ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கணவரின் சட்டை வாசனையை நுகர்ந்தால் பெண்களின் மன அழுத்தம் போய்விடுமா..? வித்தியாசமான ஆய்வு வெளியீடு..!

கணவரின் சட்டை வாசனையை நுகர்ந்தால் பெண்களின் மன அழுத்தம் போய்விடுமா..? வித்தியாசமான ஆய்வு வெளியீடு..!

பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்க கணவரின் சட்டை வாசனை போதும்

பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்க கணவரின் சட்டை வாசனை போதும்

பெண்களுக்கு அதிகமாக ஸ்ட்ரெஸ் ஆகும் போது, அவர்களது பார்ட்னரின் சட்டை வாசத்தை முகர்ந்தால் போதுமாம். ஸ்ட்ரெஸ் குறைந்து, அமைதியாகி விடுவார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்று பாடல் இருக்கிறது, கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன. பெண்களின் வாசம் பற்றி கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள், வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆண்களுக்கெல்லாம் எதுவும் இல்லையா என்று ஆண்களுக்கு பெரிய மனக்குறையே உண்டு. இந்த ஆய்வைப் பற்றி தெரிந்து கொண்டால் அந்தக் குறை நீங்கி விடும். பெண்களுக்கு அதிகமாக ஸ்ட்ரெஸ் ஆகும் போது, அவர்களது பார்ட்னரின் சட்டை வாசத்தை முகர்ந்தால் போதுமாம். ஸ்ட்ரெஸ் குறைந்து, அமைதியாகி விடுவார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பெண்ணுக்குரிய வாசம் போல, ஆண்களுக்கு, வாசம் இருக்கிறதா என்பதை பற்றி பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

ஆணின் வாசம் (Scent of a Man) என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு பெண் மன அழுத்தம் அல்லது பதற்றத்தில் அல்லது டென்ஷனாக இருந்தால், அது அவர்களை அமைதியாக்கும். அதாவது தன்னுடைய பார்ட்னரின் ஷர்ட் அல்லது டி-ஷர்ட்டை ஒரு பெண் நுகரும் போது, பெண்ணின் மன அழுத்தம் குறைகிறது என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. அதே நேரத்தில், முன்பின் அறியாத ஒரு ஆணின் வாசம், கார்ட்டிசால் அளவை அதிகரிக்கிறது என்பதையும் இந்த ஆய்வு ஹைலைட் செய்திருக்கிறது!

பெர்சனாலிட்டி மற்றும் சமூக உளவியல் ஜர்னலில் இந்த ஆய்வை வெளியிட்டுள்ள மூத்த ஆய்வாளரான மார்லிசி ஹோஃபார், “தன்னுடைய கணவன் ஊரில் இல்லாத போது அவனுடைய சட்டையை அணிந்து கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு இருக்கிறது. அதேபோல கணவன் படுத்துத் தூங்கும் இடத்தில் தூங்குவார்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்று பெண்களுக்குத் தெரியாமலேயே இந்த பழக்கம் பலரிடமும் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Also Read : கணவர் உங்களை சீட் பண்றாருனு நினைக்கிறீங்களா..? கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ...

96 எதிர் பாலின தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு

96 தம்பதிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஆண் பெண் என்று, 96 தம்பதிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் கலந்து கொண்ட 96 ஆண்களுக்கு ஒரு புதிய டிஷர்ட் ஒன்று கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த டிசர்ட்டை 24:00 மணிநேரம் அணிய வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த 24 மணிநேரத்தில் அவர்கள் எந்த விதமான நறுமணப் பொருட்களும், வாசனை திரவியங்களும் எதையும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் சிகரெட் மற்றும் ஒரு சில உணவுகளை தவிர்ப்பதற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

பிறகு, ஆய்வில் கலந்து கொண்ட பெண்களிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெண்களுக்கு அவர்களின் ஸ்ட்ரெஸ் அளவை தெரிந்து கொள்ளவும், உடலில் எவ்வளவு கார்டிசால் இருக்கிறது என்பதை கண்டறியவும் பின்வரும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள்

பெண்களுக்கு, அவர்களின் பார்ட்னர் அணிந்திருந்த டிஷர்ட் கொடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, ரேண்டமாக வேறு நபர்கள் அணிந்த டிஷர்ட் வழங்கப்பட்டது.

அதை அணிந்தது அந்தப் பெண்ணின் பார்ட்னர் தானா அல்லது வேறு ஒரு ஆணா என்று ஒவ்வொரு பெண்ணும் கண்டுபிடிக்க வேண்டும்.

யாருக்கு யாருடைய டிஷர்ட் கொடுக்கப்பட்டது என்று பெண்களுக்கு தெரியாது. சிலருக்கு அவருடைய பார்ட்னரின் டிஷர்டே வந்தது, சிலருக்கு மாறி வந்தது.

இந்த நேரத்தில் அவர்கள் கணிதத் திறன் எப்படி இருக்கிறது என்ற திறனும் பரிசோதிக்கப்பட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு பெண்ணிடமும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணிகள் மற்றும் மன அழுத்தம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பரிசோதனை செய்யும் கேள்விகளும் கேட்கப்பட்டன. உமிழ் நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கார்டிசால் அளவும் எவ்வளவு இருக்கிறது என்று பதிவு செய்யப்பட்டது.

பிடித்த ஆணின் வாசம் vs முன்பின் தெரியாத ஆணின் வாசம்

ஆண்களை விட பெண்களுக்கு நுகர்வு திறன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களால் கண்டுபிடிக்க முடிய பிடிக்க முடியாத வாசனைகளை பெண்களால் எளிதாக கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னுடைய பார்ட்னரின் ஷர்ட்டைக் கண்டுபிடித்து, அதனை நுகர்ந்த பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் குறைவாகவும், தனக்கு முன்பின் அறியாத ஒரு ஆணின் சட்டையை நுகர்ந்த பெண்ணுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகவும் இருப்பது இந்த சோதனையில் பதிவாகியது.

Also Read :  விராட் முதல் ஷாருக்கான் வரை... மன அழுத்தம் குறித்து பிரபலங்களின் ஓப்பன் டாக்..!

தனது பார்ட்னருடைய டிஷர்ட்டை கண்டுபிடித்த பெண்களுக்கு, கார்டிசால் அளவு குறைவாக இருந்தது. இதன் மூலம் தன்னுடைய பார்ட்னரின் வாசம், ஒரு பெண்ணின் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கும் தன்மை கொண்டது என்பதை ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.

சோதனையில், தன்னுடைய பார்ட்னரின் ஷர்ட் கிடைக்காத பெண்கள், இந்த பரிசோதனை முழுவதுமாகவே முன் பின் தெரியாத ஆணின் சட்டையை மட்டுமே நுகர்ந்து பார்த்த பெண்களுக்கு பரிசோதனை காலம் முழுவதுமே கார்டிசால் அளவு அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Life Partner, Stress