கேள்வி : இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்கு முன்பே தான் காதலிக்கும் பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்கின்றனர். அது ஏன் நம் இந்தியக் கலாச்சாரத்தில் தடை செய்யப்பட்ட விஷயமாகவே இருக்கிறது.? இந்த எண்ணங்களை மாற்றுவது ஒவ்வொரு தனி நபருடைய கடமையாக நினைக்கிறேன். அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை..?
பதில் : இந்தக் கேள்வியை நம் சமூகத்தைப் பார்த்து கட்டாயம் கேட்க வேண்டிய விஷயம் இது. ஒருவர் இந்த சமுதாயம் என்ன சொல்லுமோ..மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என நினைத்து திருமணத்திற்கு முந்தைய உடலுறவை தவிர்ப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அது தனிப்பட்ட விருப்பு , வெறுப்புகளுக்கு உட்பட்டது. இரண்டு நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் ஏன் பொது மக்கள் அதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.
இந்த விஷயத்தில் இருக்கும் முதன்மையான காரணமாக சொல்லப்படுவது கற்பு. பல ஆண்டுகளாக பெண்கள் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் தங்கள் ஒழுக்க நெறியை, கற்பை பாதுகாக்க வேண்டும் என்னும் அழுத்தத்தை அவர்கள் மீது திணித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் திருமணம் வரை காத்திருந்து கணவனுடன் மட்டும்தான் முதல் உடலுறவை வைத்துக்கொள்கின்றனர். அதாவது பெண்களுக்கு செக்ஸ் என்பது காற்று வெளியேறாதவாறு ஒரு கண்டெய்னர் டப்பாவில் அடைத்து வைக்கப்பட்ட பொருள் போன்றது. ஒருமுறை அதை திறந்துவிட்டால் அவ்வளவுதான் அதன் தூய்மை போய்விடும்.
அப்படித்தான் இந்த சமூகம் கற்றுக்கொடுத்துள்ளது. இதைவிடக் கொடுமை என்னவெனில் அவள் திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் வைத்துக்கொள்ளும் முதல் உடலுறவு இதுதானா , அவளுடைய கற்பு களையாமல் உள்ளதா என்பதை கண்டறிய வெள்ளை துணியை படுக்கையில் விரிப்பார்கள். ஏனெனில் முதல் முறை உடலுறவு கொள்ளும் பெண்களுக்கு இரத்தக் கசிவு உண்டாகும். அப்படி இரத்தம் வந்து அந்த வெள்ளைத் துணியில் கரையானால் அவள் தூய்மையானவள். இந்த கட்டுக்கதைகள் இன்றளவும் சில இடங்களில் நடந்து வருகிறது.
துணையுடன் உடலுறவு கொள்ளும்போது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் நெருக்கமாக இருப்பது போல் கற்பனை செய்கிறீர்களா..? என்ன காரணம்?
திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கான மற்றொரு காரணம் செக்ஸ் என்பது இனப்பெருக்கத்திற்கான விஷயம் மட்டும்தான் என ஜூடோ கிறித்தவ சித்தாந்தம் கூறுகிறது. இது போன்ற கருத்துக்கள் மக்களிடையே செக்ஸ் மீதான ஈர்ப்பை குறைக்கிறது. அதில் இருக்கும் காதல், நெருக்கம், ஏக்கம் இப்படி அதன் அழகியலையே குறைத்துவிடுகின்றன. இதனால் செக்ஸ் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்னும் விஷயம் தெரியாமலே போகிறது. அதேபோல் ஒரு ஆணின் உடலுறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயம் பெண்ணிற்கு அளிப்பதில்லை. ஏனெனில் ஆண்தான் கருத்தரித்தலுக்கு உதவுகிறான் என்பதற்காக....
மூன்றாவது காரணம் திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக்கொண்டால் கரு நின்றுவிடுமோ என்ற அச்சம். அவ்வாறு செக்ஸ் வைத்து கரு நின்றுவிட்டால் அவன் ஏமாற்றுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம். அவ்வாறு ஏமாற்றிவிட்டால் அந்த குழந்தைக்கு அப்பா இல்லாத நிலை. சமூகத்தில் அவமானம். அதேபோல் பணக்கார ஆணாகப் பார்த்து அவன் மூலம் குழந்தை பெற்று அதைவைத்து பணம் பறிப்பார்களோ என்ற எண்ணம் ஆண்களிடத்திலும் உண்டு.
கூடுதலாக நீங்கள் இந்த திருமணத்திற்கு முந்தைய உடலுறவை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் கலாச்சாரம், பாரம்பரியம் தழுவிய குடும்ப கட்டமைப்பை உடைப்பதாக ஆகிவிடும். இதற்கு பயந்துகொண்டே அவர்கள் கட்டி வைத்துள்ள மாய பிம்பத்தை உடைக்கத் தயங்குகின்றனர். இவர்கள் உருவாக்கி வைத்துள்ள குடும்ப அமைப்பு என்பது ஆண்கள் வெளியில் சென்று சம்பாதித்து வரவேண்டும்.
பெண்கள் வீட்டையும், குடும்பத்தையும் பொருப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டும். உறவுகளை கவனிக்க வேண்டும். இப்படி எல்லாவற்றையும் பெண்கள் கவனிக்க ஆண்கள் பொருள் ஈட்டும் நபர்களாக மட்டும் இருப்பார்கள். இப்படி இதுபோன்ற அத்தனை கட்டமைப்பையும் அசைத்துப்பார்த்துவிடும் என்ற அச்சம். இவை போன்ற விஷயங்களால் தான் திருமணத்திற்கு முந்தைய உடலுறவை இந்த சமூகம் ஏற்க மறுக்கிறது. ஆனால் இந்த நம்பிக்கைகள் சமுதாயத்திற்கோ , தனி மனிதனுக்கோ எந்த பலனையும் அளிக்காது.