பணியிடத்தில் நண்பருக்குக் கொடுத்த கடனை எவ்வாறு திருப்பி வாங்குவது ?

அவருக்கு எதற்காகப் பணம் தேவைப்படுகிறது என்பதைக் கண்டறியுங்கள். அது நேர்மையாக இருக்கும்பட்சத்தில் உதவிக்கு முன்வரலாம்.

news18
Updated: July 4, 2019, 2:26 PM IST
பணியிடத்தில் நண்பருக்குக் கொடுத்த கடனை எவ்வாறு திருப்பி வாங்குவது ?
அவருக்கு எதற்காகப் பணம் தேவைப்படுகிறது என்பதைக் கண்டறியுங்கள். அது நேர்மையாக இருக்கும்பட்சத்தில் உதவிக்கு முன்வரலாம்.
news18
Updated: July 4, 2019, 2:26 PM IST
பணியிடத்தின் உடன் வேலை செய்யும் நண்பரிடம் அவசரத் தேவைக்குப் பணம் வாங்குவது சகஜம். அதை சரியாகத் திருப்பிக் கொடுத்தால் அந்த உறவுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் பார்த்துக்கொள்ளலாம் என்று திருப்பிக் கொடுக்காமல் இருந்தால் இருவருக்கும் மனஸ்தாபங்கள்தான் அதிகரிக்கும். உங்கள் உறவும் நீடிக்காது. அப்படி நீங்களும் பணத்தை நண்பருக்குக் கொடுத்துவிட்டு எப்படி வாங்குவது என திகைத்துக் கொண்டிருக்கிறீர்களா ? கவலையே வேண்டாம் இந்த கட்டுரையைப் படியுங்கள்.

வரும் முன் காப்பதே சிறந்தது : முதலில் இதுபோன்ற விஷயங்களை பணியிடத்தில் தவிர்த்தல் நல்லது. குறிப்பாக அவரைப் பற்றி முற்றிலும் தெரியாது அல்லது அவருடன் நல்ல உறவு முறையில் இல்லாதபட்சத்தில் பண உதவி செய்வதைத் தவிர்க்கலாம்.
ஒருவேலை உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால் உங்கள் தேவைக்குப் போக மீதமிருக்கும் பணத்தை என்னால் முடிந்த உதவி என்று கொடுங்கள். அதிகமாக கொடுத்துவிட்டு எதிர்பார்த்த நேரத்தில் திரும்ப வரவில்லை எனில் மன வருத்தம்தான் அதிகரிக்கும்.

அவருக்கு எதற்காகப் பணம் தேவைப்படுகிறது என்பதைக் கண்டறியுங்கள். அது நேர்மையாக இருக்கும்பட்சத்தில் உதவிக்கு முன்வரலாம்.

சரியான நேரம் பார்த்து கேளுங்கள் : நீங்கள் கடன் கொடுத்திருந்தால் உடனே கேட்காதீர்கள். குறிப்பிட்ட கால நேரம் கொடுங்கள். அவர் தருவதாகச் சொன்ன நாளில் தரவில்லை என்றால் 2 - 3 நாட்கள் காத்திருங்கள். ஒருவேளை அவர் மறந்திருக்கக் கூடும். அவருக்கு நினைவூட்டும் விதமாகக் கேளுங்கள். ஆனால் எப்படிக் கேட்பது என தயங்காதீர்கள். அவரும் கொடுக்காமலே விட்டுவிட்டால் அல்லது மறந்து கொடுக்காமல் போனால் அந்த எண்ணம் உங்கள் மனதை விட்டு நீங்காது. உங்கள் உறவும் பாதிக்கப்படும்.

Loading...கேட்கும் முறையில் கவனம் : அவருக்குக் கடன் கொடுத்துவிட்டீர்கள் என்பதால் சாட்சிக்காக பதிவுகளை சேகரிப்பதைத் தவிருங்கள். உதாரணமாக மெயில் போடச் சொல்வது, வாட்ஸ் அப்பில் அனுப்பச் சொல்வது போன்ற விஷயங்களைக் காட்டிலும் நேரடியாகக் கேட்பதே சிறந்தது. அதுவும் மற்றவர்கள் முன்னிலையில் கேட்காமல் தனியாக அழைத்துச் சென்றோ, தொலைபேசியிலோ நல்ல முறையில் கேட்கலாம். உதாரணமாக பணம் தாருங்கள் என்று கேட்பதைவிட எப்போது தர முடியும் என அப்டேட் கேட்பதுபோல் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட தேதியில் தரவில்லை எனில் மீண்டும் கேளுங்கள்.

மாற்று வழியில் பணம் செலுத்தச் சொல்லலாம் : அதாவது அவரால் மொத்தமாக பணத்தை செலுத்தமுடியாத சூழ்நிலை இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தருவதற்கு வாய்ப்பு தாருங்கள். கையில் பணம் இல்லை என்றாலும் டிஜிட்டலில் பணம் அனுப்ப அனுமதிக்கலாம். ஆன்லைனில் நீங்கள் வாங்கிய பொருளுக்கு பணம் அவரைக் கட்டச் சொல்லலாம். ரெஸ்டாரண்டில் உணவுக்கு பில் கட்ட சொல்லலாம். வெளியே ட்ரிப் செல்வதாக இருந்தால் அந்த செலவுகளை பார்த்துக்கொள்ளச் சொல்வது இப்படியாக உங்கள் கடனை கழித்துக்கொள்ளலாம்.உங்கள் தேவையை புரிய வையுங்கள் : வாழ்க்கை என்ற சக்கரத்தில் யாருக்கு எப்போது வேண்டுமானாலும் சூழ்நிலை மாறலாம். அப்படி உங்களுக்கு பணத் தேவை அதிகமாக இருக்கும் சமயத்தில் அதை அவருக்குப் புரிய வையுங்கள். அப்படியும் உங்கள் பணத்தை தரவில்லை எனில் மீண்டும் மீண்டும் கேட்பதில் தவறில்லை. ஏனெனில் உங்கள் சூழல் சரியாக இல்லாதபட்சத்தில் வேறுவழியில்லை. உங்கள் குழு வெளியே செல்ல திட்டம் வகுத்தாலும் பணம் இல்லாத காரணத்தால் வரவில்லை என்று நேரடியாகவே சொல்லிவிடுங்கள். அப்போதும் அவர் புரிந்துகொள்ள நேரும்.

 
First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...