வீட்டில் அலுவலகப் பணி செய்வது குடும்பத்துடன் நெருக்கத்தை அதிகரித்துள்ளது - ஆய்வு

கொரோனா ஊடரங்கால் ஐடி ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்து அலுவலகப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு நெருங்கிப் பழகவும் , நேரம் ஒதுக்கவும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப சங்கம் (TITA) நடத்திய கருத்துக்கணிப்பில் கண்டுபிடித்துள்ளது.

வீட்டில் அலுவலகப் பணி செய்வது குடும்பத்துடன் நெருக்கத்தை அதிகரித்துள்ளது - ஆய்வு
மாதிரி படம்
  • Share this:
கொரோனா ஊரடங்கு காரணமாக ஐ.டி துறை உள்ளிட்ட பலதுறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்துவருகின்றனர். அதாவது முன்பு அலுவலகப் பணி ஒரு பக்கம் இருந்தாலும் சென்று வரும் பயணத்திலேயே 2 - 3 மணி நேரம் செலவழிப்பார்கள். ஆனால் வீட்டிலேயே இருப்பது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவு செய்ய முடிவதாகக் கூறுகிறது.

150 புராஜெக்டுகளிலிருந்து 500 மாதிரிகளை எடுத்து கடந்த ஒரு மாத காலமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் வீட்டில் அலுவலகப் பணி என்பது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் மனநிலை என்ன என பல கோணங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.




இதிலேயே 57 சதவீதம் ஊழியர்கள் கொரோனா வைரஸிற்கு பயந்து இந்த சரியான வாய்ப்பை பயன்படுத்தத் தெரியாமல் விட்டுள்ளனர் என்கிறார் TITA வின் உலகத் தலைவர் சந்தீப் குமார் மக்தலா.

14 கேள்விகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கேட்கப்பட்டுள்ளன. தற்போது 90 % நிறுவனங்கள் இந்த தொடரும் ஊரடங்கால் WFH திட்டத்தை கூடுதல் நாட்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது. இதுகுறித்து கருத்து கேட்டதற்கு “ இதை நாங்கள் வரவேற்கிறோம். இது கூடுதலாக விரிவாக்கம் செய்தாலும் மகிழ்ச்சிதான்” எனக் கூறியதாக சந்தீப் கூறுகிறார்.

காதல் உறவில் இருக்கவேகூடாத குணங்கள் இவை: இன்றே மாற்றிக்கொள்ளுங்கள்..”தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனக் (National Institute of Mental Health and Neuro-Sciences) கருத்தின்படி ஐடி நிறுவனத்தில் வேலை செய்வோர்தான் அதிகமாக விவாகரத்து செய்வதாகக் கூறியது. ஆனால் இந்த WFH மீண்டும் தன் துணையுடன் இணைந்து வாழ பொன்னான வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. அப்படி கிட்டத்தட்ட 89% பேர் தங்கள் துணையுடனும், குடும்பத்தாருடனும் உறவை பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்” என்கிறார் சந்தீப்.



இருப்பினும் WFH -இல் இருக்கும் சிக்கல் என்றால் இணைய சேவையில் தடை, குழுப் பணியில் தடை, அவ்வபோது மின்சாரத் தடை போன்றவைதான் பெரும் சவால்களாக இருப்பதாக ஊழியர்கள் கூறியதாக சந்தீப் கூறுகிறார்.

அதேபோல் 62% பேர் WFH இல் வேலை பளுவே இல்லை என்றும் அதேசமயம் 48% பேர் 8 - 10 மணி நேரம் தொடர்ந்து வேலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதில் 29% பேர் 10 -12 மணி நேரம் வரை வேலை செய்வதாக கூறியுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் WFH என்பதால் இன்செண்டிவ் தரவில்லை என்றும் கூறியுள்ளனர்.

பணிச்சூழல் குறித்த கேள்வியில் 45% பேர் படுக்கை அறையில் அமர்ந்து வேலை செய்வதாகவும், 24% பேர் அதற்கென தனி அறை தயார் செய்து பணிபுரிவதாகவும் 22% பேர் மட்டுமே ஹாலில் அமர்ந்து பணி செய்வதாகவும் கூறியுள்ளனர்.
















லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading