• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெண்களே...ஆண்களின் கவனத்தை ஈர்க்க நீங்கள் செய்யும் இந்த விஷயங்களை அவர்கள் விரும்புவதில்லை.!

பெண்களே...ஆண்களின் கவனத்தை ஈர்க்க நீங்கள் செய்யும் இந்த விஷயங்களை அவர்கள் விரும்புவதில்லை.!

தனக்கு பிடித்தமானவரின் கவனத்தை ஈர்ப்பது என்பது காதலுக்கே உரிய தனித்துவமான அடையாளம். கண் சாடை முதல் மௌன மொழி வரை, அதன் வழியே கடத்தும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மனம் கவர்ந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான கருவியாக, அவர்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். உடை நேர்த்தி, ஹேர் ஸ்டைல் என ஏதாவதொரு வகையில் காதலியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என ஆண்களும், அதே யுக்தியை பெண்களும் பயன்படுத்துவார்கள். எல்லா நேரங்களிலும் தங்களின் யுக்தி சரியாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆண்களைப் போலவே பெண்களும் தங்களுக்கு பிடித்தமானவர்களின் கவனத்தை ஈர்க்க சில தவறுகளை செய்கிறார்கள். அவை என்னவென்று பார்க்கலாம்.

மனம் கவர்ந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான கருவியாக, அவர்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். உடை நேர்த்தி, ஹேர் ஸ்டைல் என ஏதாவதொரு வகையில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என முயற்சி செய்வார்கள்.

  • Share this:
தனக்கு பிடித்தமானவரின் கவனத்தை ஈர்ப்பது என்பது காதலுக்கே உரிய தனித்துவமான அடையாளம். கண் சாடை முதல் மௌன மொழி வரை, அதன் வழியே கடத்தும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மனம் கவர்ந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான கருவியாக, அவர்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். உடை நேர்த்தி, ஹேர் ஸ்டைல் என ஏதாவதொரு வகையில் காதலியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என ஆண்களும், அதே யுக்தியை பெண்களும் பயன்படுத்துவார்கள். எல்லா நேரங்களிலும் தங்களின் யுக்தி சரியாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆண்களைப் போலவே பெண்களும் தங்களுக்கு பிடித்தமானவர்களின் கவனத்தை ஈர்க்க சில தவறுகளை செய்கிறார்கள். அவை என்னவென்று பார்க்கலாம்.

தோற்றம் : காதலில், தோற்றம் மூலம் ஒருவரின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பது உண்மை. குறிப்பாக, பெண்களின் அழகுக்கு நிச்சயம் ஆண்கள் மயங்கிவிடுவார்கள். நேர்த்தியான உடை, ஹேர்ஸ்டைல் என தோன்றும்போது, தனக்கு விருப்பமானவரின் கவனத்தை பெண்கள் ஈர்த்துவிட முடியும். ஆனால், உங்களின் அழகே உங்கள் காதலரின் மனம் கவருவதற்கான தகுதியாக நீங்கள் எண்ணிக்கொள்ளக் கூடாது. தோற்றத்தை மட்டும் வைத்து உங்கள் மனம் கவர்ந்தவரை ஈர்த்துவிடலாம் என்றால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அந்த யுக்தி எடுபடாமல்போக வாய்ப்புகள் உள்ளது. அழகுபடுத்திக்கொள்வது உங்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது, தன்னம்பிக்கையை கொடுக்கிறது என்றால் அதனை செய்வதில் தவறில்லை. காதலை வெல்வதற்கான யுக்தியாக உங்கள் தோற்றத்தை நினைக்காதீர்கள்.

இயல்பாக இருங்கள் : இயல்பாக இருக்கும் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒருவேளை, யாரும் என்னை காதலிக்க முடியாது, யாருடைய அன்புக்கும் வீழமாட்டேன் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிக்கொள்ளாதீர்கள். இந்த அணுகுமுறை தவறான நபர்கள் அதிகமானோர் உங்களை பின்தொடர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏதாவதொரு சமயத்தில் உங்களை பின் தொடரும் நபரை விரும்பலாம் என நீங்கள் எண்ணும் சமயத்தில் அவர் வேறொருவரின் அன்புக்கு பாத்திரமானவாராக மாறியிருக்கலாம் அல்லது அவர் எதிர்பார்ப்புகள் உங்களிடம் நிறைவடைந்தவுடன் விட்டுவிலகிச்செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.

ஈகோ டெஸ்ட் : தனக்கு பின்னால் நிறைய ஆண்கள் வருவதுபோன்ற விளையாட்டுகளை விளையாட வேண்டாம். பொதுவாக, இப்படியான விளையாட்டு பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், அது ஆபத்தில் முடிய வாய்ப்புகள் உள்ளன. உங்களின் கவனத்தை ஈர்க்க அவர்கள் செய்யும் செயல்கள் விபரீதமானவையாகக்கூட இருக்கலாம் என்பதால், இதனை ஊக்குவிக்க வேண்டாம். ஆண்களின் ஈகோவை சீண்டும் விளையாட்டு ஒருபோதும் உங்களுக்கு நன்மையாக இருக்காது. நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் ஆண்கள், நீங்கள் இல்லை என்று கூறுவதை செய்து காட்டக்கூடியவர்களாக மாறுவார்கள். எதிர்மறையாக எடுத்துகொள்பவர்கள் தவறான செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இவையனைத்தையும் கடந்து நீங்கள் ஒருவரை விரும்பினால், உங்களின் அகங்காரத்துக்கு தண்டனை கொடுகிறேன் என்று கூறிவிட்டு பாதியிலேயே செல்ல வாய்ப்புகள் உள்ளது.

கவனிப்பு : அனைத்து நேரங்களிலும் உங்களை கவனித்துக்கொள்ள வேண்டும், குழந்தையைப்போல் தன்னை கொஞ்சி மகிழ வேண்டும் என நினைப்பது நல்லதல்ல. தன்னை விரும்பும் பெண்ணை குழந்தைபோல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஆண்கள் விரும்புகிறார்கள் என்றாலும், அவற்றின் எல்லை கடக்கும்போது வெறுப்பு எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பதின்பருவத்தில் இருக்கும் பெண் என்பதால், அதற்கேற்ப முதிர்ச்சியுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். தேவையான சமயங்களில் மட்டும் உங்கள் பார்ட்னரின் அன்பை பெற முயற்சிப்பது, உங்கள் மேல் அவருக்கு கரிசனத்தை அதிகப்படுத்தும். இல்லையென்றால் அதுவே அவர்கள் உங்களை விட்டு செல்வதற்கான வாய்ப்பாகவும் மாறும்.

போலியாக நடித்தல் : ஆண்களுக்கு போலியாக நடிப்பது பிடிக்காது. சுய சிந்தனையில் செயல்படும் பெண்களை மிகவும் பிடிக்கும். விளையாட்டாக இருப்பது, கோபமாக இருப்பது என எந்தமாதிரியான பெண்ணாக இருந்தாலும், அவர்களின் உண்மையான குணத்தை விரும்புவார்கள். மாறாக, நீங்கள் விரும்புவருக்கு பிடிக்கும் நபர்களைப்போல் நீங்களும் இருக்க வேண்டும் என்று நினைத்து, அவ்வாறு நடந்தால் நிச்சயம் அது எதிர்மறையான தாக்கத்தையே உங்கள் அன்பிற்குரியவர்களிடம் இருந்து பெற்றுத்தரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: