• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புரத அடிப்படையிலான கொரோனா தடுப்பூசி பற்றி தெரியுமா ?

புரத அடிப்படையிலான கொரோனா தடுப்பூசி பற்றி தெரியுமா ?

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கொரோனா வைரஸின் வடிவத்தை பிரதிபலிக்கும் ஒரு புரத அடிப்படையிலான கொரோனா தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

  • Share this:
விலங்குகளில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில், கொரோனா வைரஸின் வடிவத்தை பிரதிபலிக்கும் ஒரு புரத அடிப்படையிலான கொரோனா தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ACS சென்ட்ரல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் எலிகளுக்கு SARS-CoV-2-ஐப் பிரதிபலிக்கும் நானோ துகள்களால் ஆன தடுப்பூசியை செலுத்தினர். ஏற்பி பிணைப்பு களத்தின் (RBD) ஆன்டிஜனின் பல நகல்களைக் வெளிப்படுத்துவதன் மூலம், SARS-CoV-2 வைரஸ் ஒருவரில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும்.

SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியான RBD-ஐ அடையாளம் காண பெரும்பாலான புரத அடிப்படையிலான தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிக்கின்றன. ஏனெனில் RBD வைரஸ் மனித உயிரணுக்களுக்குள் நுழைந்து அதனை பாதிக்கிறது. இந்த ஸ்பைக் புரதம் ஹோஸ்ட் செல் மேற்பரப்பில் உள்ள ACE-2 ஏற்பியுடன் தன்னை பிணைத்துக் கொள்கிறது. இதன்மூலம் RBD, வைரஸ் உயிரணுக்களில் நுழைவதற்கான நுழைவாயிலாக செயல்படுகிறது.



இருப்பினும், அனைத்து தடுப்பூசிகளும் ஆன்டிபாடி மற்றும் T-செல் ரெஸ்பான்ஸ்களை வெளிப்படுத்துவதில்லை. இவை இரண்டும் நீடித்த நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாலிமர்சோம்கள் எனப்படும் தடுப்பூசி விநியோக கருவியை உருவாக்கியுள்ளனர். இவை ஆன்டிஜென்கள் மற்றும் துணைப்பொருட்களை (அட்ஜுவென்ட்ஸ்) இணைக்கும் ஒரு கோள நானோ துகள்கள் ஆகும். பின்னர் இந்த நானோ துகள்கள் நோயெதிர்ப்பு உயிரணுக்களுக்குள் விடுவிக்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அட்ஜுவென்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாடி) அதிகரிக்கும் ஒரு உதவி மூலக்கூறுகள் ஆகும். அதேபோல, பாலிமர்சோம்கள் வலுவான T-செல் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வைரஸ்களைப் பிரதிபலிக்கும் இந்த நானோ துகள்களை உருவாக்கி, RBD-இன் பல நகல்களை அவற்றின் மேற்பரப்பில் காண்பிப்பதன் மூலம் ஒருவரில் ஆன்டிபாடி ரெஸ்பான்ஸ்களை மேலும் மேம்படுத்த முடியும் என்பதைக் கண்டு குழு வியந்தது.



ஆராய்ச்சியாளர்கள் SARS-CoV-2 க்கு ஏற்றமாதிரியான பாலிமர்சோம்களை உருவாக்கி அவற்றை பல RBD-கள் போல பிரதிபலிக்க செய்துள்ளனர். ஆய்வகத்தில் நானோ துகள்களை வகைப்படுத்திய பிறகு, அவை மூன்று வார இடைவெளியில் இரண்டு அளவுகளில் ஒரு அட்ஜுவென்ட் கொண்ட தனி பாலிமர்சோம்களுடன் எலிகளுக்கு தடுப்பூசியாக செலுத்தப்பட்டன. அதனை ஒப்பிட்டு பார்க்கும் வகையில், அவர்கள் அட்ஜுவென்ட் கொண்ட நானோ துகள்களுடன் RBD- வைரஸ் இணைத்துள்ள பாலிமர்சோம்களை மற்றொரு குழு எலிகளுக்கு தடுப்பூசியாக அளித்தனர்.

 

Also read : முழு தானியங்களை சாப்பிட்டால் இந்த நோய்களை தவிர்க்கலாமா? தெரிந்துக் கொள்ளுங்கள்..



எலிகளின் இரு குழுக்களும் அதிக அளவு RBD- வைரஸ் குறிப்பிட்ட ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்தாலும், மேற்பரப்பில் அலங்கரிக்கப்பட்ட பாலிமர்சோம்கள் மட்டுமே உயிரணுக்களில் SARS-CoV-2 தொற்றுநோயைத் தடுக்கும் மற்றும் நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளை உருவாக்கியது. மேற்பரப்பு அலங்கரிக்கப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட RBD-க்கள் இரண்டும் வலுவான T செல் பதில்களைத் தூண்டியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய தடுப்பூசி இன்னும் மனிதர்களில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக சோதிக்கப்பட வேண்டியிருந்தாலும், வள-வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பரவலான விநியோகம் தொடர்பாக mRNA தடுப்பூசிகளை விட இது நன்மைகளைக் கொண்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்பரப்பில் அலங்கரிக்கப்பட்ட பாலிமர்சோம்களை கொண்ட தடுப்பூசி குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு குளிரூட்டலுடன் நிலையானவையாகவும் செயலில் இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாறாக, mRNA தடுப்பூசிகளுக்கு சப்ஜெரோ வெப்பநிலை சேமிப்பு தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: