HOME»NEWS»LIFESTYLE»relationship zodiac signs who can forgive but wont ever forget esr ghta

இந்த 5 ராசிக்காரர்கள் மன்னிப்பாங்க, ஆனால் மறக்கமாட்டார்களாம்..அவர்கள் யார் யார் தெரியுமா?

வார்த்தையளவில் மன்னித்துவிட்டு, மனதளவில் எப்போதும் அவர்கள் மீது பகைமை வைத்திருக்கும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கே காணலாம்.

இந்த 5 ராசிக்காரர்கள் மன்னிப்பாங்க, ஆனால் மறக்கமாட்டார்களாம்..அவர்கள் யார் யார் தெரியுமா?
மாதிரி படம்
  • Share this:

இந்தியாவை பொறுத்த வரைக்கும் ஜோதிடமும், மக்களோடு வாழ்வியலும் பிரிக்க முடியாத ஒன்று. நம் நாட்டில் இறைவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சற்றும் குறைவில்லாமல் ஜோதிடத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு ராசிகளுக்கும் சில தனித்துவமான குணங்கள் இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஒருவருக்கு இயல்பாகவே மன்னிக்கும் குணாதிசயம் இருக்கும், சிலர் எப்போதும் மன்னிக்கவே மாட்டார்கள். ஆகையால், வார்த்தையளவில் மன்னித்துவிட்டு, மனதளவில் எப்போதும் அவர்கள் மீது பகைமை வைத்திருக்கும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கே காணலாம்.

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்கள், யார் செய்த தவறையும் அவ்வளவு எளிதாக மன்னிக்கமாட்டார்கள். நீங்கள், மகர ராசிகாரர்களுக்கு ஏதேனும் தவறு செய்திருந்தால் 2 மாதமோ அல்லது 2 வருடமோ கழித்து மன்னித்து விடுவார்கள். ஆனால், உங்கள் உறவில் எதற்காக விரிசல் ஏற்பட்டதோ, அதை உங்கள் உறவு தொடரும் வரை கொண்டுவந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை நீங்கள் புண்படுத்தியற்கான, காரணத்தை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் குத்திக்காட்டிக்கொண்டே இருப்பார்கள்.



மீனம் (Pisces)

மீன ராசிக்காரர்கள் போன்று உட்பகை வைத்திருப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குறிப்பாக, எந்த ராசிக்காரர்களும் மீன ராசிக்காரர்களின் இந்த குணாதிசயத்திற்கு ஈடு இணையாக வர முடியாது. தங்கள் வாழ்நாள் முழுவதும் பகையை மனதில் வைத்திருக்கக்கூடிய ஒரே ராசிக்காரர்கள் மீன ராசிக்காரர்கள். ஒரு சில இடங்களில் மன்னித்திருந்தாலும், அதனை எப்போதும் மறக்கமாட்டார்கள். மற்றவர்கள் தங்களுக்கு செய்த பிரச்சனையை மறந்ததுபோல் ஒருநாளும் மீன ராசிக்காரர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், சில சந்தர்ப்பங்களில் மீன ராசிக்காரர்கள் பேசும் வார்த்தைகள் உங்களை அசௌகரியமாக்கும்.



விருச்சிகம் (Scorpio)

மனிதநேயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். நீங்கள் அவர்களுக்கு ஏதேனும் தவறிழைத்திருந்தால், அதனை விருச்சிக ராசிக்காரர்கள் மன்னிக்கும் வரை தள்ளி இருப்பதே நல்லது. ஆனால் மன்னித்துவிடுவார்கள். இருப்பினும், நீங்கள் அவர்களுக்கு இழைத்த தவறுக்காக எப்போதும் மனவருத்தம் கொண்டிருப்பார்கள். மேலும், நீங்கள் செய்த தவறை அசிங்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்தாமல், முக பாவனைகளில் வெளிப்படுத்திவிடுவார்கள்

பெண்களை தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறீர்களா..? அதை மாற்ற உங்களுக்கான ஆலோசனை

தனுசு (Sagittarius)

எந்தவொரு தவறுக்காகவும் மனதளவில் மன்னிக்கும் எண்ணம் உடையவர்கள், ஆனால் அந்த சூழ்நிலையையும், மனிதர்களையும் மறக்க மாட்டார்கள். அதேபோல், இதுபோன்ற விஷயங்களை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி அவர்களின் நேரத்தை வீணாக்கிக் கொள்ள மாட்டார்கள். காதலராகவோ, நண்பராகவோ இருப்பதற்காக மட்டும் இதனை அவர்கள் செய்யமாட்டர்கள். ஏனென்றால், அவர்களின் குணாதிசயமே அப்படித்தான்.



மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்கள், நீண்டகால நட்பை தொடரவேண்டும் என்பதற்காக எந்தவோரு தவறையும் எளிதில் மன்னித்து விடுவார்கள். ஆனால், தாங்கள் செய்வதுதான் எப்போதும் சரி என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு நீங்கள் செய்த தவறை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி கொண்டு இருப்பார்கள். மேலும், அதே தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதை மேஷ ராசிக்காரர்கள் அறிவுறுத்துவார்கள்.
Published by:Sivaranjani E
First published: