ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த ராசிக்காரர்கள் காதலை விட அந்த விஷயத்தில்தான் உஷாராக இருப்பார்களாம்..!

இந்த ராசிக்காரர்கள் காதலை விட அந்த விஷயத்தில்தான் உஷாராக இருப்பார்களாம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருப்பார் என்று தெரிந்து கொள்ள இதை பாருங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

உறவுகள் என்று வரும் போது, ஒவ்வொரு ராசியினருக்கும் தனித்தனி குண நலங்கள் இருக்கும். சில ராசிக்காரர்கள் உண்மையாக காதலித்து, திருமணம் செய்து, குழந்தைப் பெற்று அழகான குடும்பத்தை அமைத்து வாழ நினைப்பர். சிலர் சாதாரண டேட்டிங், திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்வது என்று இருப்பர். ஜோதிடத்தின் அடிப்படையில் சொல்லப்படும் பல்வேறு குணாதிசயங்கள் எல்லாம் ஒத்துப் போகின்ற வகையில் இப்போது ராசிபலன் அடிப்படையில் எந்த ராசிக்காரர்கள் காதலுக்கு முன்னால் உடலுறவில் ஈடுபட விரும்புவார்கள் என்று பார்க்கலாம். உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருப்பார் என்று தெரிந்து கொள்ள இதை பாருங்கள்.

கும்ப ராசிக்காரர்கள் :

கும்ப ராசிக்காரர்கள் உடலுறவை விரும்புபவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது துணையை சந்தித்து சில நாட்கள் ஆகியிருந்தாலும், அவர்களுடன் உறவில் மகிழ்ச்சிகரமாக ஈடுபடுவார்கள். இவர்கள் காதல் வயப்படுவதற்கு முன் உறவில் ஈடுபட்டு அதன் மூலம் காதலை வளர்க்க முயல்வார்கள். இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை நீடிக்க இவர்களின் சின்ன சின்ன பாலியல் சார்ந்த சந்தோஷங்கள் மகிழ்ச்சியை தரக் கூடியதாக இருக்கும். கும்ப ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு நினைப்பதைவிட அட்டகாசமாக இருக்கும்.

மேஷ ராசிக்காரர்கள் :

இந்த ராசியில் பிறந்தவர்கள் உறவில் ஈடுபடுத்த அதிக முயற்சிகள் தேவையில்லை. இந்த ராசிக்காரர்களின் உடலில் கை வைத்தல், கண்களைப் பார்த்தல் அல்லது லேசாக புகழ்ந்து / வழிந்து பேசினாலே எளிதில் மயங்கி, வலையில் சிக்கக்கூடியவர்கள். மேஷ ராசியில் பிறந்தவர்கள் பெண்கள் விரும்பக் கூடிய நபராக இருப்பார்கள் என்பதால் அவர்கள் பெண்களை ஈர்ப்பதில் பெரிய அளவில் முயற்சிகள் தேவையில்லை. அதுமட்டுமல்லாமல் சிற்றின்பத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு வயதுக்கு மேல் எப்போதும் செக்ஸ் எண்ணத்தில் அதிகம் ஆழ்ந்திருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் காமத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள். ஆகவே எளிதான முறையில் காமம் கிடைத்தால் அதற்கான முறைமைகள் பற்றியெல்லாம் யோசிக்காமல் செயலில் இறங்கி விடுவார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் :

இவர்கள் திருமண வயதை நெருங்கியதும் தனக்கான காதல் துணையை தேட ஆரம்பித்து டேட்டிங் போன்ற உறவில் ஈடுபடும் எண்ணங்கள் அதிகமாக இருக்கும். அவர்கள் திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடுவதை விரும்புவார்கள். தனுசு ராசியினர் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் துணிச்சல் மிக்கவர்கள். எப்பேற்பட்ட செயலையும் துணிச்சலுடன் செய்யக்கூடியவர்கள். இவர்களது சாகச இயல்பு பாலியல் வாழ்வில் மட்டும் வேறுபட்டதல்ல. ஆனால் இந்த ராசிக்காரர்கள் ஒருவருடன் உறவில் ஈடுபடுவதற்கு நேரம் எடுத்துக் கொள்வார்கள். மேலும் சௌகரியமாக உணர்பவர்களுடன் தான் உறவில் ஈடுபடுவார்கள். இவர்கள் எப்போதுமே புதியதை முயற்சிக்க ஆர்வம் கொள்வார்கள். அதில் பாலியல் வாழ்க்கையும் அடங்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால், முதலில் தங்களது உணர்வுகளைப் பற்றியே யோசிப்பார்கள்.

உங்கள் தாம்பத்திய வாழ்க்கை டல்லா போகுதா..? ஜோரா இருக்க சூப்பர் டிப்ஸ் இதோ...

சிம்ம ராசிக்காரர்கள்:-

சிம்ம ராசிக்காரர்களுக்கு பாலியல் ஆசை அதிகம் இருக்கும் மற்றும் படுக்கையில் இவர்களே ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் உறவில் ஈடுபட ஆரம்பித்துவிட்டால், கண்டதை நினைத்து குழப்பமான மனநிலையில் இல்லாமல், நல்ல நேரத்தைப் பெறுவதில் மட்டுமே அவர்களது முழு கவனமும் இருக்கும். சிம்ம ராசியினர் பாலியல் ஆசையில் மிகுந்த ஆர்வத்தை காட்டுவார்கள். துணை மீது இந்த விஷயத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். அவர்கள் காதலுக்காகவோ அல்லது காமத்திற்காகவோ எதையும் ஒதுக்கி வைக்க தயங்க மாட்டார்கள். இதற்கான நல்ல நேரத்தை எதிர்பார்த்து மிக கவனமாக இருப்பார்கள்.

ரிஷப ராசியினர் :

இவர்கள் சுக்கிரன் ஆதிக்கத்தால் காமத்தை அதிகம் விரும்புபவர்கள். கிடைக்காத பலாப்பழத்திற்கு கிடைக்கும் களாக்காயே மேல் என நினைப்பவர்கள் இவர்கள். அதனால் எந்த வகையான காமமாக இருந்தாலும் இவர்கள் ஓகே சொல்லி விடுவார்கள். ரிஷப ராசிக்காரர்கள் செக்ஸ் பற்றி நிறைய கற்பனையைக் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் ஒரு நாளின் எந்த நேரத்திலும் ஈடுபட தயங்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் படுக்கையில் பொறுப்பேற்க விரும்பமாட்டார்கள். அதற்கு பதிலாக தன் துணை தன்னை கவர்ந்திழுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களது வாழ்க்கைத் துணை உறவில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் தன் துணையிடம் இருந்தே அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம் நடப்பது முக்கியம். செக்ஸ் பற்றி மட்டும் யோசிக்காமல் வாழ்வில் உங்கள் துணையுடன் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு அடிப்படையானவற்றை செய்து வாழ்க்கையை நடத்துங்கள்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Sivaranjani E
First published:

Tags: Love, Rasi Palan