சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் முதலாளிகள் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். ஆனால் சிலருக்கோ முதலாளிகள் தங்கள் பணியாளர்களிடம் கடுமையாகவும், மோசமானவர்களாகவும் நடந்து கொள்வர். ஒரு அருமையான முதலாளிக்கான அடையாளம் பொதுவாக சமரசம் செய்ய விரும்புவது, லாஜிக்காக செயல்படுவது மற்றும் மற்றவர்களுக்கு போதுமான அக்கறை செலுத்துவது ஆகும்.
ஆனால் ஒவ்வொரு நபருக்கும் இந்த குணங்கள் இருப்பது இல்லை. அதற்கு ஒரு வகையில் காரணம் முதலாளிகளின் ராசிகள் கூட காரணமாக இருக்கலாம். அந்த வகையில் எந்த வகை ராசிக்காரர்கள் மிக கடுமையான குணாதிசயங்களை கொண்ட முதலாளிகளாக இருப்பார்கள் என்பதை காணலாம்.
கும்பம்: (Aquarius)
12 ராசிகாரர்களிடையே கும்ப ராசிக்காரர்கள் மிக மோசமான தலைவர்களாக இருப்பர். ஒரு நிறுவனத்தை வழிநடத்தும் வகையில் ஒரு பெரிய ஆற்றல் அவர்களுக்கு இருந்தாலும் கூட கும்ப ராசிக்காரர்கள் மிக கடுமையாக இருப்பார்கள். பணியிடங்களில் முற்றிலும் புதிய மற்றும் புதுமையான கருத்துகளுடன் அவர்கள் செயல்படுவார்கள். அவர்களின் ஒரே பிரச்சினை என்னவென்றால், மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமாக நினைப்பார்கள். எனவே, இந்த ராசிக்காரர்கள் தங்களின் வியாபாரத்தை கவனித்துக்கொள்வதற்கு பொருத்தமான சக ஊழியர்களை நியமிப்பது நல்லது.
விருச்சிகம்: (Scorpio)
விருச்சிக ராசிகாரர்களுடன் வேலை செய்வது நன்றாக இருந்தாலும், தொடர்ந்து வேலை செய்ய முடியாது. அவர்கள் இயல்பாகவே நல்ல தலைவர் குணாதியங்களை உருவாக்குவதில்லை. அவர்கள் எவ்வளவு பிஸியாக இருக்கிறார்கள் என்பதை பெரிதுபடுத்துவதிலும், விஷயங்களைப் பற்றி நியாயமற்ற முறையில் குறிப்பிடுவதிலும் மிகவும் மோசமானவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் இருண்ட உணர்ச்சிகளை இனப்பெருக்கம் செய்ய வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் வெளிப்படையாக இருக்க மாட்டார்கள். அவர்கள் உங்களிடம் விரக்தியடைந்தால் உங்கள் பின்னால் பேசுவார்கள்.
சிம்மம்: (Leo)
சிம்ம ராசிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் ஆவர். அவர்கள் ஒருபோதும் சமரசம் செய்வதில் மகிழ்ச்சியடைவதில்லை. இது அவர்களை மிக மோசமான முதலாளிகளாக மாற்றுகிறது. அவர்கள் ஒரு விமர்சனத்தையோ அல்லது ஒருவரை குறை செல்லும்போதோ வேலை செய்வோரின் தன்மைக்கு எதிரான ஒரு கருத்தை முன்வைப்பார்கள். இதனால் இவர்களை பற்றி ஏதேனும் ஒரு பீட்பேக்குகளை கொடுக்க வேண்டும் என்றால் பணியாளர்கள் சற்றே யோசிப்பார்கள். அதேபோல அவர்களிடம் வேலை செய்வது பணியாளர்களுக்கு இன்னும் அச்சுறுத்தலாக இருக்கும்.
மீனம்: (Pisces)
மீனம் ராசிக்காரர்களால் நிர்வகிக்க இயலாது. இயற்கையாகவே தலைமைத்துவ குணங்களை இவர்கள் கொண்டிருக்கவில்லை. இந்த ராசிக்காரர்கள் தங்களது பணியில் ஆழ்ந்த ஆர்வத்துடன் பணியாற்றவில்லை என்றால், அவர்களால் சில பணிகளை சரிவர செய்ய முடியாது. அதேபோல, இவர்களுக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர்களும் குழப்பமடைவார்கள்.
மகரம்: (Capricorn)
ஒரு குறிப்பிட்ட வழியில் காரியங்களைச் செய்யும்போது மகர ராசிகாரர்கள் பழைய முறைகளையே பின்பற்றும் குணாதிசயங்களை கொண்டவர்கள் ஆவர். எனவே, இது புதுமையான யோசனைகளைப் பற்றி இருக்கும் போது, அவர்களிடம் வேலை செய்பவர்கள் திட்டங்களை மாற்றுதல், ஒரு யோசனையை முன்வைத்தல் போன்ற விஷயங்களை ஊக்குவிக்க மாட்டார்கள். அவர்கள் பழைய வழியையோ அல்லது நீண்ட வழியையோ செய்யப் பழகுவதை விரும்புகிறார்கள். அவர்களுடைய இந்த அணுகுமுறையால் அவர்களுக்கு கீழ் வேலை செய்வது கடினமானதாக மாறிவிடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.