4 மாதத்தில் 26 கிலோ எடையைக் குறைத்த சானியா மிர்சா! வைரலாகும் உடற்பயிற்சி வீடியோ

நான் உடல் எடைக் குறைத்ததற்கான காரணம் கடுமையான உடல் உழைப்பு, தீவிரமான ஈடுபாடு, முயற்சிகள்தான் - சானியா மிர்சா

news18
Updated: September 25, 2019, 10:32 PM IST
4 மாதத்தில் 26 கிலோ எடையைக் குறைத்த சானியா மிர்சா! வைரலாகும் உடற்பயிற்சி வீடியோ
சானியா மிர்சா
news18
Updated: September 25, 2019, 10:32 PM IST
சானியா மிர்சா கர்ப்பக் காலத்தில் கூடுதலாக 23 கிலோ எடையுடன் பருமனாக இருந்தார். அந்த சமயத்தில் பலரும் எப்படி இவர் உடல் எடையைக் குறைக்கப்போகிறார். அவரால் மீண்டும் டென்னிஸ் விளையாட முடியுமா? என்றெல்லாம் விமர்சனங்கள் வைத்தனர். அப்போதே நான்கே மாதத்தில் என் எடையைக் குறைத்து பழைய உடல் நிலைக்கு வருவேன் என பிரபல மாத இதழுக்குப் பேட்டியளித்தார். அந்த செய்தியும் வைரலாகப் பரவியது.

அதேபோல் தற்போது ஒரு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து அதில் கருவுற்ற போது கூடியிருந்த 23 கிலோ உடல் எடையை நான்கே மாதத்தில் 26 கிலோ வரைக் குறைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.





 


Loading...




View this post on Instagram




 

We had documented little ‘tid bits from my post pregnancy journey back to being and feeling healthy and fit again .. I’ve been asked bout my ‘weight loss’ journey sooo many times .. how? When? Which? Where ? So I’ll try to post some of it here everyday or every few days .. I put on 23 kilos when I was pregnant and have managed to lose 26 in span of 4 months or so .. with a lot of hard work ,discipline and dedication .. I read msgs from women allll the time as to how they find it so difficult to come back to ‘normalcy’ after child birth and don’t take care of themselves or don’t find the motivation or inspiration .. Ladies, I just wanna say ... if I can do it then anyone else can too .. believe me that one hour or 2 hours a day to yourself will do wonders to you physically but sooo much mentally as well .. ❤️ remember - #Mummahustles 🙃 Ps- this is me after losing a bit of weight already after Izhaan was born .. roughly 2 and a half half months after I delivered ..


A post shared by Sania Mirza (@mirzasaniar) on






அந்த வீடியோவில் பிரசவத்திற்குப் பின் எந்த மாதிரியான டையட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் என்பதற்கான குறும்பட வீடியோவாகப் பயிற்சி நாட்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ பதிவில் “ நான் உடல் எடையைக் குறைத்ததற்கான காரணம் கடுமையான உடல் உழைப்பு, தீவிரமான ஈடுபாடு, முயற்சிகள்தான். பலரும் அதை மிகவும் சிரமம் என்கிறார்கள். பெண்களே. .என்னால் இதை செய்ய முடிந்தது எனில் மற்ற எந்த பெண்களுக்கும் இது சாத்தியமே. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் முழுமையாக உடற்பயிற்சியில் மட்டும் உங்கள் உடலையும், மனதையும் ஈடுபடுத்துங்கள். நிச்சயம் உடல் குறையும் அதிசயத்தை உணர்வீர்கள். இது உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் நல்ல உணர்வை அளிக்கும் என்று கூறியுள்ளார்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: September 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...