HOME»NEWS»LIFESTYLE»relationship what to do when your partner gives no interest to have sex with you esr swpb

மனைவிக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைகிறதா..? உங்களுக்குள் சந்தேகம் எழுகிறதா..?

உங்களுடைய பாதுகாப்பின்மை, கவலைகளை நேர்மையாகவும், உண்மையாகவும் உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்வதில் எந்த தவறும் இல்லை.

மனைவிக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைகிறதா..? உங்களுக்குள் சந்தேகம் எழுகிறதா..?
மாதிரி படம்
  • Share this:

கேள்வி : நாங்கள் 26 வயதில் காதல் திருமணம் செய்துகொண்டோம். இருவரும் வேலைக்குச் செல்கிறோம். நன்கு சம்பாதிக்கிறோம். சில நாட்களாக என் மனைவி உடலுறவு கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர் ஜிம்மிற்கு செல்லும் இடத்தில் வரும் ஆண்களைப் பற்றி அதிகம் பகிர்கிறார். மிகவும் அழகாக இருப்பார், தசைகள், கட்டுமஸ்தான உடல் என பெருமையாக பேசுவார்.

என்னிடமும் அவர் நீ ஆண் நண்பர்போல் நடந்துகொள்... இல்லையெனில் வேறொருவரை பார்த்துவிடுவேன் என கிண்டலாக கூறுவார். சமீப நாட்களாக வேலை பளு அதிகம் இருப்பதால் எங்களுக்குள் பேச்சு வார்த்தை குறைந்துவிட்டது. நான் அவளை நம்புகிரேன். ஆனாலும் அவளுக்கு உடலுறவு கொள்வதில் , பேசுவதில் ஆர்வம் இல்லாததை கவனிக்கும்போது குழப்பமாக இருக்கிறது. நான் சராசரி ஆண்களின் தோற்றத்தில்தான் இருப்பேன்.அவளுடைய எதிர்பார்ப்புகளுக்கு இணையாக இருக்க மாட்டேன். எனவே நான் என்ன செய்வது..?

பதில் : உங்கள் கேள்வியிலிருந்தே ஒரு பதில் கிடைக்கிறது. அதாவது சமீப நாட்களாக எங்களுக்குள் பேச்சுவார்த்தை குறைந்துவிட்டது என்கிறீர்கள். அது உண்மைதான்... ஆரோக்கியமான உரையாடல், பகிர்வுகள் நீண்ட வாழ்க்கைக்கான அஸ்திவாரம். அதுவே உங்கள் பிரச்னை, குழப்பத்திற்கும் விடை தரும்.

உங்கள் மனைவி உங்களை கிண்டல் செய்து பேசுவது உங்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் நீங்கள் உறவில் பாதுகாப்பின்மையை உணர்கிறீர்கள். இதனால் உங்கள் தோற்றம், பொருளாதார நிலை, செக்ஸுவல் பவர் என அனைத்திலும் உங்களுக்கே உங்கள் மீது பாதுகாப்பின்மையை உணர வைத்துள்ளது. சுய நம்பிக்கையை இழக்கச்செய்துள்ளது. இதை நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும். விரைவில் தெரபிஸ்ட் அல்லது மனநல ஆலோசகரை அணுகி மன ஆரோக்கியத்தை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். அதேபோல் உங்களின் இந்த வருத்ததை கட்டாயம் மனைவிக்கும் தெரியப்படுத்துவது அவசியம். இல்லையெனில் அதனால் நீங்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவீட்கள். அவர் செய்யும் கிண்டல்கள் உங்களுக்கு பாதிக்கவில்லை என நினைத்திருக்கலாம். எனவே அது என்னை காயப்படுத்துகிறது என கூறுங்கள்.

ஆணாக இருந்தும் பெண்ணாக உணரும் உங்கள் விருப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது என தயக்கமா..? பதிலளிக்கிறார் மனநல ஆலோசகர் பல்லவி..!

உங்கள் மனைவி அவ்வாறு பேச அவரை எது தூண்டுகிறது என கண்டறியுங்கள். அதேபோல் ஒரு விஷயம் குறிப்பிட்டீர்கள்...உங்களை ஆண் நண்பரைபோல் நடந்துகொள்ள சொல்கிறார் என்று... இதிலிருந்து புரிவது என்னவெனில்... அவர் காதலுக்கு முன்னால் இருந்த ரொமான்ஸ், நெருக்கம் போன்ற விஷயங்களை மிஸ் செய்கிறார். அது திருமணத்திற்குப் பின் இல்லாமல் போயிருக்கலாம். அதனால் அவ்வாறு அவர் கூறியிருக்கலாம். அவரின் அழகை ரசிப்பது, டேட்டிங் செல்வது, டின்னர் அவுட்டிங் என செல்வது போன்ற விஷயங்களை நீங்கள் மறந்திருக்கலாம். நீங்களே சொன்னீர்களே... வேலை பிசியில் பேசக்கூட நேரமில்லை என்று... அது கூட அதற்கான வெளிப்பாடாக இருக்கலாம்.எனவே, வேலை பளுக்களை இறக்கிவிட்டு சிறிய வெக்கேஷனிற்கு திட்டமிடுகள். டேட்டிங் செய்தபோது சென்ற இடத்திற்குக் கூட மீண்டும் சென்று வாருங்கள். அங்கு முழுக்க முழுக்க உங்களுடைய நேரத்தை அவருக்காக செலவழியுங்கள். வேலை , இல்லற வாழ்க்கை இரண்டையும் பேலன்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

உங்களுடைய பாதுகாப்பின்மை, கவலைகளை நேர்மையாகவும், உண்மையாகவும் உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்வதில் எந்த தவறும் இல்லை. அதை மறைத்துக்கொண்டே வாழ்வது உங்களுக்குத்தான் பெரும் கவலையை தரும். இதனால் உங்களாலும் மனைவுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. சிறந்த தம்பதிகளாக இருக்க வேண்டுமெனில் வெளிப்படையான உரையாடல்கள் அவசியம். இருவரும் வேலை செய்கிறீர்கள்..கிடைத்த நேரத்தில் கேட்ஜெட், செல்ஃபோன்களில் செலவழிக்காமல் மனம் விட்டு பேசுங்கள்.. பிரச்னைகள் தானாக விலகிப்போகும்.
Published by:Sivaranjani E
First published: