• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பாராட்டுக்கு ஏங்கும் பெண்கள்... கணவனை பிரிந்து செல்ல இதுதான் காரணமா..? ஆய்வு சொல்லும் தகவல் என்ன..?

பாராட்டுக்கு ஏங்கும் பெண்கள்... கணவனை பிரிந்து செல்ல இதுதான் காரணமா..? ஆய்வு சொல்லும் தகவல் என்ன..?

மாதிரி படம்

மாதிரி படம்

அன்புக்காக ஏங்கும்போது, பாலியல் ரீதியாக தங்களை கட்டாயப்படுத்துவதை விரும்பவில்லை என்றும், அதற்காக அவர்களை விட்டு பிரிவதாகவும் கூறியுள்ளனர்.

  • Share this:
காதலிக்காக ஏங்கும் இளைஞர்கள் ஒருபுறம் என்றால், கஷ்டப்பட்டு லவ் பண்ண பொண்ணும் விட்டுவிட்டு போய்விட்டாள் என புலம்பும் இளைஞர்கள் மற்றொருபுறம். ஆண்டு ஆண்டு காலமாக, தங்களுக்கு பிடித்த பெண்களை எப்படி லவ் பண்ண வைப்பது? லவ் பண்ண பொண்ணு விட்டுவிட்டுபோகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற மந்திரத்தை இளைஞர்கள் பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், நாட்டில் பல தேவதாஸ்கள் உலவிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் வெளியாகியிருக்கும் ஆய்வு ஒன்றில், பெண்கள் ஏன் துரோகம் செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் பார்னரிடம் இருந்து எதையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான விடை கிடைத்துள்ளது. கிளீடன் (Gleeden) என்ற டேடிங் செயலி இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. 11,000 பெண்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சர்வேயில் 84 விழுக்காடு பெண்கள் தெரிவித்த கருத்து என்னவென்றால், நாங்கள் செய்யும் செயலுக்கு காதலர் பாராட்டுவதில்லை, எங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என கூறியுள்ளனர். பாராட்டவில்லை என்பதால் இருவருக்கும் இடையே கோபம் ஏற்பட்டு, அவை சண்டையில் முடிவடைவதாகவும் 61 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.



காதல் திருமணத்தில் முடிவடையாததற்கு காரணம் என்ன? என கேட்டபோது, அந்த கேள்விக்கு பதில் அளித்த 77 விழுக்காட்டினர், காதலர் தங்களை பாராட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டையே முன்வைத்துள்ளனர். பதில் அளித்தவர்களில் 82 விழுக்காட்டினர், காதலர் எங்களை உண்மையாக மதிப்பதையும், பாராட்டுவதையும் நாங்கள் உணரவேண்டும்.

அப்படி உணரமுடியாதபோது, மற்றதைபற்றி நாங்கள் சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம் என கூறியுள்ளனர். 76 விழுக்காடு பெண்கள், தங்களின் திறமைகளை குறைத்து மதிப்பிடப்படுவதாகவும், திறமைக்கான பாராட்டு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.  உற்சாகப்படுத்துங்கள். எந்தவொரு சூழலிலும் உடன்இருப்பேன் என நம்பிக்கையை அவர்களுக்குள் ஏற்படுத்துங்கள். நிச்சயம் உங்கள் காதலி துரோகம் செய்யமாட்டர். இதுவே உங்கள் காதல் வெற்றிபெறுவதற்கான சூத்திரங்கள்.

உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை பொறுத்து உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

42 விழுக்காடு பெண்கள், அன்புக்காக ஏங்கும்போது, பாலியல் ரீதியாக தங்களை கட்டாயப்படுத்துவதை விரும்பவில்லை என்றும், அதற்காக அவர்களை விட்டு பிரிவதாகவும் கூறியுள்ளனர். கவர்ச்சியை நம்பி மட்டும் பழகும் நபர்களை, சிறிது காலத்தில் கண்டுபிடிக்கும்போது விலகிவிடுவதாகவும் பெண்கள் கூறியுள்ளனர்.



உடை, தோற்றம் உள்ளிட்டவற்றில் காதலர் கவனம் செலுத்தாமல் இருப்பது அல்லது பாராட்டாமல் தவிர்ப்பது ஆகியவை பெண்களை மிகவும் பாதிப்பதாக செக்ஸ் மார்ஷியல் தெரபி (Sex Marital Therapy) இதழ் கூறுகிறது. தங்களின் உடல் குறித்தும் நல்ல கருத்துகளை காதலர் அல்லது கணவர் கூற வேண்டும் என பார்னர் எதிர்பார்ப்பார்கள் என்றும், அதனை புரிந்துகொண்டு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனவும் செக்ஸ் மார்ஷியல் இதழ் கூறுகிறது.

பெரும்பாலான இளைஞர்கள் சினிமாவில் கதாநாயகன், கதாநாயகியை புரோபோஸ் செய்வதுபோல், நாமும் செய்ய வேண்டும் என டிரைப்பண்ணி தோல்வியை தழுவுகிறார்கள். முதலில், உங்கள் காதலியை நன்குபுரிந்து கொள்ளுங்கள். உங்கள் மீதான நன்மதிப்பு, நம்பிக்கை மட்டுமே காதலாக அவர்களுக்குள் முளைக்கும். சிறிய விஷயங்களுக்கும் மனதார பாராட்டுங்கள், டிப்ஸ்

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: