ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சிறந்த தலைமைப் பண்பு!

பெண்கள் எத்தனை பணி அழுத்தம் இருந்தாலும் ஊழியர்களை சோர்வடைய வைக்காமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கின்றனர்.

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சிறந்த தலைமைப் பண்பு!
அலுவலகம்
  • News18
  • Last Updated: August 28, 2019, 6:17 PM IST
  • Share this:
ஆண்களை விட பெண்கள், ஊழியர்களை பணியில் சுறுசுறுப்புடனும், ஈடுபாட்டோடும் வைத்துக் கொள்வதில் சிறந்து விளங்குகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்த விவாதம் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு தீர்வளிக்கும் விதமாக இந்த ஆய்வு சிறந்த பதிலை கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வானது ஆண்களை விட பெண்கள் தலைமை பதிவியை சிறந்த முறையில் கையாளுவார்கள் என்று கூறியுள்ளது. அதற்கு அவர்களிடம் சிறந்த பண்பு இருப்பதையும் கண்டறிந்துள்ளது.

கேலப் என்ற ஒரு பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் 27 மில்லியன் ஊழியர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள், ஊழியர்களை பணியில் சுறுசுறுப்புடனும், ஈடுபாட்டோட்டும் வைத்துக்கொள்வதில் சிறந்து விளங்குவதாக கண்டறிந்துள்ளது.
அவர்கள் அலுவலக சுற்றுச்சூழலை சிறப்பாக வைத்துக்கொள்கின்றனர். ஊழியர்களை நேர்மறை சிந்தனைகளுடன் ஊக்குவிப்பதிலும், பாராட்டுவதிலும் அலட்சியம் காட்டாமல் சிறப்பாக செய்வதே பெண்கள் தலைமையின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் ஆண்கள் சற்று பின்னோக்கி இருப்பதாகவும் அது , அவர்களின் குணம் மற்றும் சூழலைப் பொருத்து அமைவதாகவும் கூரப்படுகிறது.

பெண்கள் எத்தனை பணி அழுத்தம் இருந்தாலும் ஊழியர்களை சோர்வடைய வைக்காமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கின்றனர். இந்த விஷயத்தில் அனைத்து தலைமை வகிக்கும் பெண்களும் ஒரேமாதிரி செயல்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக கார்பரேட் கலாச்சாரத்தை பொருத்தவரை ஊழியர்களை பணியில் ஈடுபாட்டோடு வைத்துக்கொள்வதில்தான் அந்த நிறுவனத்தின்வெற்றி பார்க்கப்படுகிறது. அதை பெண்கள் சிறப்பாக செய்வதாலேயே இந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஊழியர்களின் உறவை சரியான முறையில் கொண்டு செல்வதிலும் , அவர்களுடைய அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் வழங்குதல், அக்கறை, அவர்களின் தேவைகளை புரிந்துகொள்ளுதல் என அனைத்திலும் சிறந்து விளங்குவது அவர்களின் நிலையான பண்புகளாக இருக்கின்றன என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவை அந்நிறுவனம் வெளியிட்ட போது அதை ஊழியர்களில் 87 சதவீதம் பேர் ஒப்புகொண்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது ஆய்வு.

பார்க்க :

விவாகரத்து கேட்ட மனைவி... மனமுடைந்த கணவன் தற்கொலை...


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading