Home /News /lifestyle /

நீங்கள் பயன்படுத்தும் இந்த வார்த்தைகள்தான் நீங்கள் சிங்கிளாகவே இருப்பதற்கு காரணம்..!

நீங்கள் பயன்படுத்தும் இந்த வார்த்தைகள்தான் நீங்கள் சிங்கிளாகவே இருப்பதற்கு காரணம்..!

சிங்கிள்

சிங்கிள்

உங்களிடம் பழகும் ஒருவரிடம், இந்த குணம் இல்லை, அந்த குணம் சரியில்லை என நீங்கள் குறை கூறிக் கொண்டே இருப்பதால், உங்களுக்கு ஏற்ற பார்ட்னர் அமையவே மாட்டார்கள்.

நீங்கள் எப்போதுமே சிங்கிளாக இருப்பதற்கு என்ன காரணம் என்று யோசித்துள்ளீர்களா? உங்கள் முயற்சிகளுக்கு கண்டிப்பாக இந்நேரம் ஒரு பார்ட்னர் கிடைத்திருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தாலும், அது நடக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

உங்கள் பெர்சானிலிட்டி நன்றாக இல்லாமல் இருக்கலாம் அல்லது உங்களுக்கு ஏற்ற ஜோடியை நீங்கள் இதுவரை சந்திக்காமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், உங்கள் நடத்தைகள், குணாதியசங்கள் போன்றவையும் கூட, உங்களுக்கு ஜோடி அமைய அல்லது அமையாமல் இருக்க முக்கிய காரணங்களாக இருக்கலாம். குறிப்பாக, நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் உங்களுக்கான பார்ட்னர் அமையும் விஷயத்தை முடிவு செய்கிறது. நீங்கள் எப்போதுமே சிங்கிளாக இருக்கிறீர்கள் என்றால், சில வகை வாக்கியங்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள் என்றே அர்த்தம். அதுபோன்ற சில வார்த்தைகளை இங்கே பார்க்கலாம்.

நான் இந்த மாதிரி செய்றதில்ல…

உங்களை மட்டுமே அதிகம் பிரதானப்படுத்தி பேசும் பேச்சுகள் உங்களுக்கு அதிக பலனை கொடுக்காது. சில சமயம் உங்கள் தவறுகளை நீங்கள் ஒப்புக் கொண்டு, பிறர் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இது உங்களுக்கு நீண்ட கால பந்தம் நீடிக்க காரணமாக இருக்கும். எப்போதுமே உண்மையை மறைத்து பழகும் ஒருவரை பார்ட்னராக ஏற்றுக் கொள்ள ஒருவரும் முன்வர மாட்டார்கள்.



சிங்கிளாக இருக்க விரும்பவில்லை…

நாம் பேசும் ஒவ்வொரு நபரிடமும், “எனக்கு சிங்கிளாக இருக்க பிடிக்கவேயில்லை. எனக்கு ஒரு லவ் செட் ஆகலயே’’ என்று வருத்தப்பட்டு பேசுவது. காதலை வழிந்து தேடிக் கொள்ள முயற்சிக்கும் ஒருவரை யாருமே விரும்ப மாட்டார்கள். காதல் என்பது ஒரு உணர்ச்சி. அதை கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது. சிலருக்கு இது உடனே நடந்து விடும். சரியான ஜோடி கிடைக்க சிலருக்கு நீண்ட காலம் ஆகும். ஆனால், நீங்கள் புலம்புவதை நிறுத்த வேண்டும்.

இரவு சரியாக தூங்கவில்லை எனில் பக்கவாதம் , மாரடைப்பு வரும் அபாயம் - மருத்துவர் எச்சரிக்கை..!

 

பார்ப்பவர்களை குறை சொல்வது…

உங்கள் மனதுக்குள் ஆயிரம் எதிர்ப்பார்ப்புகள் இருக்கலாம். அவை நியாயமானதாகவும் கூட இருக்கும். ஆனால், உங்களிடம் பழகும் ஒருவரிடம், இந்த குணம் இல்லை, அந்த குணம் சரியில்லை என நீங்கள் குறை கூறிக் கொண்டே இருப்பதால், உங்களுக்கு ஏற்ற பார்ட்னர் அமையவே மாட்டார்கள்.



எனக்கென்று சில ரூல்ஸ் இருக்கு…

எப்போதுமே சில ரூல்ஸ் தங்களுக்கு என்று வகுத்துக் கொண்டு செயல்படும் நபர்களின் பழக்கம் போர் அடிப்பதாக அமைந்துவிடும். உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ பலன் அளிக்காத சில ரூல்ஸ்களை தலையில் கட்டி சுமப்பதால் எந்த லாபமும் கிடைக்காது. ஒவ்வொரு நபரும் உங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். கொஞ்சம் சுதந்திரமாக விட்டுவிடுங்கள். எப்போதும், ரூல்ஸ் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் உங்களுக்கு நிரந்தரமான பார்ட்னர் அமையவே மாட்டார்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Love, Relationship Tips, Single

அடுத்த செய்தி