்ட ஆரோக்கியமான விலங்குகள் இந்த நாளில் இறைவனுக்காக பலியிடப்படும். மேலே கூறியுள்ளது போல நபி இப்ராஹிம் தனது மகனையே இறைவனுக்காக தியாகம் செய்தார். ஆனால் மகனை பலியிடும் பொழுது அந்த இடத்தில் இறைவன் மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிட செய்தார்.

தன் மகனை தான் வெட்டுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த நபிக்கு, மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை தான் வெட்டினோம் என்பது பின்னர் தான் புரிந்தது. எனவே இந்த சடங்கை நிறைவேற்றுவதற்கும் அல்லாவின் கட்டளையை நினைவு கூர்ந்து அதன்படி செயல்படுவதற்கும் பக்ரீத் திருநாள் அன்று உலகம் முழுவதிலுமே ஆடுகள் பலியிடப்படுகின்றன. வெட்டப்படும் மாமிசத்தை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்தும் தேவையானவர்களுக்கு வழங்கி சமைத்து சாப்பிட்டு இந்த நாளை கொண்டாடுகிறார்கள். இந்த நாளன்று ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றுசேர்ந்து கொண்டாடுவது இதன் சிறப்பம்சம்.

பக்ரீத் கொண்டாட்டம் என்று தொடங்குகிறது :

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகள் பக்ரீத் கொண்டாட்டத்தை ஜூலை 10ம் தேதி அதாவது ஞாயிறு அன்று கொண்டாட இருக்கின்றது. சர்வதேச வானவியல் மையத்தின் கூற்றுப்படி சவுதி அரேபியா கொண்டாட்டத்தை தொடங்கிய அடுத்த நாளன்று இந்தியாவில் பக்ரீத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதை தவிர்த்து ஜோர்டான், மொராகோ, எகிப்து, ஓமன், சவுதி அரேபியா மற்றும் UAE ஆகிய ஆறு இஸ்லாமிய நாடுகள் பக்ரீத் கொண்டாட்டத்தை ஜூலை 9ம் தேதியே தொடங்க இருப்பதாக எமிரேட்ஸ் செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

First published:

Tags: Bakrid, Viral