கேள்வி : முன்னாள் காதலன் என்னை நிராகரித்துவிட்டான். இருப்பினும் அவனுடன் உடலுறவுகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கு என்ன காரணம்..?
பதில் : கடந்த காலங்களில் இதுபோன்ற உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொண்ட காதலை மறக்க முடியாமல் இருப்பது இயற்கையானதுதான். காதலில் உடலுறவைத் தவிர்ப்பது முடியாத காரியம். உங்கள் காதலருடன் முன்பு கொண்டிருந்த நெருக்கமான பிணைப்பு அவருடன் உங்களை ஆழமாக இணைத்துள்ளது. இன்னும் முன்னாள் காதலனுடன் உங்களுக்கு பாலியல் ரீதியாக ஏக்கம் இருப்பதை ஒப்புக் கொண்டது பெரிய விஷயம்.
நீங்கள் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அந்த உறவை முறித்துக் கொண்டீர்களா அல்லது இன்னும் அந்தக் காதல் தீரா ஆசைகளுடன் உள்ளுக்குள் இருக்கிறதா என்பதை உங்களுக்குள் நீங்களே கண்டறிய வேண்டும். இப்படியான ஆசை இன்னும் இருப்பதற்கு உங்கள் கடைசி சந்திப்பும் காரணமாக இருக்கலாம். உங்கள் பிரிவு விருப்பமின்றி நிகழ்ந்திருந்தாலும் இவ்வாறு உணர்ச்சிகள் வரலாம்.
பிரேக் அப்பிற்குப் பிறகு நிறைய உணர்ச்சிகரமான காயங்கள் இருக்கும். உங்கள் காதலன் உங்களை வேண்டாம் என பிரேக்அப் செய்ததால், அந்த நிராகரிப்பு உங்கள் சுய மதிப்பை இழக்கச் செய்யலாம். உங்களை நீங்களே தாழ்வாக நினைக்கலாம். காதலில் இப்படி சுயமரியாதையை இழக்கும் நபர்கள் சில சமயங்களில் எவர் தன்னை இழிவுபடுத்தினாரோ அவருடனே உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். அது நிறைவேறாமல் காலங்கள் கடக்கும்போது ஏக்கமாக மாறுகிறது.
திருமணத்தை மீறிய உறவால் குற்ற உணர்ச்சியாக உள்ளதா..? எப்படி சமாளிப்பது..இதற்கான வழிகள் என்ன..? பல்லவியின் அலோசனைகள் இதோ...
இப்படி உங்களுக்கு நீங்களே கற்பனை செய்துகொண்டு வாழ்வதை விட அதிலிருந்து வெளியேற முயற்சி செய்யுங்கள் அல்லது உங்கள் ஏக்கத்தை தீர்த்துக்கொள்ளும் முயற்சியில் இறங்குங்கள். இல்லையேல் இதிலிருந்து வெளி வருவது கஷ்டம்.
இன்னொரு சிறந்த வழி.. இன்னும் பழைய காதலை நினைத்துக்கொண்டிருப்பதை விட புதிய நபர்களைச் சந்திப்பதும், இந்த உணர்வுகளை உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் பேசினால் ஒரு தீர்வு கிடைக்கலாம் அல்லது உங்கள் முன்னாள் காதலனுடன் நட்பு ரீதியான பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதாலும் இந்த ஆசை உங்களை விட்டு நீங்கலாம். ஆனால் இப்படி செய்வதால் உங்களுக்கு கடந்த கால நிகழ்வுகளால் அந்த காதல் பிரிவு மனதை விட்டு அகலாமல் இருக்கலாம்.
நீங்களே முன்னாள் காதலன் என்று சொல்கிறீர்கள் எனில் அந்த காதல் இல்லை என்பதை எதார்த்ததில் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவே அவர் உங்கள் வாழ்க்கையில் இல்லை என்பதை முழுமையாக நம்புங்கள். மேலே குறிப்பிட்டது போல.. அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா, நட்பு வைத்துக்கொள்ளலாமா என சிந்திப்பதை விட.. உங்கள் நேரத்தை சுய நலத்தின் மீது அக்கறை செலுத்தி முன்னோக்கி நகர்த்துங்கள். இது உங்கள் வாழ்க்கைக்கு இன்னும் நல்லது. எனவே இதை மறந்து உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.