• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • காதலிக்க பயப்படுகிறீர்களா? உங்கள் ராசியும் காரணமாக இருக்கலாம்..!

காதலிக்க பயப்படுகிறீர்களா? உங்கள் ராசியும் காரணமாக இருக்கலாம்..!

பூக்கள் : நீங்கள் உங்கள் டேட்டிங்கை காதலுடன் தொடங்க விரும்பினால் பூக்கள் தான் இதற்கு சிறந்த தேர்வு. அழகான பூக்களை பரிசளிப்பதன் மூலம் டேட்டிங்கை துவக்குவது என்பது எப்போதும் ஒரு மோசமான யோசனை அல்ல, நல்ல யோசனையே.

பூக்கள் : நீங்கள் உங்கள் டேட்டிங்கை காதலுடன் தொடங்க விரும்பினால் பூக்கள் தான் இதற்கு சிறந்த தேர்வு. அழகான பூக்களை பரிசளிப்பதன் மூலம் டேட்டிங்கை துவக்குவது என்பது எப்போதும் ஒரு மோசமான யோசனை அல்ல, நல்ல யோசனையே.

ல்லோருக்கும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஒருவேளை நீங்கள் காதலிக்க பயப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மீது உண்மையாக அன்பு செலுத்தும் நபரை கண்டுபிடிக்க வாய்ப்புகள் இல்லை.

  • Share this:
காதல் என்பது ஒரு மேஜிக் ஃபீலிங். உங்களின் அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் முழுமையாக பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு நபரை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. எல்லோருக்கும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஒருவேளை நீங்கள் காதலிக்க பயப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மீது உண்மையாக அன்பு செலுத்தும் நபரை கண்டுபிடிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே, உங்கள் ராசியின்படி இருக்கும் சில குணாதிசயங்களை தெரிந்து கொண்டால், பயத்துக்கான காரணத்தையும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

மேஷம்

சுதந்திரப் பறவையாக இருக்க விரும்பும் நீங்கள், உங்கள் பாதையில் வேறொருவரை அனுமதிக்க மாட்டீர்கள். ஒரு புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினால், சுதந்திரத்தை இழந்துவிடுவோமோ? என்ற பயம் உங்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும். ஒருவேளை புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் வந்தார்கள் என்றால், உங்களுக்கான நேரம் பறிபோனதாக நினைத்து, உண்மையான குணத்தை காட்டிவிடுவீர்கள். அதுவே உங்களின் காதலில் இருந்து பின்வாங்க வைத்துவிடும்.

ரிஷபம்

பிடிவாத குணம் கொண்ட நீங்கள், அன்பின் மூலம் உங்கள் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதை விரும்புவதில்லை. காதலை விரும்பும் நீங்கள், மற்றவர்களை நம்புவதை விரும்புவதில்லை. உங்கள் மீது மட்டுமே அதிகம் நம்பிக்கைகொள்வதால், மற்றவர்களுக்காக பழக்க வழக்கங்களை மாற்றுவது உங்களுக்குள் சங்கடமான மனநிலையை உருவாக்கும். இது ஒருவித பயமாக இருந்தாலும், வெளிக்காட்டாமல் உங்களுக்குள் மட்டுமே வைத்திருப்பீர்கள்.



மிதுனம்

கணிக்க முடியாத நிலையிலேயே உங்கள் மனது இருக்கும். ஒன்றின் மீது ஒன்றுக்கு அலைபாய்ந்து கொண்டே இருப்பீர்கள் என்பதால் காதலிலும் இதே மனநிலையில் இருப்பீர்கள். காதலில் ஒருமுறை விழுந்துவிட்டாலும், உங்கள் பார்ட்னர் ஏற்றவர் தானா? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். குழப்ப மனநிலையுடன் பயணப்படுவீர்கள் என்பதால், காதலையும் பயத்துடனேயே அணுகுவீர்கள்.

கடகம்

கரிசனம், அக்கறை, அதீத அன்பு உங்களிடம் மேலோங்கி இருக்கும். இதனால், எளிதில் ஒருவரிடம் காதல் கொள்வீர்கள். ஆனால், அவர்களால் ஏற்படும் மனக்காயம் உங்களை அடுத்தவர் மீது காதல் கொள்ளவோ அல்லது நம்பிக்கை கொள்ளவோ விடாது. ஒருவித பயம் உங்களுக்குள் ஏற்பட்டுவிடும். மீண்டும் ஒருமுறை ஏமாற விரும்பாத நீங்கள், உங்களை நோக்கி வருபவர்களை பயம் கலந்த சந்தேகத்திலேயே நிராகரித்துவிடுவீர்கள்.

சிம்மம்

காதல் என்பதை விரும்பும் நீங்கள், உங்களுக்குள் இருக்கும் முன்யோசனைகளின்படி மிகவும் உயர்தரமான எண்ணங்கள், குணங்கள் உள்ளவரை தேர்தெடுக்க வேண்டும் என விரும்புவீர்கள். இதனால், உங்கள் எண்ணத்துக்கு ஏற்ற நபரை தேடிக்கொண்டே இருக்கும்போது, ஒரு கட்டத்தில் உங்கள் எண்ணம் பூர்த்தியடையாததை எண்ணி பயம் கொள்வீர்கள். அதனால், சரியான நபரை தேடுகிறோமா? அல்லது தவறவிட்டுவிட்டோமா? என்ற எண்ணத்தில் இருப்பீர்கள் என்பதால், காதலில் இருந்து விலகியிருப்பீர்கள்.



கன்னி

பொதுவாக, கன்னி ராசிக்காரர்களுக்கு காதல் என்பது சர்வசாதாரணம் என சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு எவை தேவை என்று நினைக்கிறார்களோ அதை மட்டுமே பார்ப்பார்கள். நேர்த்தியானது எது என்று தேடிப்பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அதேவேளையில், தங்களுக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதை அடையாளம் காண தவறிவிடுவார்கள். இந்த தேடல் அவர்களுக்குள் உணர்வு ரீதியான ஒருவித பயத்தை ஏற்படுத்தும்.

உங்கள் துணையிடம் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாத ரகசியங்கள்!

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமானவர்கள். உண்மையான காதல் மீது நம்பிக்கை கொண்டு இருப்பதால், அன்பிற்குரியவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதற்கும், சத்தியம் செய்வதற்கும் பயப்படுவதில்லை. அதேவளையில், அவர்களுக்குள் இருக்கும் சந்தேகமின்மை சில நேரங்களில் ஒருவித பயத்தை ஏற்படுத்திவிடும். நாம் சரியாக இருக்கிறோமா என்ற கேள்விக்கு விடை தேடிக்கொண்டு இருப்பார்கள்.

விருச்சிகம்

காதலை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள். ஒருவர் மீது அன்பு செலுத்துவதை விரும்பும் விருச்சிக ராசிக்காரர்கள், அவர்கள் தங்கள் மீது கொண்டிருக்கும் அன்பின் மேல் எப்போதும் சந்தேகப் பார்வையை வைத்திருப்பார்கள். அவர்களின் உள்ளார்ந்த சந்தேகம், உண்மையான அன்பை பெறுவதில் இருந்து விலக்கி வைத்துவிடும்.



தனுசு

சுறுசுறுப்பாக இருக்கும் நீங்கள் புதிய விஷயங்களை மிகவும் விரும்பக்கூடியவர். இயல்பிலேயே, புதியவைகளின் மீது ஆர்வம் அதிகமாக இருப்பதால், அவை எதுவாயினும் அனுபவிக்க வேண்டும் என நினைப்பீர்கள். அன்பு, காமம் என எதற்கும் உங்களிடம் விதிவிலக்கு இருக்காது. அதேவேளையில், நீங்கள் எதிர்பார்க்கும் அன்பு கிடைக்கவில்லை என்று உணருகிறபோது, அது சலிப்பானது என வெறுத்து வெளியேறுகிறீர்கள். அது காதல் என்றாலும் கூட.

மகரம்

பொறுப்பு, கவனம், ஒழுக்கத்துக்கு பெயர்பெற்ற நீங்கள், உங்கள் மீது ஒருவர் செலுத்தும் அன்பு குறித்து கவலை கொள்வீர்கள். அன்பை கணிக்க முடியாது என நினைக்கும் நீங்கள், காதலிக்கும் முன் அவரைப் பற்றி நீங்களும், உங்களைப் பற்றி அவர்களும் தெளிவான புரிதல் இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள்.

கும்பம்

தனிமையாக இருப்பதையும், சுதந்திரமாக செயல்படுவதையும் விரும்புவீர்கள். எது சாத்தியம் என்று நினைக்கிறீர்களோ அதில் மட்டுமே உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். அந்தவகையில் அன்பு செலுத்துவதற்கும், பெறுவதற்கும் உங்களுக்குள் ஒருவித அச்சம் இருக்கும். உங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்க விரும்பாத நீங்கள் காதல் கொள்வதை பயமாக கருதுவீர்கள்.



மீனம்

ஒருவர் உங்களை பயன்படுத்திக்கொள்வதை எப்போதும் விரும்பாத நீங்கள், காதலிலும் அதனையே கடைபிடிப்பீர்கள். அன்பு செலுத்துவதால், மற்றவர் உங்களை பயன்படுத்திக்கொள்வார் என நீங்கள் அச்சம் கொள்வதால் காதலிலிருந்து ஒதுங்கியே இருக்க நினைப்பீர்கள். மற்றவர்களின் அன்புக்கு உதவும் நீங்கள், உங்களுக்கு கிடைக்கும் அன்புக்கு உண்மையாக இருக்க முடியாது என எண்ணுவீர்கள். இதனால், உங்களுக்குள் காதலைப் பற்றிய பயம் இருக்கும்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: