ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களில் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்குள் குறைந்துவிடும் போன் ஆப் டேட்டா வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்ய பூஸ்டர் ஷாட்கள் தேவைப்படலாம் என்றும் அந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, பல நாடுகள் முழுமையான தடுப்பூசி டோஸ் பெற்ற மக்களுக்கு கூடுதலாக பூஸ்டர் ஜப்களை (தடுப்பூசி மருந்து) வழங்கி வருகின்றனர். இதற்கு உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறது. ஏனெனில் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசிக் கூட பெறவில்லை. இந்த நிலையில், நடுத்தர நாடுகளை சேர்ந்த மக்களுக்காக தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்காமல், பல வளர்ந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு கூடுதலாக தடுப்பூசி விநியோகம் செய்வது வேதனையாக இருப்பதாகவும் WHO தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் பூஸ்டர் டோஸ் மக்களை மேலும் பாதுக்கப்பதாக கூறப்படுகிறது.
Zoe கோவிட் ஆய்வு தரவுகளின் சமீபத்திய பகுப்பாய்வின்படி, ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றவர்களில் ஒரு மாதத்திற்குப் பிறகு பாதுகாப்பு என்பது 88 சதவிகிதமாக இருந்தது. ஆனால் அந்த பாதுகாப்பு ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு 74 சதவிகிதமாகக் குறைந்தது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியிலிருந்து பெறப்படும் பாதுகாப்பு என்பது ஒரு மாதத்திற்குப் பிறகு 77 சதவிகிதமாக இருந்தது. நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குப் பிறகு 67 சதவிகிதமாகக் குறைந்தது.
இந்த ஆய்வு தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் மொபைல் போன் ஆப் மூலம் சேகரிக்கப்பட்ட நிஜ உலகளாவிய தரவைப் பயன்படுத்தியுள்ளது. அதில் பங்கேற்றவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட தடுப்பூசிகள் மற்றும் சோதனை முடிவுகள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பின்னர் அந்த டேட்டாக்கள் லண்டன் கிங்ஸ் கல்லூரி விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதன்படி இந்த ஆய்வில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான சோதனை முடிவுகள் கிடைத்தன. அதாவது ஆய்வில் அவ்வளவு மக்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து Zoe ஆப்பின் முன்னணி விஞ்ஞானியும் பேராசிரியருமான டிம் ஸ்பெக்டர் கூறியதாவது, வெவ்வேறு வயது வரம்பை கொண்ட குழுக்களில் தடுப்பூசியின் செயல்திறன் எவ்வாறு மாறுகிறது என்பதற்கு மேலும் அதிக தரவு தேவை என்று கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தன. ஆனால் கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு சீராக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Also Read : உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 3 விஷயங்கள்..
ஆனால் சில மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி செயல்திறன் குறைவதால் கொரோனவால் தீவிரமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் வருகிற குளிர்காலத்தில் அதிகமாக மருத்துவமனையில் சேர்க்கப்படலாம் என்றும் மேலும் அதிக இறப்புகள் ஏற்படலாம் என்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மரபணு தொற்றுநோயியல் பேராசிரியர் ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "என் கருத்துப்படி, இந்த மோசமான சூழ்நிலையில், முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வரும் குளிர்காலத்தில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான தடுப்பூசி பாதுகாப்பை வெளிப்படுத்தலாம்," என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது தீவிரமாக பரவி வரும் டெல்டா மாறுபாடு ஒருபுறம் இருக்க இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மருத்துவமனை உதவியை நாடும் மக்களின் எண்ணிக்கையும், இறப்புகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று மேலும் எச்சரித்துள்ளார். எனவே, அரசாங்கம் உடனடியாக தடுப்பூசி பூஸ்டர்களுக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் மற்றொரு ஆய்வில், ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் அஸ்ட்ராஜெனெகாவை விட வேகமாக குறைகிறது என்று கண்டறியப்பட்டது.
இங்கிலாந்து அரசாங்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வயதான மற்றும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது. எனவே இந்த அரை வருடத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இப்போது நோய்த்தொற்று தீவிரமாக பரவும் அபாயத்தில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.