Home /News /lifestyle /

மணவாழ்க்கை பிடிக்காத நிலையில் என்ன செய்யலாம்? குழந்தையின் நலனுக்கு எது சரி?

மணவாழ்க்கை பிடிக்காத நிலையில் என்ன செய்யலாம்? குழந்தையின் நலனுக்கு எது சரி?

காட்சி படம்

காட்சி படம்

வாழ்க்கையை தொடங்கும் போது, “இறுதி வரை மகிழ்ச்சியாக இருப்போம்’’ என்ற உறுதி மொழியுடன் தான் தொடங்குகிறது. ஆனால், பல சந்தர்ப்பங்களில் இந்த வாக்குறுதியை பலரால் காப்பாற்ற முடியவில்லை.

அனைத்து தம்பதியருமே வாழ்க்கையின் தொடக்க காலத்தை மகிழ்ச்சியுடன் தான் தொடங்குகின்றனர். இடைப்பட்ட வாழ்வில் அவ்வபோது கசப்புகள் வந்து போனாலும் கூட, அதை தாண்டி வாழ்நாள் இறுதி வரையிலும் ஒற்றுமையாக இருக்கின்றனர். குறிப்பாக, வாழ்க்கையை தொடங்கும் போது, “இறுதி வரை மகிழ்ச்சியாக இருப்போம்’’ என்ற உறுதி மொழியுடன் தான் தொடங்குகிறது. ஆனால், பல சந்தர்ப்பங்களில் இந்த வாக்குறுதியை பலரால் காப்பாற்ற முடியவில்லை.

மணவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டதுமே விவகாரத்து பெற்று பிரிந்து விடலாமா அல்லது சகிப்புத்தன்மையோடு சேர்ந்து வாழலாமா என்ற குழப்பம் வந்து விடும். குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலமும் இதில் அடங்கி இருப்பதால், இந்த விஷயத்தில் முடிவு எடுக்க முடியாமல் தம்பதியர் திணறக் கூடும்.

ஆக, நிம்மதி இல்லாத மண வாழ்க்கையில் தம்பதியர் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை காண்பது சற்று சிக்கலுக்கு உரிய விஷயம் தான். கணவன், மனைவியின் எண்ண ஓட்டங்கள் என்ன, திருமணத்தின் நிலை என்ன, குழந்தைகளுக்கு இது எத்தகைய சூழ்நிலையை உருவாக்கும் என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டியுள்ளது.ஒரு வகையில் தம்பதியருக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காண்பது, அவர்களது மனக்காயங்களை ஆற வைப்பது, உறவுநிலையை சீரமைப்பது போன்ற நடவடிக்கைகளை குடும்ப நல ஆலோசகர்கள் மேற்கொள்கின்றனர். ஆனால், துரதிருஷ்டவசமாக சில உறவுகளின் கசப்பு நிலை என்பது சீரமைக்க முடியாததாக இருக்கிறது. அத்தகைய சூழலில், குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்கு சிக்கல் வந்துவிடாத படி, திருமண வாழ்வுக்கு அப்பாற்பட்டு தம்பதியர்கள் ஒருசேர வாழ வேண்டும் என்று மனநல ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.

also read : உங்கள் பார்ட்னர் வெகுதூரத்தில் இருக்கிறாரா – உங்கள் காதலை, அன்பை வலுவாக்கும் டிப்ஸ்

ஒருவராவது விட்டுக் கொடுக்க வேண்டும்:

ஒரு தம்பதியரின் பிரிவு என்பது அவர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் மன ரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கக் கூடிய ஒன்றாகும். பெற்றோரில் ஒருவராவது குழந்தையின் நலன் கருதி, தன்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைக்க முன்வர வேண்டும். அதே சமயம், தம்பதியர் ஒருசேர வாழ்வதாக ஒப்புக் கொண்டு விட்டு, எப்போதும் போல வாய்த் தகராறு செய்து கொண்டிருப்பதோடு, சில சமயம் கை கலப்புகளில் ஈடுபட்டுக் கொள்ளும் நிலை இருக்குமானால், அத்தகைய சூழலில் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதே நல்லது.also read : பார்ட்னருடன் சண்டை போடும்போது இந்த விஷயத்தை ஞாபகம் வச்சுக்கோங்க!

ஏனென்றால், பெற்றோர் ஒருசேர வாழும் சமயத்திலும், அவர்களிடையே அனுதினமும் நடக்கும் சண்டை என்பது குழந்தையின் மனநலனை கெடுப்பதாக அமைந்துவிடும். மிகுந்த வேதனையும், துன்பமும் மிகுந்த மண வாழ்க்கையில் சேர்ந்து வாழ வேண்டியதில்லை.

ஆக, இறுதியாக கசப்பு மிகுந்த மண வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வது சரியா அல்லது பிரிந்து வாழ்வது சரியா என்ற கேள்விக்கு விடை காண வேண்டியிருக்கிறது. இந்தக் கேள்விக்கு, உங்கள் குழந்தையின் நலனை எது பாதிக்காதோ அதுவே சரியானது என்பதே ஆகச் சிறந்த பதிலாக இருக்க முடியும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Husband Wife, Relationship

அடுத்த செய்தி