HOME»NEWS»LIFESTYLE»relationship zodiac signs who make the best husbands esr ghta

இந்த ராசிக்காரர்கள் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்களாம்.. நம்பிக்கை இருக்கா.. லிஸ்ட் செக் பண்ணுங்க..

எதிர்பார்ப்புடன் இருக்கும் பெண்களுக்கு, சில ராசிகளைக் கொண்ட கணவர்கள் நல்ல பொருத்தமாக இருப்பார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு காண்போம்...

இந்த ராசிக்காரர்கள் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்களாம்.. நம்பிக்கை இருக்கா.. லிஸ்ட் செக் பண்ணுங்க..
மாதிரி படம்
  • Share this:

பெண்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனையாக பார்ப்பது திருமணம். பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய பல நாள் கனவாகவே இருக்கும். குறிப்பாக கல்யாணம் ஆகாத டீன்ஏஜ் பெண்களிடம், உங்களோட வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கறீங்கனு கேட்டால், மிகப்பெரிய லிஸ்டே வரும்.

என்னை ரொம்ப நல்லா பாத்துக்கனும், என்னை மட்டுமே விரும்பணும், கஷ்டங்கள் வரும்போது கூட எந்த இடத்திலும் என்னைவிட்டுவிடக் கூடாது போன்ற ஆழமான வார்த்தைகளை சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். ஒருவரியில் சொல்லுங்க என்று கேட்டால், ’ஹேன்ஸ்சம்மா’ இருக்கனும் என்பார்கள். அப்படி எதிர்பார்ப்புடன் இருக்கும் பெண்களுக்கு, சில ராசிகளைக் கொண்ட கணவர்கள் நல்ல பொருத்தமாக இருப்பார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு காண்போம்.

ரிஷபம் (Taurus)



ரிஷப ராசிக்கார ஆண்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். தன்னை ஏமாற்றும் மனைவியை அவர்கள் வெறுத்தாலும், வாழ்க்கை நிலையாக வேண்டும் என்பதற்காக அனுசரித்து செல்வார்கள். நீங்கள் ரிஷப ராசியைச் சேர்ந்த கணவரை மணந்தால், உங்களை மட்டுமே முழுவதுமாக நம்பி இருப்பார். உங்களின் அனைத்து தேவைகளையும் முழு மனதுடன் செய்து கொடுப்பார்கள். மனைவிக்கு முழு விஸ்வாசமாக இருப்பார்கள்.



மீனம் (Pisces)

மீன ராசியைச் சேர்ந்த ஆண்கள், மனைவியிடம் முழு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். நல்ல திறமைசாலிகளான அவர்கள், நிதி மேலாண்மையில் மிகவும் சாமார்த்தியசாலிகளாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் நேரத்தில் உங்களுடைய அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொடுப்பார்கள். மனைவியின் மீது மிகுந்த கரிசனமும், அன்பும் செலுத்துபவர்களாக இருப்பார்கள்

கடகம் (Cancer)

குடும்பத்துக்கு ஏற்ற மாப்பிள்ளையாக வேண்டும் என்று நினைப்பவர்கள் கடக ராசிக்கார ஆண்களை தேர்வு செய்யலாம். வீட்டிலிருக்கும் மனைவியுடன் அதிகநேரம் செலவழிக்க வேண்டும் என்று எப்போதும் விரும்பக்கூடியவர்கள். வெளியே செல்வதைக் காட்டிலும், வீட்டிலேயே டேட்டிங் செய்ய விரும்புவார்கள். மிகவும் கனிவான மனம் படைத்த கடக ராசிக்கார ஆண்கள், சிறந்த தந்தையாகவும் இருப்பார்கள். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தி நல்ல முறையில் வளர்ப்பார்கள்.



தனுசு (Sagittarius)

இந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் மனைவிக்காக தன்னை மாற்றிக்கொள்ளக் கூடிய குணமுடையவர்கள். இதன்மூலம், அவர் கணவராக கிடைத்தது, தான் பெற்ற வரம் என்றுகூட நீங்கள் நினைப்பீர்கள். வித்தியாசமான ஐடியா மூலம் அவர்கள் செய்யும் செயல், உங்களுக்கு வியப்புடன் கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும். மிகவும் பாச்சக்கார கணவர்களாக தனுசு ராசிக்காரர்கள் இருப்பார்கள். மனைவிக்கு நேர்மையாக இருக்கும் தனுசு ராசிக்கார ஆண்களை தேர்தெடுத்தால், உங்கள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சி சிறகடிக்கும்.

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்கள் என்றாலே சிறப்பு வாய்ந்தவர்களாக தான் இருப்பார்கள். அதிலும், ஆண்களை பற்றி சொல்லவே தேவையில்லை. சிம்மராசிக்கார ஆண்களை நீங்கள் கணவராக பெற்றால், மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. வாழ்க்கையில் சந்தோஷத்தை விட என்ன வேண்டும்?. மனைவிக்கு மிகவும் உறுதுணையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். அப்படியான கணவரை பெறுவதை ஒருபோதும் தவறவிட்டுவிடாதீர்கள்!



மிதுனம் (Gemini)

இந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் மனைவி மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பார்கள். மனைவி மட்டுமே வாழ்க்கை என்று வாழக்கூடியவர்கள் மிதுன ராசியைச் சேர்ந்த ஆண்கள். சண்டைகள் வரும்போது கோபத்தை காட்டினாலும், உடனடியாக உங்களிடம் அன்பு செலுத்துவார்கள். அவர்களை சரியாக புரிந்துகொள்ளாமல் பழகினால், உங்களை விட்டு விலகிச் செல்லவும் வாய்ப்பு உண்டு. அவர்களுடைய முக்கியத்துவத்தை உணரும் வரை உங்களை அவர்கள் நாடமாட்டார்கள்.
Published by:Sivaranjani E
First published: