Turmeric : மஞ்சளை பயன்படுத்துவதால் ஏற்படும் அறிவியல் நன்மைகள்!

மஞ்சள்

பழங்காலத்தில் இருந்தே இது ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. தவிர மஞ்சள் அதிசய மசாலா என்றும் குறிப்பிடப்படுகிறது.

  • Share this:
இந்தியர்கள் அனைவரது வீட்டிலும் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் மஞ்சள். இது சமைப்பதற்கு மட்டுமின்றி சளி மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க வீட்டு வைத்தியத்தில் பயன்படுகிறது. மேலும் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஆன்ட்டிமுட்டஜெனிக் (antimutagenic) , ஆன்ட்டிகார்சினோஜெனிக், பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது மஞ்சள். பழங்காலத்தில் இருந்தே இது ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. தவிர மஞ்சள் அதிசய மசாலா என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஏனெனில் இதன் அற்புத பண்புகள் பல்வேறு வழிகளில் நமக்கு பயன் தருகின்றன. உலர் மஞ்சளில் வைட்டமின் ஏ, தியாமின் (பி 1), ரிபோஃப்ளேவின் (Riboflavin) (பி 2), வைட்டமின் சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை அடங்கி உள்ளன.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் பல்வேறு தொடர்புடைய நோய்கள் மற்றும் சில நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் “கர்குமினாய்டுகள்” (curcuminoids) எனப்படும் கலவைகள் உள்ளது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அறிவியல் ஆதாரங்களின்படி மஞ்சளின் நன்மைகள் மற்றும் பயன்கள் மிகவும் அதிகம். அதில் சிலவற்றை பார்ப்போம்.* மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது. எனவே இது எந்தவொரு நோய் அல்லது நோயால் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக போராட உடலுக்கு உதவுகிறது

* உடலின் ஆக்ஸிஜனேற்ற திறனை மஞ்சள் அதிகரிக்கிறது.ஏனெனில் இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. எனினும் உடலின் சொந்த ஆக்ஸிஜனேற்ற நொதிகளை தூண்டும்.

ALSO READ :  ஆலிவ் எண்ணெயின் சில அற்புதமான, ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரியுமா?

* மஞ்சளில் உள்ள குர்குமின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மூளையில் BDNF (brain derived neurotrophic factor) அளவை அதிகரிப்பதன் மூலம் மூளையின் செயல்பாடுகளைப் பாதுகாக்க உதவுகிறது.

* எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மஞ்சள் ஒரு அற்புதமான இயற்கை பொருள் ஆகும், ஏனெனில் இது மூட்டு தொடர்பான பிரச்சனைகளின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

* இரைப்பை தொடர்பான சிக்கல்களை சரி செய்ய மஞ்சள் உதவுகிறது. வயிற்றில் வாயு உருவாவதை தவிர்க்கவும், அஜீரணம் கோளாறுகளில் இருந்து விடுபடவும் இது உதவியாக இருக்கிறது.

* மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கூடிய சக்தி வாய்ந்தது மஞ்சள். 1 தேக்கரண்டி மஞ்சள் தூளை வெதுவெதுப்பான நீரில் ஒரு நாளைக்கு 3 முறை எடுத்து கொள்வைத்து கபத்தை கரைக்க செய்யும்.

* உலகின் மிக கொடிய நோயானான புற்றுநோயிலிருந்து கூட மஞ்சள் பாதுகாப்பு அளிக்கும். மஞ்சளும் மஞ்சளில் உள்ள வேதிப்பொருளான ‘கர்குமின்’ கேன்சரை உண்டாக்கும் அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. சில வகையான புற்றுநோய்களுக்கு எதிராக வலுவான சைட்டோடாக்ஸிக் விளைவுகளைக் கொண்ட ஆக்ட்டிவ் கலவைகளான கர்குமோல் மற்றும் கர்டியோனை மஞ்சள் கொண்டுள்ளது. எனவே ஒரு கப் தண்ணீரில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நாளைக்கு 2 முறை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள்.* வலி மற்றும் சரும அரிப்பு நீங்கவும் மஞ்சள் பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தண்ணீரில் மஞ்சள் தூளை கலந்து மென்மையான பேஸ்ட் செய்யுங்கள். ஹெர்பெஸ் புண்கள், அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி, பருக்கள் மற்றும் தொழுநோய் புண்கள் போன்றவற்றில் இந்த மஞ்சள் கலந்த பேஸ்டை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ALSO READ : இயற்கையாக ஒளிரும் சருமத்தைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவைகள்

* மஞ்சள் தூளுக்கு இயற்கையிலேயே சிகிச்சை முறை பண்புகள் இருப்பதால் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்கின்றன மற்றும் வலி நிவாரணம் வழங்குகிறது. எனவே சுளுக்கு மற்றும் உட்புற காயங்களை போக்கவும் மஞ்சளை பயன்படுத்தலாம். சிறிது எண்ணைய் மற்றும் மஞ்சள் தூளை சுட வைத்து அதை தசை சுளுக்கு பகுதியில் நாளொன்றுக்கு 2-3 முறை தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
Published by:Sankaravadivoo G
First published: