உடலுறவுக்குப் பின்பு களைப்பாக உணர என்ன காரணம்..?

காட்சி படம்

உடலுறவு முடிந்தபின் களைப்பாக இருப்பதற்கு இது தான் காரணம்.

 • Share this:
  கேள்வி : உடலுறவு முடிந்தபின் நான் ஏன் களைப்பாக உணர்கிறேன்..? சில நேரங்களில் விந்து வெளியேறிய பிறகு என்னால் சிந்திக்கக் கூட முடியவில்லை...

  பதில் : உங்களுக்கு மட்டுமல்ல..உங்களை போன்று பலரும் உடலுறவுக்குப் பின் களைப்படைந்துவிடுகிறார்கள். சிலருக்கு குட்டி தூக்கம் கூட தேவைப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் இதற்கான முதன்மைக் காரணமாக கருத்தப்படுவது ஹார்மோன்களின் வெளியேற்றம்தான். அதன் செயல்பாடுகளால் இவ்வாறு நிகழலாம்.

  அந்த ஹார்மோன்களில் பிரதான பங்கு செரடோனின் தான். அது களைப்பு , சோர்வு , தூக்கத்தை வரவழைக்கும். வாசோப்ரெசின் ஹார்மோன் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும். ஆக்ஸிடோசின் ஓய்வை தரும். இத்தனை ஹார்மோன்கள் சுரந்தால் நிச்சயம் ஆழ்ந்த தூக்கம் , ஓய்வு வரத்தான் செய்யும். இதை பிரெஞ்சு மொழியில் “une petite mort” என்று கூறுகிறார்கள். அதாவது தமிழில் குட்டி மரணம் என்கின்றனர். காரணம் அந்த சமயத்தில் நம் மூளை எதையும் யோசிக்க முடியாமல் காலியான நிலையில் இருக்கும்.

  Also read : காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா ?  எனவே உடலுறவுக்குப் பின் தூக்கம் , சோர்வு, களைப்பு, வெற்றிடமான மூளை என்பதெல்லாம் இயல்பான ஒன்றுதான். சில நேரங்களில் அலுவலகத்தில் நாள் முழுவதும் அதிக வேலையை செய்துவிட்டு வீடு திரும்பியதும் இரவு தூங்கச் செல்லும் முன் உடலுறவு மேற்கொண்டாலும் கடுமையான களைப்பை உணர்வீர்கள்.

  எதையும் சிந்திக்க முடியவில்லை , ஆக்டிவாக இருக்க முடியவில்லை என்பதெல்லாம் சில நிமிடங்களுக்கு மட்டும்தான் இருக்கும் அல்லது விந்து வெளியேறிய சில நிமிடங்கள் இருக்கும். ஆனால் அதுவே பல மணி நேரமாக நீள்கிறது. எப்போதும் இப்படித்தான் உணர்கிறேன் எனில் நிச்சயம் நீங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: