21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு பெண் சுதந்திரம் பற்றிய புரிதல் சரிவர இல்லை. இதனால் பல குடும்பங்களில் பெண்களின் நிலை மிக மோசமானதாகவே இன்றும் உள்ளது. பெண் சுதந்திரம் பொறுத்த வரையில் அதை ஒருவர் கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. பெண் சுதந்திரம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். அதில் எந்த ஆணோ, குடும்பத்தினரோ, நண்பர்களோ நுழையக் கூடாது. இன்று பல பெண்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.
இப்படி சுதந்திரமாக இருக்கும் பெண்களை ஏனோ நாம் தவறான கண்ணோட்டத்திலே பார்த்து வருகிறோம். பல பெண்கள் தனது மொத்த குடும்ப பாரத்தையே சுமந்து வருபவர்களாகவே உள்ளனர். இப்படிப்பட்ட பெண்களுக்கு வேண்டியவை எல்லாம் உண்மையான அன்பும், அரவணைப்பும் தான். நீங்கள் ஒரு சுதந்திர பறவையாக உள்ள பெண்ணை நேசிக்க தொடங்குகிறீர்கள் என்றால் இந்த 6 விஷயங்களை அவசியம் நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவை என்னென்ன என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.
பொறுப்புகள் :
ஒரு சுதந்திரமான பெண் உங்களுடன் சில பொறுப்புகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டுமென நினைப்பார்கள். நீங்களாகவே முன்வந்து இந்த சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென எண்ணுவார்கள். இப்படி நீங்கள் செய்யவில்லை என்றாலும் இது அவர்களுக்கு பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் தன்னில் சரி பாதியாக நினைக்கும் உங்களின் மேல் இது ஒரு ஏமாற்றத்தை தரும்.
அவர்களுக்கான நேரம் :
எந்த ஒரு உறவாக இருந்தாலும் தனக்கான நேரத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்க நினைக்க மாட்டார்கள். சுதந்திரமாக இருக்கும் பெண்களுக்கும் அப்படித்தான். அவர்களின் பொன்னான பெர்சனல் நேரத்தை வீணடிக்கும்படி நடந்து கொள்ளாதீர்கள். இது அவர்களுக்கு உங்களின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும்.
காலம் எடுத்துக்கொள்ளுங்கள் :
சுதந்திரமான பெண்ணின் மனதை வெல்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அவர்களின் மனதில் நீங்கள் குடிகொள்ள வேண்டுமென்றால் சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். பொதுவாக இப்படிப்பட்ட சுதந்திரமான பெண்கள் தன வாழ்வின் முன் காலத்தில் அதிக காயங்களை கடந்திருப்பார்கள். அல்லது சுதந்திரமான வாழ்வை வாழ தேர்ந்தெடுத்திருப்பார்கள். இவர்களுக்கு வேண்டியதெல்லாம் புரிதல் கொண்ட அன்பு மட்டுமே. எனவே இந்த நிலையை அடைய சற்று காலம் எடுக்கும்; பொறுமையாக இருந்து உங்களின் இளவரசியை கரம் பிடியுங்கள்.
Relationship : நீங்கள் காதலில் விழுந்துள்ளீர்கள் என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்..
நேரடியான அணுகுமுறை :
தனது வாழ்க்கையை சுதந்திரமான பாதையில் கொண்டு செல்லும் பெண்கள் எப்போதும் ஒளிவு மறைவின்றி இருப்பார்கள். அவர்களின் அணுகுமுறையும் நேரடியாக தான் இருக்கும். எனவே இப்படிப்பட்ட திடமான பெண்கள் உங்களின் கருத்துக்களை கேட்டு கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு எது சரியென படுகிறதோ அதை தான் செய்வார்கள். இதே போன்ற நேரடியான அணுகுமுறையை தான் தன் துணையிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்கள். ஆதலால், தேவையற்ற விஷயங்களை அவர்களிடம் கொண்டு செல்லாதீர்கள்.
நிதி மேலாண்மை :
தனது பணத்தை நிர்வகிக்கும் விஷயங்களில் சுதந்திரமான பெண்கள் மிக புத்திசாலித் தனத்துடன் நடந்து கொள்வார்கள். தேவையற்ற வீண் செலவுகளை எப்போதும் செய்ய மாட்டார்கள். அதே போன்று தான் நேசிப்பவரும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எந்தவித பரிசுப் பொருட்களையும் எதிர்பார்க்க அவசியமில்லை. ஏனெனில் தனது சந்தோஷத்திற்காக மற்றவரை இவர்கள் சார்ந்திருக்க மாட்டர்கள். மேலும் பணத்தை நிர்வகிப்பது பற்றி தனது துணைக்கும் சிறப்பான ஆலோசனைகளை வழங்குவார்கள்.
பிரச்சனைகள் :
வாழ்க்கையில் வரும் சூறாவளி பிரச்சனைகளையும் தானே சரிசெய்ய வேண்டுமென நினைப்பார்கள். தன் பிரச்சனைகளை தீர்க்க ஒருவர் வருவார் என எப்போதும் காத்திருக்க மாட்டார்கள். மாறாக அவற்றை சிறப்பான முறையில் இவர்களே கையாள்வார்கள். இருப்பினும் நீங்கள் இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு உதவி செய்தால், அதை நிச்சயம் பாராட்டுவார்கள். இதற்காக நீங்கள் பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை, நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருந்தாலே போதுமானது.
உங்களின் சுதந்திரமான காதலியுடன் வாழ்வை கொண்டுசெல்ல மேற்சொன்ன 6 விஷயங்களை எப்போதும் நினைவில் வைத்தால், வாழ்வில் என்றும் இன்பமே!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Love, Men, Relationship Tips, Women