மத நம்பிக்கை கொண்டவர்கள் நீண்ட நாள் வாழ்வார்களா? என்ன சொல்கிறது ஆய்வு

இந்த ஆராய்ச்சி என்பது கடவுள் இருக்கிறார், இல்லை என்பதை விட ஒரு தனி மனிதனுடைய அனுபவ அடிப்படையில் ஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

news18
Updated: May 3, 2019, 1:39 PM IST
மத நம்பிக்கை கொண்டவர்கள் நீண்ட நாள் வாழ்வார்களா? என்ன சொல்கிறது ஆய்வு
மதம்
news18
Updated: May 3, 2019, 1:39 PM IST
மத நம்பிக்கை கொண்டவர்கள் கடவுளை வணங்கும்போதும் , மத அனுபவத்தை பெறும்போதும்  நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் பெறுகின்றன. இதனால் அவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ரோலாண்ட் க்ரிஃபித் மற்றும் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் என்ற இரு உளவியலாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் 4,285 பேர் கலந்துகொண்டுள்ளனர். அவர்களிடம் கடவுள் வழிபாட்டு அனுபவம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். பின் கடவுளை வணங்கிய பின் உங்கள் மனநிலை எப்படி இருக்கும், அதன் பிறகான உங்கள் வாழ்க்கை முறை எப்படிப்பட்டதாக இருக்கும் எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் இந்த மாய அனுபவமானது வாழ்க்கையில் ஒரு திருப்தியை ஏற்படுத்துகிறது. வாழ்வதற்கான அர்த்தத்தை அளிக்கிறது. பிறந்ததற்கான தேவையை அளிக்கிறது. இதனால் மனதளவில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது எனக் கூறியுள்ளனர்.


இதுபோன்ற மனநிலையில் அவர்கள் வாழும்போது மற்றவர்களைக் காட்டிலும் அவர்களுடைய இறப்பு இன்னும் நான்கு வருடங்கள் தள்ளிபோகும் எனக் குறிப்பிடுகிறது.
”இந்த ஆராய்ச்சி என்பது கடவுள் இருக்கிறார், இல்லை என்பதைவிட ஒரு தனி மனிதனுடைய அனுபவ அடிப்படையில் ஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ளது“ என இதன் ஆராய்ச்சியாளர் ரோலாண்ட் கூறுகிறார்.
Loading...

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...