உடலுறவை திட்டமிடுவது ஏன் முக்கியம்..? தெரிஞ்சிக்கோங்க..

காட்சி படம்

ஒரு சந்திப்பை திட்டமிடுவது போல செக்ஸ் செய்வதை திட்டமிடுவதும் உங்கள் பாலியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்கும்.

 • Share this:
  ஒரு உறவின் பாலியல் வாழ்க்கை அந்த உறவையே வலுப்படுத்த உதவும். உடல் மற்றும் மன நலனைப் போலவே, ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையும் உங்கள் உறவுகளில் அதிக ஆனந்தத்தையும் நல்லிணக்கத்தையும் தரும். ஆனால் அதிகரித்து வரும் பல வாழ்க்கை முறை மாற்றங்களால் பல விஷயங்கள் உங்கள் செக்ஸ் இயக்கத்தை பாதிக்கிறது. உடலுறவை எதோ 5 அல்லது 10 நிமிட வேலையாக பார்க்கிறார்கள். ஆனால், அது தவறு. உடலுறவுக்கு நேரமோ, காலமோ இவ்வளவு தான் என்று வரையறை இல்லை. இதனால் இன்றைய காலகட்டத்தில், செக்ஸ் வைத்துக்கொள்வதையும் திட்டமிடுவது அவசியம்.

  உடலுறவை திட்டமிடுவது ஏன் முக்கியம்?  : நம் வாழ்வில் நேரத்தை பராமரிப்பதற்காக நாம் எதிர்கொள்ளும் போராட்டத்தை பற்றி அனைவரும் அறிவோம். பரபரப்பான இந்த வாழக்கையில் நாம் சில வேலையை மறந்துவிடுகிறோம். மேலும் சில விஷயங்களை செய்வதற்கான நேரத்தை ஒதுக்குவதும் பிஸி வாழக்கையில் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அதேபோல, இதுபோன்ற சமயங்களில் பாலியல் வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குவதும் மிகவும் கடினமாக இருக்கும். செக்ஸ் உணர்ச்சி மற்றும் உற்சாகம் இருந்தாலும், நீண்ட காலம் ஒருவருக்கொருவர் தொடர அவை போதுமானதாக இல்லை.

  ஒரு சோர்வடைந்த நாளுக்குப் பிறகு தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டாலும், அவர்கள் அதை விரைவாகப் செய்யவே முயற்சிக்கிறார்கள். உங்கள் உறவைப் பேணுவதற்கு ஒரு ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை பராமரிப்பது முக்கியம். செக்சில் உணர்ச்சி அம்சத்தை மட்டுமே நம்புவது போதாது. ஏனெனில் தனிநபர்களிடையே ஈர்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதில் பாலியல் முக்கிய பங்கு வகிக்கிறது. உறவுக்கு செக்ஸ் எப்போதும் மிகவும் முக்கியமானது என்பதால் உங்கள் துணையுடன் உட்கார்ந்து, உங்கள் காலெண்டர்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் தேதிகளை திட்டமிடுங்கள். இதை செய்வதற்கு அவ்வளவு உற்சாகமாகத் இருக்காது. ஆனால் உங்கள் உறவில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

  உங்கள் காலெண்டரில் ஒரு தேதியையும் நேரத்தையும் குறிப்பது உங்கள் இருவருக்கும் விவரிக்க முடியாத ஆர்வமுள்ள அவசரத்தை, ஒருவருக்கொருவர் நேசிக்கக் காத்திருக்கும் உணர்ச்சியை பெறுவீர்கள். ஒரு திட்டமிட்ட செக்ஸ் நிகழ்வின் ஆர்வம் உங்களுக்கு ஒரு தீவிர அட்ரினலின் வேகத்தை அளிக்கிறது. ஒரு திட்டமிடப்பட்ட செக்ஸ் நிகழ்விலிருந்து நீங்கள் பெறும் திருப்தி உங்கள் பாலியல் வாழ்க்கையை உடனடியாக உயர்த்தும். இது முதலில் வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் திட்டமிடப்பட்ட தேதிகளைத் தொடர முயற்சிப்பது உங்களை மீண்டும் அதன் பாதையில் கொண்டு செல்லும்.

  Also Read : செக்ஸ் இல்லாமல் நம்மால் வாழ முடியாதா ?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: