ஒரு உறவை நீண்ட நாட்களுக்கு தக்க வைக்க செக்ஸ் மட்டும்தான் அடிப்படை என நினைக்கிறீர்களா..?

ஒரு உறவை நீண்ட நாட்களுக்கு தக்க வைக்க செக்ஸ் மட்டும்தான் அடிப்படை என நினைக்கிறீர்களா..?

மாதிரி படம்

செக்ஸ் இல்லாமலும் ஒரு உறவை ஆத்மார்த்தமாகவும், நெருக்கமாகவும், அர்த்தமுடையதாகவும் மாற்ற முடியும். செக்ஸ் மட்டுமே ஒரு உறவின் பிடிமானத்திற்கான முடிவு அல்ல.

  • Share this:
கேள்வி : நான் சந்திக்கும் பெண் என் பாலியல் ஈர்ப்பை பயன்படுத்தி அவளுடனே என்னை வைத்திருக்க நினைக்கிறாள். இதனால் நான் அந்த பெண்ணைக் கண்டால் எதிர் திசையில் ஓடி விடுகிறேன். பாலியல் ஆசைகளைப் பயன்படுத்தி ஒரு விஷயத்தை பெறவோ அல்லது இழக்கவோ முடியாது அதேசமயம் பாலியல் விருப்பம், பாலியல் உணர்வு என்பது மற்றவர்களுடனும் சமமாகப் பகிர்ந்துகொள்ளும் விஷயம் என்பதை எவ்வாறு கூறுவது..? பதில் சொல்லுங்கள்.

பதில் : நீங்கள் சொல்வது மிகவும் சரிதான். பாலியல் உணர்ச்சி என்பது இரு பக்க நாணயம் போன்றது. பாலியல் உணர்ச்சியைக் கொண்டு ஒருவரை தக்க வைப்பது முடியாத காரியம். அதற்கு செக்ஸ் எந்தவித கியாரண்டியும் கிடையாது. இருப்பினும் பெண்கள் பலர்..ஏன் ஆண்கள் கூட சில சமயங்களில் பாலியல் உணர்ச்சியைப் பயன்படுத்துதல் அல்லது அவர்களை தக்க வைக்க செக்ஸில் தீவிரமாக செயல்படுவது என இருக்கின்றனர்.

அதேபோல் பல பெண்கள் காதலில் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொண்டால் அந்த ஈர்ப்பால் அவன் தன்னைவிட்டு விலக மாட்டான் என கற்பனை செய்துகொள்கின்றனர். இதனால் பல பெண்கள் தவறான முடிவால் வாழ்க்கையே இழக்கின்றனர். இந்த கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்ற வேண்டும். இதை ஒழித்துக்கட்டிவிட்டால் செக்ஸ் மீதான பழைமைவாத கருத்துக்களும், பெண்கள் மீது சுமத்தப்படும் தவறான பாலியல் ஆசைகளும் ஒழிந்துபோகும். என்னைப் போன்றவர்கள் பலரும் இதை மாற்றத்தான் இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார்கள்.



அதேபோல் பல உறவுகளில் செக்ஸ்தான் பிரிவுக்கு பிரதான காரணமாகவும் இருக்கிறது. ஆனால் பலர் செக்ஸ்தான் ஒரு உறவின் வெற்றிக்கான காரணம் என கருதுகின்றனர். ஆனால் செக்ஸ் இல்லாமலும் ஒரு உறவை வெற்றியடையச் செய்ய முடியும் என என்னால் சவால்விட முடியும். செக்ஸ் இல்லாமலும் ஒரு உறவை ஆத்மார்த்தமாகவும், நெருக்கமாகவும், அர்த்தமுடையதாகவும் மாற்ற முடியும். செக்ஸ் மட்டுமே ஒரு உறவின் பிடிமானத்திற்கான முடிவு அல்ல. மற்றவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டும் தன் துணையுடன் மகிழ்ச்சியாக வெற்றிகரமான வாழ்க்கை வாழ்பவர்கள் பலர் உள்ளனர்.

சமூகத்தில் செக்ஸ் குறித்த ஆசைகள், விருப்பங்களை வெளிப்படையாகப் பேசினால் தகாத உறவுகளை ஒழிக்க முடியுமா..?

செக்ஸைப் பயன்படுத்தி தக்க வைக்க நினைப்பதில் தனிப்பட்ட சில காரணங்களும் இருக்கலாம். சிலர் செக்ஸ் மட்டும்தான் உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அவர்களை மிகவும் நம்பும், அன்பு செலுத்தும் நபரிடம் மட்டும்தான் உறவு வைத்துக்கொள்வார்கள் என நினைக்கின்றனர்.

டெமிசெக்ஸுவல் அதாவது பாலின ஈர்ப்பு மட்டுமே கொண்டவர்களால் பாலியல் நெருக்கத்தை கொடுக்க முடியாது. இருப்பினும் அவர்கள் அதீத காதல், அன்பு, எமோஷ்னல் என சராசரி தம்பதிகளைப் போல் வாழ்கின்றனர். அவர்களின் உறவில் இருப்பது காமம் அல்ல நம்பிக்கை மட்டும்தான் அடித்தளமாக இருக்கிறது. ஆனால் அது அவரவர் தனிப்பட்ட தேர்வுகள்.



ஒருவேளை உங்களுக்கும் செக்ஸ்தான் அதிமுக்கியம். அது இல்லாமல் இருக்க முடியாது. ஒரு உறவின் பிடிப்பே செக்ஸ்தான் என நீங்களும் நினைத்தால் உங்களைப் பொருத்தவரை அது சரிதான். ஆனால் அப்படி இல்லாமல் அதுவும் சாதாரண விஷயம்தான் என கடந்து செல்லும் நபர் எனில் நீங்கள் சொன்னதுபோல் அப்படிப்பட்ட நபர்களைப் பார்த்தால் எதிர் திசையில்தான் ஓடியாக வேண்டும். உங்களு ஏற்ற துணையை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் சொன்னதுபோல் செக்ஸை பயன்படுத்தி ஒரு விஷயத்தை பெறவோ, இழக்கவோ முடியாது. செக்ஸ் வைத்துக்கொள்வதால் உங்கள் மதிப்பை இழக்கச் செய்யாது. அதேசமயம் மற்றவர்களை ஈர்க்கவும் செய்யாது. அது மட்டுமே ஒரு உறவுக்கு தகுதி கிடையாது. ஒரு உறவைத் தாண்டி உங்களுக்கு என்ன தேவை என்பதில் நேர்மையாக இருங்கள். அது உணர்ச்சிகரமான நெருக்கமாக இருக்கலாம், செக்ஸாக இருக்கலாம் அல்லது இரண்டுமே கலந்ததாக இருக்கலாம். அப்படி உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு துணையை கண்டறியுங்கள். மற்றவர்களுக்காக உங்கள் ஆசைகளை கட்டுப்படுத்துவது முற்றிலும் தேவையற்ற ஒன்று. அது யாருக்கும் பயன்படாது. எனவே வாய் திறந்து பேசுங்கள். நேர்மையாக இருங்கள். ஆகச்சிறந்த வாழ்க்கையை வாழுங்கள்.

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: