கேள்வி : என்னுடையக் கேள்வி என்னவெனில் அனைவருக்கும் மற்ற உடலின் உறுப்புகளைக் காட்டிலும் அந்தரங்கப் பகுதிகள் மட்டும் கருமையாக இருக்கின்றன. என்னுடைய உடலும் வெள்ளையாகவும் அழகாகவும் இருக்கும். . ஆனால் என்னுடைய ஆண்குறி அழகாக இல்லை..என்ன காரணம்..?
பதில் : பதிலளிக்கும் முன் முதலில் நீங்கள் இந்த கேள்வியை கேட்டதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். நம் நம் நாட்டில் வெள்ளை நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெள்ளை நிறம்தான் சுத்தம்..கருப்பு அழுக்கு என்பது போன்ற பிம்பம் இருக்கிறது. குறிப்பாக பல பேர் தன் அந்தரங்க உறுப்பு மற்ற உறுப்புகளைக் காட்டிலும் கருப்பாக இருப்பதை நினைத்து பயப்படுகின்றனர்.
இதனால் துணையிடம் அந்தரங்க உறுப்பை காண்பிக்கவே அசிங்கமாகவும், பயமாகவும் நினைக்கின்றனர். எங்கு பார்த்துவிட்டு முகம் சுழித்துவிடுவார்களோ என பதட்டப்படுகின்றனர். அப்படி உங்களுக்கும் இந்த பாதிப்பு உள்ளது எனில் உங்களுடைய அந்தரங்க உறுப்பும் கருமை நிறம் கொண்டது என எடுத்துக்கொள்ளலாமா..? அவ்வாறு உங்களுடைய அந்தரங்க உறுப்பு, பிட்டம் , உள் தொடை போன்றவை கருப்பாக இருந்தால் அது முற்றிலும் சாதாரண விஷயம்தான்.
அதேபோல் அந்தரங்க உறுப்பின் நிறம் என்பது ஒவ்வொரு வகையான மக்களுக்கும் வேறுபடும். அந்த வகையில் இந்தியர்களுக்கு அந்தரங்க உறுப்பு கருமை நிறம் கொண்டது. இது மரபணுவைத் தழுவியது. எனவே உடல் நிறம் வெள்ளையாக இருந்து அந்தரங்க உறுப்பு மட்டும் கருப்பாக இருந்தால் கவலைகொள்வதில் அர்த்தமில்லை. முக்கியமாக இப்படி கருப்பாக இருப்பதால் நீங்கள் சுகாதாரமாக வைத்துக்கொள்ளவில்லை என்பதும் அர்த்தமில்லை. அது அழுக்கும் இல்லை. அதுவும் சாதாரண சருமம்தான்.
துணை கண்முன்னே சுய இன்பம் காணுதல் நல்லதா..? அவருடைய மனநிலை என்னவாக இருக்கும்..?
பாலிவுட் பிரபலங்கள், ஆபாச திரைப்பட நடிகர், நடிகைகள் தங்களுடைய அந்தரங்கப் பகுதிகளை காட்டும்போது அவை அழகாகவும், வெள்ளை நிறத்துடனும் இருப்பதற்குக் காரணம் அந்த இடத்தை சுற்றிலும் மேக்அப் அப்ளை செய்வதுதான் அல்லது ஃபோட்டோஷாப் மூலம் டோன் செய்வார்கள். எனவே யாரும் உடல் முழுவதும் ஒரே சீரான நிறத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். எனவே கருமை நிறம் என்பது சாதாரணமானது, இயற்கையானது.
இந்தியாவில் ஒரு மிகப்பெரிய காஸ்மெடிக்ஸ் நிறுவனம் அந்தரங்கப் பகுதியை பிளீச்சிங் செய்யவும், வெள்ளையாக மாற்றும் பொருட்களை தயாரிக்கிறது. அது வலி மிகுந்த மருத்துவ சிகிச்சைகளை உள்ளடக்கியது. கிரீம், லோஷன் என இரு வகைகளை தயாரிக்கிறது. அதை பலரும் வாங்கி தங்களுடைய அந்தரங்கப்பகுதியை வெள்ளையாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறான போக்கு. தேவையற்ற செயல். நீண்ட நாட்களுக்கு அது பலன் தராது. அதனால் நிச்சயம் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். அவ்வாறு செய்வதால் அந்தரங்கப் பகுதியில் எரிச்சல் உண்டாகலாம். உணர் திறனை இழக்கலாம், சிவப்பாக மாறலாம, அரிப்பு உண்டாகலாம். ஏன்...தேமல், நிரந்தர கீரல்கள் கூட உண்டாகலாம். இதுவும் கிட்டதட்ட அழகாகவும், வெள்ளையாகவும் மாற பயன்படுத்தப்படும் மற்ற ஸ்கின் கேர் பொருட்களைப் போன்றதுதான்.
என்னை பொருத்தவரை இப்படி நம் உடல் ஒரே சீரான நிறத்தில் அல்லாமல் வெவ்வேறான நிறங்களில் இருப்பதை வண்ணங்கள் கொண்ட கலையாகத்தான் பார்க்கிறேன். அது எனக்கு அழகியலாகத் தெரிகிறது. கருமையான அந்தரங்கப்பகுதியைக் கொண்டிருப்பது வெறும் சாதாரண விஷயம். அது இந்தியர்களின் நிறம். எனவே அதை பெருமையாக நினையுங்கள். அது உங்கள் மரபணுவின் அடையாளம். எனவே நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான் எப்போதும் அழகு. அதை மாற்ற நினைக்காதீர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.