Home /News /lifestyle /

இனி வயதானாலும் கவலை இல்லை... 30 ஆண்டு கால இளமையை மீட்கும் அசத்தல் கண்டுபிடிப்பு!

இனி வயதானாலும் கவலை இல்லை... 30 ஆண்டு கால இளமையை மீட்கும் அசத்தல் கண்டுபிடிப்பு!

விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி மூலமாக வயதானவர்களுக்கு 30 ஆண்டு கால இளமையை மீட்கும் வழிமுறையைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். 

விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி மூலமாக வயதானவர்களுக்கு 30 ஆண்டு கால இளமையை மீட்கும் வழிமுறையைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். 

விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி மூலமாக வயதானவர்களுக்கு 30 ஆண்டு கால இளமையை மீட்கும் வழிமுறையைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். 

என்னதான் வருடா, வருடம் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினாலும், வயதில் ஒராண்டு கூடிக்கொண்டே செல்கிறதே, சீக்கிரம் வயதாகிவிடுமே என்ற கவலை அனைவர் மனதிலும் உண்டு. முதுமை அழகானது, ஓய்விற்கான காலம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் கடைசி காலத்தை மகிழ்ச்சியாக செலவிடலாம் என பல ஆப்ஷன்கள் இருந்தாலும், வயது முதிர்ச்சி காரணமாக முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், நரைமுடி போன்றவை யாருக்கு தான் பிடிக்கிறது.

குறிப்பாக பெண்களுக்கு 40 ஆகிவிட்டது என்றாலே, தனது வயதைக் கூட யாருக்கும் சொல்லக்கூடாது என நினைக்கின்றனர். மேலும் முகத்தில் ஏற்படும் சுருக்கம், கோடுகள் ஆகியவற்றை மறைக்க ஆன்டிஏஜிங் கிரீம்கள் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இனி இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், 30 ஆண்டுகள் வரை மனித தோல் செல்களில் ஏற்படும் வயதான தோற்றத்தை மாற்றியமைக்க விஞ்ஞானிகள் ஒரு 'உற்சாகமான' புதிய முறையை கண்டறிந்துள்ளனர். இதனை இதுவரை விஞ்ஞானிகள் கண்டறிந்ததிலேயே மிக நீண்ட 'ரீ-ப்ரோகிராமிங்' நுட்பம் என புகழும் அளவிற்கு பிரபலமடைந்து வருகிறது.

இ லைப்-யில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி, ஆராய்ச்சியாளர்கள் பழைய உயிரணுக்களின் செயல்பாட்டை ஓரளவு மீட்டெடுக்கவும், அதே நேரத்தில் வயதை புதுப்பிக்க முடிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தோல் காயங்கள் மீது நடத்திய சோதனையின் போது, ​​பாதி அளவு புத்துயிர் பெற்ற செல்கள் இளமை செல்களைப் போலவே செயல்படுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Also Read : ஆபீஸ்-க்கு வர சொன்னால் வேலையே வேண்டாம் - Apple நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கும் ஊழியர்கள்!

பாப்ரஹாம் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள நிபுணர்கள் முதலில், 'முதிர்வு நிலை தற்காலிக மறுநிரலாக்கத்தை' (எம்டிபிஆர்) (maturation phase transient reprogramming (MTPR)) உருவாக்கினர். அது மறு நிரலாக்க காரணிகளை தூண்டி புத்துயிர் பெறும் வரை இந்த செயல்முறை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் கருத்து படி, "எம்டிபிஆரால் தூண்டப்பட்ட புத்துணர்ச்சியின் அளவு முந்தைய நிலையற்ற மறு நிரலாக்க நெறிமுறைகளில் அடையப்பட்டதை விட கணிசமாக அதிகமாகத் தோன்றுகிறது. கூடுதலாக, எம்டிபிஆர் மூலம் ஃபைப்ரோபிளாஸ்ட்கள் கொலாஜன் புரதங்களின் இளமை நிலைகள் உருவாக்கப்பட்டு, அவற்றின் இடம்பெயர்வு வேகம் பகுதி அளவு செயல்பட்டு, புது செல் உருவாக்கத்தை தூண்டுகிறது” எனக்கூறியுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு மீளுருவாக்கம் செய்யும் மருத்துவ உலகில் மற்றொரு சிறந்த பங்களிப்பாக இருக்கும் என்றும், இதேமுறையை மற்ற உயிரணு வகைகள் உருவாக்கத்திலும் பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஆல்டோஸ் லேப்ஸ் கேம்பிரிட்ஜ் இன்ஸ்டிட்யூட்டை வழிநடத்திச் சென்ற எபிஜெனெடிக்ஸ் ஆராய்ச்சித் திட்டத்தின் குழுத் தலைவரான பேராசிரியர் வொல்ஃப் ரெய்க் கூறுகையில்: "இந்த கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் புத்துயிர் பெறும் மரபணுக்களை நாம் அடையாளம் காண முடியும். முதுமையால் சருமத்தில் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்கான இந்த சிகிச்சை மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக இருக்கும் என்பது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.

தோல் செல்லை மீண்டும் புத்துயிர் பெற செய்ய முடியுமா?, வயதான தோற்றத்தை மாற்றி, மீண்டும் இளமையை பெற வழி உண்டா? என பல்லாண்டு காலமாக எழுந்து வந்த கேள்விகளுக்கு இந்த ஆராய்ச்சி சிறப்பான பதிலைக் கொடுத்துள்ளது.
Published by:Esakki Raja
First published:

அடுத்த செய்தி