காதலரே.. காதலரே.. பூமி உங்கள் பூஞ்சோலை… காலமெல்லாம் வாழட்டும் சூடிக்கொண்ட பூமாலை.. பிப்ரவரி 14 காதலர் தினம். காதலில் விழுந்த காதலர்களும்.. காதலை சொல்லத் துடிக்கும் இளைஞர்களும் ஆவலோடு காத்திருந்த தினம் இன்று. இந்த வாரமே காதலர் வாரம் தான். பிப்ரவரி 7-தேதியில் இருந்து 14-ம் தேதி வரை காதலர்களுக்கு ஸ்பெஷலான வாரம். காதலர் வாரத்தில் ரோஸ் டே, ப்ரபோஸ் டே, சாக்லெட் டே, டெட்டி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே-வை தொடர்ந்து காதலர்கள் காதலை கொண்டாடும் நாளான காதல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
60 ஆயிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு.. ஆனாலும் லவ் ஜோடிதான்.. 20-வதில் ஆரம்பிச்சோம் இன்னமும் முடியலையே நம்மோட லவ் ஸ்டோரி தான்.. என காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பசுமையான அந்த தருணங்களையும் காதலை வெளிப்படுத்த தாம் பட்டபாடுகளை நினைத்து குதூகலிக்கும் நாளாக தான் இந்த நாள் பார்க்கப்படுகிறது. முரட்டு சிங்கிள்கள் கவனத்திற்கு.. சிங்கள் என ஸ்டேட்டஸ் போட்டு தெறிக்கவிட்டிருந்த உங்கள் நண்பர் கூட காதலில் விழுந்தேன் என இன்று ஸ்டேட்டஸ் வைத்திருக்கலாம்.

காதல்
வாடாத ரோஜாப்பூவை தேடித் தேடி வாடிய இளைஞனுக்கு சாதாரண காஸ்ட்யூமில் வரும் காதலியும் இன்று விண்ணுலகத்தில் இருந்து இறங்கி வந்த தேவதையாய் காட்சியளிப்பாள் இந்த காதலர் தினத்தில்.. காதல் வரிகளை தேடிதேடிப்படித்த காதலனுக்கு இன்று வைரமுத்து தான் வாத்தியார்.. கவிஞரின் வரிகள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கும் பொன்வரிகள். இரைச்சலோடு பாட்டு சத்தம் கேட்கும் நகரப்பேருந்துகளிலும் கூட என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் என மெலடிகள் மெட்டெடுக்கும்..

கிப்ட் ஷாப்
பேன்ஸி ஸ்டோரும்.. கிப்ட் ஷாப்பும் பிரகாசிக்கும்.. மாலையில் வாடிப்போகும் ரோஜாப்பூவும் என்னவள் கூந்தலில் சூடியதால் மரணத்தையும் மகிழ்ச்சியாய் ஏற்றது என.. ஆங்காங்கே திடீர் கவிஞர்களாக அவதார மெடுப்பார்கள்.. இருக்கும் கவிஞர்களின் இம்சைகள் போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே என்ற ஸ்டேட்ஸ்கள் பட்டொளி வீசி வாட்ஸ் அப்பில் பறக்கிறது.
சிங்களாக காட்சியளிக்கும் பிள்ளையார் தான் இன்று பல காதலர்கள் சந்திக்கும் மீட்டிங் ஸ்பாட்டாக இருக்கும்.. திரையரங்குகளிலும் இன்று காதல் தீ தான் தீமூட்டிக்கொண்டிருக்கும்..

காதல்
கமிடெட் ஆக துடிக்கும் 90-ஸ் கிட்ஸ் ஆகட்டும்.. அவர்களை கலாய்க்கும் 2k கிட்ஸ் ஆகட்டும்.. காதலை தங்கள் ஸ்டைலில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காதல் வயப்படும் பலரும் காதலை வெளிப்படுத்தாமல் காதலில் தோல்வி அடைகிறார்கள்.. காதலிக்கிறத விட அந்த காதலை காதலன்/ காதலியிடம் வெளிப்படுத்த தைரியம் வேணும்.. சொல்லி நிராகரிக்கப்பட்ட காதலை விட சொல்லாமல் கடந்த போன காதல்கள்தான் நிறைய இருக்கும்.. காதலை வெளிப்படுத்துவது எல்லாம் வேற லெவல் த்ரில்.. காதலை மனசுக்குள் பூட்டிவைத்து கடந்த போகாமல்.. உங்கள் காதலை சிறகடித்து பறக்கவிடுங்கள்.. தைரியமாக காதலை சொல்லுங்கள்… உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்..Happy Valentines Day… மக்கா...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.