உலகில் காதலிக்காத உயிர்களே இல்லை. சிலருக்கு காதல் மட்டுமே வாழ்க்கையாக இருக்கும். சிலரோ காதலை ஜஸ்ட் லைக் தட் ஆக நினைப்பார்கள். சிலர் காதலோடு கசிந்து உருகுபவர்கள். சில ராசிகாரர்களுக்கு காதல் ஒத்து வரும். சில ராசிகாரர்களுக்கு காதல் எல்லாம் செட்டே ஆகாது. காதலித்து செட் ஆகவில்லை என்றால் சிலர் சமத்தாக வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொள்வார்கள். எந்த ராசிக்காரர்கள் காதலில் கசிந்து உருகுவார்கள் யாருக்கு காதல் ஒத்து வரும் யாருடைய காதல் சக்சஸ் ஆகும் என்று இந்த உள்ளடக்கத்தில் பார்க்கலாம்.
காதலை யாரும் கற்றுக்கொடுத்து வருவதில்லை. காதல் உணர்வுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். எந்தக் காலத்துக் காதலாக இருந்தாலும், காதல் உண்மையானதாக இருந்தால் தடைகளை தாண்டி வெற்றி பெறும். காதல் திருமணத்தைத் தேர்வுசெய்கிறவர்கள், மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்தியாவில் திருமணங்களை தீர்மானிப்பதில் ஜோதிடம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, காதல் திருமணத்திற்கு வாய்ப்புள்ள சிறந்த ராசிக்காரர்களை உங்களுக்காக இங்கே நாங்கள் தொகுத்துள்ளோம்.
ரிஷபம் (Taurus) :
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் உறுதியானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.
பெரும்பாலும் அவர்களின் விருப்பம் போல் நடக்க நினைப்பார்கள். தாங்கள் நினைப்பது தான் சரி என்று வாதிடும் தன்மை இவர்களிடத்தில் உண்டு. சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்டவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். செவ்வாயும், சுக்கிரனும் அடுத்தடுத்த வீடுகளில் அமர்ந்திருப்பதே காதலுக்காகத்தான் என்று தோன்றும் அளவிற்கு காதலுக்காக உயிரையே கொடுப்பார்கள்.
மிதுனம் (Gemini) :
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலுடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது. புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் நேர்மையான சிந்தனை உடையவர்கள். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும்.
மகரம் (Capricorn) :
இந்த ராசிக்காரர்கள் தாங்கள் எப்போதும் நேசித்தவர்களுடனே இருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது. சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
தனுசு (Sagittarius) :
தனுசு ராசிக்காரர்களின் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் அல்லது மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர். குருவை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் காதலில் திறமைசாலியாக இருப்பார்.
மேஷம் (Aries) :
மேஷ ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் பிறரை காதலிப்பார்.செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு காதல் ரத்தத்திலேயே இருக்கும். பல காதல்களை பல சமயங்களில் பார்த்திருப்பார்கள். மேஷ ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள், அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் தங்கள் சிறந்த நண்பர் அல்லது அவர்களது நண்பர் வட்டத்தில் யாரையாவது காதலித்து அவர்களை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. திருமணம் என்பது உண்மையில் அனைவருக்கும் சிறப்பான ஒரு நிகழ்வு. திருமணத்திற்கு பிளான் செய்வது முதல் திருமண ஏற்பாடுகள் வரை, அனைத்தும் அட்டகாசமாக இருக்கும். அந்த வகையில் மற்ற ராசிக்கார்களும் காதலில் ஜொலிப்பார்கள் என்றாலும் அவர்களை விட மேலே குறிப்பிட்டவர்கள் காதலில் கெட்டிக்காரர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Love marriage, Rasi Palan, Zodiac signs