உங்கள் காதலருக்கு நெருங்கிய தோழி இருக்கிறாரா..? சிரமம் வேண்டாம்... சிம்பிளா டீல் பண்ணுங்க..!

உங்கள் காதலருக்கு நெருங்கிய தோழி இருக்கிறாரா..? சிரமம் வேண்டாம்... சிம்பிளா டீல் பண்ணுங்க..!

மாதிரி படம்

கிளீடன் (Gleeden) நடத்திய ஆய்வில் காதலர்களுக்கு இடையே எழும் பிரச்சனையில் 70 விழுக்காடு, காதலருக்கு தோழி இருப்பதால் உருவாவது தெரியவந்துள்ளது.

  • Share this:
காதலருக்கு தோழி இருப்பதை பெரும்பாலான காதலிகள் விரும்புவதில்லை. இதுகுறித்து டேட்டிங் செயலியான கிளீடன் (Gleeden) ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், காதலர்களுக்கு இடையே எழும் பிரச்சனையில் 70 விழுக்காடு, காதலருக்கு தோழி இருப்பதால் உருவாவது தெரியவந்துள்ளது.

அதேபோல், காதலிக்கு ஆண் நண்பர்கள் இருப்பதால் 30 விழுக்காடு பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தோழி மற்றும் காதலிக்கு இடையிலான உறவை சரியாக கொண்டு செல்ல தெரியாமல் 60 விழுக்காடு இளைஞர்கள் காதலை முறித்துக்கொள்கின்றனர். 20 விழுக்காடு உறவுகள் தவறான பாதையில் பயணிக்கின்றனர். சுமார் 10 விழுக்காடு காதலர்கள் மட்டுமே இருவருக்கும் இடையே நல்ல புரிதலுடன் பயணிப்பதாக கிளீடன் டேட்டிங் செயலி கூறுகிறது.

தன் நேசத்துக்குரியவருக்கு பெண் தோழி இருந்தால், ஏமாற்றப்பட்டுவிடுவோமோ? என்ற எண்ணம் பெண்களிடையே எழுவது இயல்பானது. இதுபோன்ற எண்ணம் உங்களிடையே எழும்போது, அதனை பிரச்சனையாக மாற்றாமல் புத்திசாலித்தனமாக டீல் செய்யலாம். அதனைவிடுத்து காதலரிடம் தேவையில்லாமல் சண்டையிட்டு உங்களுடைய அழகான உறவை முறித்துகொள்ளும் நிலைக்கு செல்வது நல்லதல்ல. உங்கள் காதலருக்கு பெண் தோழி இருந்தால், எப்படி அழகாக டீல் செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.எங்கே தொடங்குவது?

உங்கள் காதலருக்கு பெண் தோழி இருப்பது உங்களுக்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இடையிலான உறவைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவதில் தவறில்லை. ஆனால், எப்படி அணுகுகிறோம்? என்பது முக்கியம். நன்றாக சிந்தித்து, முதிர்ச்சியுடன் செயல்படுங்கள். திறந்த மனதுடன் உங்கள் பார்டனருடன் பேசுங்கள். அவர்களுக்கு இடையிலான உறவை குறித்து ஜாலியாக பேசுங்கள். குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கில் பேசினால், அவர் சொல்ல வருவதை மறைக்க வாய்ப்புகள் உள்ளன.

ஏதேனும் ஒரு உண்மையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், பொறுமையை இழந்து உடனடியாக சண்டையிடாதீர்கள். அவர்களுக்கு இடையில் இருக்கும் உறவு நட்பு ரீதியிலானது என்பதை உணர்ந்து கொண்டால், அதற்கு பிறகு தோழியைப் பற்றி பேச வேண்டாம். நண்பர்களுக்கு என்று சில பிரைவசிக்கள் இருக்கும். அதனை மதித்துக்கூட சொல்லாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் அதனை அறிந்து கொண்டால், தனக்கு தெரியும் என்பதை செல்லமாக உணர்த்திவிடுங்கள்போதும். மேலும், தன்னிடம் எதையும் மறைக்க வேண்டாம் என அன்புக் கட்டளை இடுங்கள். உங்கள் சொல்லுக்கு காதலர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார்.இயல்பாக இருத்தல்

தோழிக்கும் தனக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்து உங்கள் காதலர் சொல்லும்போது, அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். அவர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். மேலும், அவர் கூறியதைக் கேட்டு அவர்களுக்குள் இருக்கும் உறவு குறித்தும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

காதலரின் தோழியை நீங்கள் நேராக சந்தித்து, அன்பாக உரையாடுங்கள். அவரின் மனநிலையையும் தெரிந்து கொள்ளுங்கள். தோழியின் மனம் புண்படாதாவாறு பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் உங்களின் முக்கியத்துவத்தையும், அவரின் எல்லையையும் புரியவைத்துவிடுங்கள். காதலரின் தோழி குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, ஒருமுறைக்கு இருமுறை தெளிவுபடுத்திக்கொள்வது உங்களின் காதல் வாழ்க்கைக்கு நல்லது.

சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? நடிகை வித்யா பாலன் கூறும் ஆலோசனைகள்!

நட்பாக பழகுதல்

காதலரின் தோழியுடன் நீங்களும் நட்பு ஏற்படுத்திக்கொள்வது, மிகச் சிறந்த தந்திரமான செயலாகும். உங்களின் காதல் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாதவரை அவர்களின் நட்புக்கு நீங்கள் இடைஞ்சல்களை ஏற்படுத்திவிட வேண்டாம். நல்ல தோழிகள் நட்புக்கு எப்போதும் பாதகமாக இருக்கமாட்டார்கள் என்பதால், நீங்கள் இருவரும் தோழிகளாக பயணிக்கலாம். இருவரும் மனம்விட்டு பேசிக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் இருவருக்கும் இடையில் நட்பு உருவாகவில்லை என்றால், அதற்காக காதலருடன் பழகுவதற்கு தடைபோட வேண்டாம். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக உங்கள் காதலர் இருந்தால், தோழியின் பிரிவு உங்கள் காதல் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டுவந்துவிடும்.நீங்கள் காதலி, அவள் தோழி

முதலில் நீங்கள் காதலி என்பதை புரிந்து கொள்ளுங்கள், அவள் உங்கள் காதலிருக்கு தோழி மட்டுமே. நீங்கள் வாழ்க்கைத் துணைவியாக வருவபர் என்பதால், உங்கள் காதலர் மீது தோழியை விட அதிக புரிதல் மற்றும் நம்பிக்கை உங்களுக்குத் தான் இருக்க வேண்டும். தேவையில்லாத கற்பனை சில சமயங்களில் அழகான வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும். நல்லவர்கள் எதிரிகளாக சித்தரித்துவிடும் என்பதால், எதார்த்தங்களை புரிந்து கொண்டு காதலருடன் அன்பாக பழகுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published: