காதல் திருமணங்களை விட பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணங்கள் ஏன் சிறந்தது?
காதல் திருமணங்களை விட பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணங்கள் ஏன் சிறந்தது?
அ முதல் ஃ வரை அனைத்தையும் பகிர வேண்டும் : புதிதாக திருமணமான பெண், தனக்கென்று எதையும் தனியாக வைத்துக் கொள்ள முடியாது. அனைத்தையும் பகிர வேண்டும். உதாரணமாக, தனிப்பட்ட வங்கிக் கணக்கு, தந்தை அல்லது தாய் வழங்கிய முதலீடுகள், விலையுயர்ந்த பரிசுகள் என்று அனைத்தையும் பற்றி சொல்ல வேண்டும் - கணவரோடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தினருடனும்! சில நேரங்களில், கணவரை விட மனைவி அதிகம் சம்பாதிக்கும் போது, கணவரின் குடும்பத்தினரிடமிருந்து இகழ்ச்சியான பேச்சை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சுமார் 80 - 85% மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
திருமணம் என்பது இருவேறு குடும்பங்கள், பழக்க வழக்கங்கள், மனிதர்கள் என அனைவரும் ஒன்றாக சங்கமித்து வாழ்நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் தாங்கி நின்று, கொண்டாட வேண்டிய உறவுகளை ஏற்படுத்தும் ஒன்றாகும். இது வெறும் சடங்காக பார்க்கப்படுவதில்லை. திருமணத்தின் புனிதமான பிணைப்பானது இரு நபர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் மத ரீதியாக இணைக்கிறது. பல ஆண்டுகளாக திருமண சடங்குகள் மற்றும் மரபுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
என்ன தான் காலங்கள் மற்றும் கலாச்சாரம் மாறினாலும் நாட்டில் இன்னும் திருமணப்பந்தத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்திய சமுதாயத்தை பொறுத்தவரை என்றுமே காதல் திருமணங்களை விட பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தி வைக்கப்படும் திருமணங்களே இன்றளவும் சிறந்ததாக கருதப்படுகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 80 - 85% மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் இந்தியாவில் வெகுசிலரே கலாச்சார வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், குடும்பத்தினருடன் உடன்படாமல் காதல் திருமணத்தை தேர்வு செய்கிறார்கள் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. காதல் திருமணங்களை விட பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணங்கள் ஏன் சிறந்ததாக இருக்க கூடும் என்பதற்கான சில காரணங்களை பார்க்கலாம்.
மரியாதை..பெற்றோர் மற்றும் பெரியவர்கள் முடிவு செய்து இருமனம் நடத்தி வைத்துள்ளதால் தம்பதியர் இருவருக்கும் இயல்பாகவே ஒரு பொறுப்புணர்வு இருக்கும். பெரியவர்கள் மனம் புண்படாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் இருக்கும். பெற்றோர்களுக்கு சங்கடம் தரும் வகையில் எதையும் செய்ய தயக்கம் இருக்கும். மேலும் காதல் திருமணத்தில் இருப்பதை விட தம்பதியருக்குக்கிடையே மரியாதை இருக்கும்.
ஒற்றுமைகள்.. பிள்ளைகளின் ஆர்வங்கள், விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை மனதில் வைத்து பெற்றோர்கள் அவர்களுக்கான வாழ்க்கை துணையைத் பார்த்து தேர்வு செய்வார்கள். தங்கள் பிள்ளைகளிடம் இருக்கும் அதே மதிப்புகள், குறிக்கோள் மற்றும் நம்பிக்கைகளை கொண்ட ஒருவரை அவர்கள் தேர்வு செய்து திருமணம் முடித்து வைப்பார்கள்.
அட்ஜஸ்ட்மெண்ட்..பெற்றோர் நிச்சயித்த பின் நடைபெறும் திருமணங்களில் தம்பதியர் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்களாக இருப்பதால், தங்கள் துணைக்கு ஏற்றவாறு சில விஷயங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்று இருவருமே நினைக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒருவரை பற்றி ஒருவர் சரியாக தெரிந்து கொள்ளவும், வலுவான மற்றும் நிலையான உறவை வளர்ப்பதற்கும் தேவையான மாற்றங்களை செய்ய பெருமபாலான தம்பதியர் தயாராக இருப்பர்.
அதிக சாய்ஸ்.! காதல் திருமணம் என்பது பெரும்பாலும் ஒருவருக்கு ஒருவர் தங்களை மாற்றி கொள்ள நினைக்காமல் அவர்களின் விருங்களுக்கு ஏற்பவே வாழ நினைப்பார்கள். இதற்கு துணை ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனை தான். ஏனென்றால் காதலிக்கும் போது இதை பற்றி எல்லாம் அதிகம் யோசித்து இருக்க மாட்டார்கள். ஒன்றாக சேர்ந்து வாழும் போது தான் உண்மை நிலவரம் இருவருக்குமே புரியும்.
ஆனால் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்களில் சந்தேகத்திற்கு இடமின்றி தனக்கு ஏற்றவர் கிடைக்கும் வரை ஒருவர் காத்திருக்க முடியும். எப்படிப்பட்ட நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். அதேகேற்றவாறு துணையை தேடி தேர்ந்தெடுத்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வாய்ப்புகள் அதிகம்.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.