ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பழைய காதல் துணையுடன் மீண்டும் நட்பாகப் பழக முடியாது! ஏன் தெரியுமா..?

பழைய காதல் துணையுடன் மீண்டும் நட்பாகப் பழக முடியாது! ஏன் தெரியுமா..?

காதல் பிரிவுக்குப் பின் நட்பு

காதல் பிரிவுக்குப் பின் நட்பு

ஒரு உறவிலிருந்து முறிவு ஏற்படுகிறது எனில் அதிலிருந்து வெளியேற குறந்தது மூன்று மாதங்களாவது ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  பழையக் காதலியோ, காதலனனோ காதல் முறிவிற்குப் பிறகு மீண்டும் சந்தித்துக்கொள்கிறார்கள் எனில் அவர்களால் உண்மையாகவே நட்பு ரீதியில் அந்த உறவை கொண்டு செல்ல முடியுமா..? உங்கள் நண்பர்களிடம் பேசுவது பழகுவது போல் பழைய காதல் துணையுடனும் நட்பாகப் பழக முடியுமா? முடியாது.. ஏன் என்பதற்கு இதுதான் காரணம்.

  அமெரிக்காவில் நடைபெற்றக் கருத்துக்கணிப்பில் 70 சதவீதம் மக்கள் காதலில் பிரிவு என்றால் அப்படியே கடந்துவிடுவதே நல்லது என்று கூறியுள்ளனர். 15 சதவீதம் மக்கள் மட்டுமே பழைய காதல் துணையுடன் நட்பாகப் பழக முடியும் என்று கூறியுள்ளனர்.

  மேலும் சைக்கோ தெரபிஸ்ட் க்ரிஸ்டின் ஸ்காட் ஹட்சன் ஏன் நட்புடன் பழக முடியாது என்பதற்கு மூன்று காரணங்களையும் முன்வைக்கிறார்.

  அதில் முதல் காரணமாக அவர்களுடன் நீங்கள் பழகும் விதம் கடுமையான வலியை உண்டாகும் என்கிறார். அதாவது காதலித்த நாட்களில் அவருக்கு முதல் முக்கியதுவம் தந்திருக்கக் கூடும். ரொமாண்டிக்காக பழகியிருப்பார்கள். தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியிருப்பீர்கள். நட்பாக பழகினாலும் அந்த எதிர்பார்ப்புகள் உதிர்க்கத் தொடங்கும். அவர்கள் ஒரு இடைவெளியை தொடரும்போது அது பிரிவைத் தாண்டிலும் கூடுதல் வலியை உண்டாகும் என்கிறார்.

  இரண்டாவது காரணமாக ஒரு உறவிலிருந்து முறிவு ஏற்படுகிறது எனில் அதிலிருந்து வெளியேற குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் உடனே நீங்கள் நட்போடு பழகலாம் என ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறீர்கள் எனில் அந்த பிரிவு காயங்கள் அப்படியே இருக்கும். உங்களால் அந்த காதலிலிருந்து வெளியேறவும் முடியாது.

  மூன்றாவது காரணமாக அவர் முன் வைப்பது மீண்டும் இணைய மாட்டோமா? என்ற ஏக்கம் மீண்டும் உண்டாகும் என்பதே. இதனால் இருவரும் அந்த நட்பு உறவில் சௌகரியமான உணர்வு இருக்காது. ஒருவேளை துணைக்கு முற்றிலும் இணைப்பில் ஈடுபாடு இல்லையெனில் உங்கள் செயல்கள் மேலும் அவரைக் காயப்படுத்தும். எரிச்சலை உண்டாக்கும். எனவே பிரிவு ஒன்றே தீர்வு நட்பு ரீதியில் உறவைத் தொடரும் உடன்படிக்கைகளை எடுக்காதீர்கள் என திட்டவட்டமாகக் கூறுகிறார்.


  லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Love failure