நெருங்கிப் பழகும் நபரிடம் மட்டும்தான் காதல் ஈர்ப்பு வருகிறதா..? இது இயல்பான உணர்வுதானா..? 

மாதிரி படம்

நீங்கள் அனுபவிக்கும் இந்த உணர்வு இயல்பானதுதான். இதை நினைத்து வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை.

  • Share this:
கேள்வி : எனக்கு யாரைப் பார்த்தாலும் ரொமாண்டிக் ஈர்ப்பு வருவதில்லை.. நான் யாரையேனும் காதலிக்க நினைத்தாலும் அவர்கள் நல்ல நட்பாக பழகிய பிறகே காதல் ஆசை தோன்றுகிறது. அப்படியே தோன்றினாலும் காதலை வெளிப்படுத்த மிகவும் சிரமப்படுகிறேன். ஏன் மற்றவர்களைப்போல் என்னால் ஒரு பெண்ணை பார்த்ததும் ஈர்ப்பு வரவில்லை, காதலை வெளிப்படுத்த முடியவில்லை..? 

பதில் : நீங்கள் அனுபவிக்கும் இந்த உணர்வு இயல்பானதுதான். இதை நினைத்து வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒருவருடன் உறுதியான எமோஷ்னல் நெருக்கம் கிடைத்தபிறகு அவர்கள் மீது வருவது பொதுவான பாலியல் கண்ணோட்டம்தான். இதை ஆங்கிலத்தில் டெமிசெக்‌ஷுவாலிட்டி (demisexuality) என்று அழைப்பார்கள்.

உதாரணத்திற்கு பெரும்பாலானோர் தொடர்ச்சியான பாலியல்\ ஈர்ப்பு மற்றும் ரோமாண்டிக் அட்ராக்‌ஷனை பார்ப்போர் மீதெல்லாம் உணர்ந்திருக்கலாம். அவர் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், பழகினாலும், பழாகாவிட்டாலும் ஒருவரை பார்த்ததும் அவ்வாறான அனுபவத்தை பெற்றிருக்கக் கூடும். இது முற்றிலும் உடலைப் பார்த்து ஈர்க்கப்படுவது. ஆனால் டெமிசெக்‌ஷுவல் நபர்களுக்கு முன்பின் தெரியாத, எமோஷனலாக நெருக்கமாகாத நபர்கள் மீது இவ்வாறான ஈர்ப்பு வராது.இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால்...உதாரணத்திற்கு உங்கள் நண்பர்கள் திரையில் பார்க்கும் நடிகையின் ஹாட் புகைப்படங்களைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தால், அவர்களை பார்த்தால் என்னவெல்லாம் தோன்றுகிறது என பேசிக்கொண்டிருக்கையில் அவர்களின் உணர்ச்சியை உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. நண்பர்களுடன் அந்தக் கலந்துரையாடலில் உங்களை தொடர்புபடுத்திக்கொள்ள இயலாது.

Sexual Wellness : பைசெக்ஸுவலாக இருப்பவர் திருமணம் செய்துகொள்ளலாமா..?

அவர்கள் டேட்டிங் ஆப்பில் தெரியாத பெண்களை தேர்வு செய்து டேட்டிங் செய்வதுபோல் உங்களால் செய்ய இயலாது. இதுபோன்ற விஷயங்கள்தான் உங்களுக்கும் உங்கள் வயது நபர்களுக்குமான வித்தியாசமாக இருக்கும். எதுவாயினும் இதை நினைத்து வருத்தப்பட்டு உடைந்துபோகும் அளவிற்கான பிரச்னை இல்லை. இந்த கலாச்சாரத்துடன் நீங்களும் ஒன்றிப்போக வேண்டும் என்பது அவசியமில்லை. அது தனி நபர் விருப்பம். அதேசமயம் இதுதான் நான் என்று உங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டு வாழ்வதும் அவசியம். உங்களின் இந்த தனிச்சிறப்பை நினைத்து பெருமை கொள்ளுங்கள்..இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை...

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: