வீட்டிலிருந்து பணியாற்றுவது வரமா? சாபமா? இந்திய இளம் தொழிலதிபர்களின் ட்விட்டர் கருத்து..!

வீட்டிலிருந்து பணியாற்றுவது வரமா? சாபமா? இந்திய இளம் தொழிலதிபர்களின் ட்விட்டர் கருத்து..!
வீட்டிலிருந்து பணியாற்றுவது வரமா? சாபமா?
  • Share this:
கொரானா பரவுதலை தடுக்க நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளன. இதனால் தலைமை அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர்.

இதற்கு ஆங்கிலத்தில் Work From Home என்று அழைப்பார்கள். தற்போது இந்த ஆங்கிலச் சொல் ஷார்ட் ஃபார்மில் WFH என்ற பெயரில் ஹேஷ்டேக்குடன் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு தனியார் நிறுவனத்தின் இயக்குநர்களும், தலைமை அதிகாரிகளும் தங்களுடைய அனுபவத்தை ட்விட்டரில் WFH என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் யார் யார் என்னென்ன சொல்கின்றனர் என்று பார்க்கலாம்.


குணால் ஷா இவர் கிரெட் மற்றும் ஃபிரீசார்ஜ் நிறுவனத்தின் இயக்குநர் : வீட்டிலிருந்து பணியாற்றுவதால் மீட்டிங் என்பது எத்தனை எளிமையாகிறது என்பதை நான் மட்டும் உணரவில்லை என நினைக்கிறேன். இதனால் நேரமிச்சம் வேலைத் திறன் அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.



ஸிரோதா நிறுவனரான நிதின் காமத் தன் ட்விட்டர் பக்கத்தில் “ நான் இதுநாள் வரையில் வீட்டில் பணிபுரியும் என் நண்பர்கள் ஜாலியாகப் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு என்ன டென்ஷன் இருக்கப் போகிறது என நினைத்துக் கொண்டிருந்தேன். என்னக் கொடுமை.. இது மிகவும் கடினமாக உள்ளது. நான் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக வேலை செய்கிறேன். அதிகம் சாப்பிடுகிறேன். தூக்கம் கிடையாது, உடற்பயிற்சிகள் இல்லை இதோடு நெகடிவ் செய்திகளால் கூடுதல் மன உளைச்சல். மீண்டும் நான் அலுவலப் பணிக்கே செல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.



அடுத்ததாக ஃபிளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் வீட்டிலிருந்து பணியாற்றுவது உறிஞ்சி எடுக்கும் வேலை என ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையாக sucks என குறிப்பிட்டுள்ளார்.



சச்சின் பன்சாலின் இந்த ட்விட்டர் கருத்துக்கு இன்னர் செஃப் நிறுவனர் ராஜெஷ் சஹானி கமெண்டில் சில டிப்ஸ் அளித்துள்ளார். அதில் இப்படி நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள 10 நிமிடங்கள் நடக்கலாம் அடுத்து 40 நிமிட வேலை மீண்டும் 10 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்யலாம். இப்படி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 8 மணி நேரம் வரை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.


First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்