Home /News /lifestyle /

டேட்டிங் செய்யும் போதும் பாலின சமத்துவம் ஏன் அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்

டேட்டிங் செய்யும் போதும் பாலின சமத்துவம் ஏன் அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்

டேட்டிங்

டேட்டிங்

ஆண் பெண் உறவில், ஆண் இப்படி நடக்க வேண்டும் பெண் இப்படி நடக்க வேண்டும் என்று பழங்காலத்தில் வலியுறுத்தப்பட்ட படி இன்றும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. சமீபத்தில் Bumble என்ற ஒரு ஆன்லைன் டேட்டிங் தளம் இதைப்பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஒருவரை பிடித்திருக்கிறது அவரை காதலிக்கலாம் என்பது போல தோன்றுகிறது; ஆனால் அந்த ஆணோ அல்லது பெண்ணோ எனக்கு பொருத்தமானவராக இருப்பாரா, அவரைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை என்ற குழப்பத்தை தீர்ப்பதற்கு அவருடன் டேட்டிங் செய்வது உதவும்! அதே போல, நீண்ட நாட்களாக ஒருவரை தெரியும், பழக ஆசை அல்லது ஒருவரை பார்த்த உடனே பிடித்திருக்கிறது ஆனால் அந்த ஆண் / பெண்ணைப் பற்றி எதுவுமே தெரியாது இன்னும் புரிந்து கொள்ள விருப்பம் என்ற கட்டத்தில் இருப்பவர்கள், டேட்டிங் செய்வது பற்றி சிந்திக்கலாம்.

ஒருவருடன் டேட் செய்து அவரைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சித்து இருவருக்கும் பரஸ்பரம் பிடித்து இருக்கும் பொழுது காதல், திருமணம் என்று அடுத்தடுத்து கட்டத்திற்கு செல்லலாம். ஆண் பெண் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு காதல் உதவியாக டேட்டிங் உதவியாக இருக்கிறது. ஆனால், டேட்டிங் செய்யும் காலத்தில் ஒரு சில முக்கியமான விஷயங்களை ஆண் பெண் இருவருமே மறந்து போகின்றனர். தனக்கு பிடித்தது பிடிக்காதது தன்னுடைய ஆசை கனவு லட்சியம் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொள்பவர்கள் பாலின சமத்துவத்தை டேட்டிங்கின் ஆரம்ப காலத்திலேயே பேச வேண்டும்.இதைப் பற்றி ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

பாலின சமத்துவம் அதாவது ஜெண்டர் ஈகவாலிட்டி என்பது பற்றி இருவரின் கருத்தையும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வது மூலம், பின்னாளில் தேவையில்லாத குழப்பமும், கோபமும், மனவருத்தமும் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.



இந்தியாவில் டேட் செய்பவர்களின் மனநிலை :

இந்தியா எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலுமே டேட்டிங், காதல், திருமணம், உறவுகள் என்று வரும்போது இன்னும் பாரம்பரியமாக பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது. எனவே ஆண் பெண் இருவருக்கும் ஒத்த மனநிலை இல்லாமல் போனால் அது உறவில் சிக்கலை ஏற்படுத்தி, பிரிவுக்கு வழிவகுக்கிறது.

டேட்டிங்கில் எதிர்பார்ப்பு :

ஆண் பெண் உறவில், ஆண் இப்படி நடக்க வேண்டும் பெண் இப்படி நடக்க வேண்டும் என்று பழங்காலத்தில் வலியுறுத்தப்பட்ட படி இன்றும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. சமீபத்தில் Bumble என்ற ஒரு ஆன்லைன் டேட்டிங் தளம் இதைப்பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது.

உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்..? தெரிந்துகொள்ளுங்கள்

இதில் ரொமான்டிக்கான உறவுகள் காதல் என்று வரும்போது பாலின எந்த பாலினத்தை சேர்ந்தவர்களோ, அதற்கு ஏற்றார் போல நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 82% தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் ஆய்வில் கலந்து கொண்ட நான்கில் ஒரு நபர், பெண்கள் தங்கள் ஆர்வம், விருப்பத்தையும், உணர்ச்சிபூர்வமான அட்டாச்மென்ட் அல்லது தேவையையும் வெளிப்படையாக காட்டக்கூடாது என்று கூறி இருக்கின்றனர்.

இதில் வேடிக்கையான ஆனால் கிட்டத்தட்ட எதிர்பார்த்த ஒரு உண்மை என்னவென்றால், 39 சதவிகித பெண்கள் (மூன்றில் ஒரு பெண்ணுக்கு மேல்) தான் டேட் செய்யும் ஆணை தன்னைவிட ஒரு படி மேலே உயர்ந்ததாகவும் அவரை வசதியாகவும் உணரச் செய்வதற்கு தன்னுடைய பிஹேவியரை மாற்றி இருக்கிறார்.



டேட்டிங் செய்தால் சிக்கல்கள் தான் அதிகம் :

கடந்த காலத்தில் இருந்ததைப் போன்ற பாலியல் ரீதியான எதிர்பார்ப்புகள் நாம் யார் என்பதை மறைத்து, மற்றொரு நபராக மாறச் செய்கிறது அல்லது நடிக்க வைக்கிறது என்பதை 66% நபர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் டேட்டிங் செய்வது உறவுகளை புரிந்து கொள்ள உதவும் என்ற பரவலான ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்த ஆய்வில் கலந்துகொண்ட 60% நபர்கள் டேட்டிங் செய்வது உறவுகளை அதிக ஸ்ட்ரெஸ் ஆகவும் கடினமாகவும் மாற்றுகிறது; நாம் வேறு ஒரு நபராக காட்டிக் கொள்ள வேண்டி இருப்பதால் அதிக சிக்கலை தான் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளனர்.

பிரேக்கப் சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்கான டிப்ஸ்...

நீண்ட கால உறவில் இணையும் ஆணும் பெண்ணும், உறவுகளில் பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் இருப்பது மிகவும் அவசியம் என்று 53 சதவீதம் கூறியுள்ளனர். ஆண்களை விட பெண்கள்தான் டேட்டிங், காதல் மற்றும் திருமணம் என்று எல்லா உறவுகளிலுமே சமமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.

Bumble நிறுவனத்தின் இந்தியத் தகவல் தொடர்பு துறை நிர்வாக இயக்குனர் சமர்த்த சமாதர், “அலுவலகங்களில் ஆண்களுக்கு நிகரான சம்பளம், உரிமை என்று எல்லா இடத்திலும் சமத்துவத்தை அமல்படுத்துவதில் பெரும்பாலான சிங்கிள் இந்தியர்கள் பேசி வருகின்றனர். ஆரோக்கியமான உறவுகளிலும் சமத்துவத்தை உருவாக்க முயற்சி செய்வோம், தொடர்ந்து செயல்பட்டு வருவோம்” என்று தெரிவித்திருந்தார். ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் பாலின வேறுபாடு வெளிப்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும்!

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Dating Tips, Gender equality

அடுத்த செய்தி