HOME»NEWS»LIFESTYLE»relationship zodiac sign combinations that make the worst siblings esr ghta

இந்த 2 ராசிக்காரர்கள் மட்டும் உடன்பிறப்புகளா பொறந்துட்டா.. சண்டையால் அந்த வீடே ரெண்டுபட்டுபோகும்..!

சில நேரங்களில் ஏற்படும் சிறு சிறு சண்டைகள் அவர்களின் கடைசி வயது வரை தொடரும் வாய்ப்புகளும் உண்டு.

இந்த 2 ராசிக்காரர்கள் மட்டும் உடன்பிறப்புகளா பொறந்துட்டா.. சண்டையால் அந்த வீடே ரெண்டுபட்டுபோகும்..!
மாதிரி படம்
  • Share this:

இரண்டு உடன்பிறப்புகளுக்கிடையிலான உறவு அற்புதமாகவும், சில நேரம் குறும்பாகவும் இருக்கும். பல நேரங்களில் உடன்பிறப்புகளுக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுமே தவிர அவர்களுக்கு இடையில் இருக்கும் பாசம் என்றுமே குறையாது. ஆனால் சில நேரங்களில் ஏற்படும் சிறு சிறு சண்டைகள் அவர்களின் கடைசி வயது வரை தொடரும் வாய்ப்புகளும் உண்டு.

வீட்டில் இதுபோன்ற தொடர் சண்டை சச்சரவுகள் நமது உடன்பிறப்புகளால் ஏற்படும் அப்பொழுது தேவையில்லாத சிக்கல்கள் குடும்பத்தில் ஏற்படும். ஜோதிடத்தின் உதவியுடன், மிக மோசமான உடன்பிறப்புகளை உருவாக்கும் ராசி சேர்க்கைகளை பற்றி இங்கே காண்போம்.

சிம்மம் மற்றும் விருச்சிகம் (Leo and Scorpio):-



சிம்ம ராசி அதிபதி சூரியன். சிம்ம ராசிக்காரர்கள் ஆளுமை மிக்கவர்கள். தன்னம்பிக்கையும், ஒருவர் மீதான ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடிய தன்மை மிக்கவர்கள். சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் (Leo and Scorpio) இருவரும் ஆதிக்கம் செலுத்தும், உணர்ச்சிமிக்க நபர்கள். அவர்களின் உறுதியான இயல்புகளுக்கு பெயர் பெற்ற இந்த ராசிக்கார்களுக்கிடையில் முன்கோபம் மிகவும் சிக்கலான ஒன்று. ஒருவர் பேசுவதை இன்னொருவர் செவிகொடுத்து கேட்பது கிடையாது இதனால் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். பல நேரங்களில் ஒருவருக்கு கிடைக்கும் பொருள் மற்றொருவருக்கு கிடைப்பதில்லை அதனால் ஒருவர் மற்றொருவர் மீது கோபப்பட்டு அந்த கோபம் நாள்பட சிக்கலாக மாறும்.



கடகம் மற்றும் தனுசு (Cancer and Sagittarius):-

கடக ராசிக்காரர்கள் அமைதியான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் பல உணர்ச்சிகளை தன்னகத்தே கொண்டு அமைதியின் சொரூபமாக இருக்கிறார்கள். இயல்பாகவே இவர்கள் உணர்ச்சிவசப்படும் சுபாவம் உடையவர்களாக இருக்கிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் கடக ராசி உடன்பிறப்புகளின் உணர்ச்சித் தேவைகளைப் புறக்கணிக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள், இதனால் இவர்கள் எப்போதும் தங்கள் உடன் பிறப்புகளை காயப்படுத்த முயல்வார்கள். இதனால்தான் இவர்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் நெருங்கி வரமாட்டார்கள்.

மேஷம் மற்றும் ரிஷபம் (Aries and Taurus):-

மேஷ ராசி அதிபதி செவ்வாய் பகவான். நெருப்பாகத் தகிக்கும் இவர்கள் துணிச்சலும், நம்பிக்கையும் மிக்கவர்கள் அதோடு போர் குணம், சுறுசுறுப்பு, எந்த ஒரு விஷயத்திலும் உணர்வு பூர்வமாக, உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். நெருப்பாக இருக்கக் கூடிய மேஷ ராசியினாரை தண்ணீர் போல் குளுமையாக இருக்கும் கடக ராசியினர் தணிக்கக் கூடியவர்கள். மேஷ ராசிக்காரர்கள் (Aries) வம்பு செய்யும் ஆத்மாக்கள். இவர்கள் சில நேரங்களில் வீட்டிலுள்ள சூழ்நிலையை முற்றிலும் தலைகீழாக மாற்றக்கூடிய மோசமான முடிவுகளை எடுக்கும் வல்லமை படைத்தவர்கள். மறுபுறம், ரிஷப ராசிக்காரர்கள் (Taurus) மிகவும் உறுதியானவர்கள் இவர்கள் தன்னிச்சையை சமாளிக்க முடியாதவர்கள். இந்த ராசி சேர்க்கைகள் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியான மோதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் அனுபவிக்கக்கூடும்.



மிதுனம் மற்றும் கன்னி (Gemini and Virgo):-

மிதுன ராசிக்காரர்கள் (Gemini) மற்றும் கன்னி ராசிக்காரர்கள் (Virgo) இருவரும் புத்திசாலிகள். இவர்கள் இருவரும் புத்திசாலிகள் என்பதால் பல நேரங்களில் இவர்கள் இருவருக்கும் முட்டிக் கொள்வது சகஜமானதுதான். பல நேரங்களில் மிதுன ராசிக்காரர்கள் பக்குவத்தோடு சிக்கல்களை எதிர் கொள்வார்கள் ஆனால் கன்னி ராசிக்காரர்கள் மீண்டும் மீண்டும் முன்னர் நடந்ததை நினைவில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் நோக்கத்துடன் சண்டையை உருவாக்குவார்கள். இதனால் வாதங்கள் தொடர்ந்து எழும் ஆகவே இரு ராசியினரும் ஒரு சமாதான முடிவிற்கு வர கடைசிவரை வாய்ப்பே இருக்காது. மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான். கல்வி, ஞானம், தனம் ஆகியவற்றை தரக் கூடியவர்.

துலாம் மற்றும் மீனம் (Libra and Pisces):-

துலாம் ராசியினர் சமாதானத்தை விரும்புபவர். காதல் மற்றும் கூடி வாழ்வதை விரும்புபவர். துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதி ஆவார். துலாம் ராசிக்கார்கள் வாழ்க்கையில், அமைதியை நாடுகிறவர்கள், ஆனால் மீன ராசிக்கார்களோ எந்த திட்டமும் இல்லாத மற்றும் கண் போன போக்கிலே தங்களது பயணத்தை பயணிக்க விரும்புபவர்கள். இது சில நேரங்களில் சமநிலையை சீர்குலைக்கலாம். மீன ராசி அதிபதி குரு. தீய விளைவுகளிலிருந்து விடுவிப்பவரும். முன்வினை பலன்களை அளிக்கக் கூடியவர். மீன ராசிக்காரர்களுக்கு சிறந்த அறிவுக்கூர்மை இருக்கும். பெரியவர்களில் சிலர் ஒருவரைப் பற்றி “அவன் ஒரு இடத்தில் தலையைக் காட்டினால், மற்றொரு இடத்தில் வாலைக் காட்டுவான்” என்று கூறினால் அவர்கள் பெரும்பாலும் மீன ராசிக்காரர்களாகவே இருப்பர்.

உங்கள் குழந்தையை சுய ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டுமா..? இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!

மகர மற்றும் கும்பம் (Capricorn and Aquarius):-

மகர ராசிக்காரர்கள் (Capricorn) நடைமுறையில் நல்லவர்கள்தான் ஆனால இவர்களுக்கு எல்லாவற்றையும் ஒரு பகுத்தறிவு லென்ஸுடன் சிந்திப்பார்கள். அதே வேளையில், கும்ப ராசிக்காரர்கள் (Aquarius) ஒப்பீட்டளவில் மிகவும் கற்பனை மற்றும் ஆக்கபூர்வமானவற்றை மேற்கொள்பவர்கள். மகர ராசிகள் (Capricorn) நம்பும் பல விஷயங்களுடன் கும்ப ராசிக்காரர்கள் உடன்படுவதில்லை. 'மகரத்தார் நகரத்தை ஆள்வார்” என்று கூறுவதுண்டு. இவர்களில் பெரும்பாலானவர்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மை உடையவர்கள். அதிலும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என்று 100 சதவீதம் தீர்க்கமாகப் பேசுவர்.

வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதில் திருமணமானவர்களோ, உடன்பிறந்தவர்களோ வெளியில் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் சிக்கல்கள் என்பது பொதுவானது தான். அந்த வகையில் மேற்சொன்ன ராசிக்காரர்கள் உடன்பிறந்தவர்களுடன் ஏற்படும் சிக்கல்கள் என்றும் தீர கூடியதுதான் .இதனை மென்மேலும் வளர்க்காமல் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழியை தேடுவது அவசியம். மேலும் சில பிரச்சனைகளுக்கு தீர்வை காண சிறந்த ஜோதிடரை அணுகி மற்ற தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Published by:Sivaranjani E
First published: