ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Gaslighting | எமோஷனல் துஷ்பிரயோகம் பற்றி தெரியுமா? நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

Gaslighting | எமோஷனல் துஷ்பிரயோகம் பற்றி தெரியுமா? நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

சுற்றியிருக்கும் ஒரு சிலர் நம்முடைய அனைத்து செயல்களையும் கேள்விக்குள்ளாக்கி, நாம் செய்வது அனைத்தும் தவறு என்ற சித்திரத்தை உருவாக்குவார்கள்.

சுற்றியிருக்கும் ஒரு சிலர் நம்முடைய அனைத்து செயல்களையும் கேள்விக்குள்ளாக்கி, நாம் செய்வது அனைத்தும் தவறு என்ற சித்திரத்தை உருவாக்குவார்கள்.

சுற்றியிருக்கும் ஒரு சிலர் நம்முடைய அனைத்து செயல்களையும் கேள்விக்குள்ளாக்கி, நாம் செய்வது அனைத்தும் தவறு என்ற சித்திரத்தை உருவாக்குவார்கள்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

உங்களின் தன்னம்பிக்கையை இழந்து சோர்வாக இருக்கிறீர்களா? அல்லது உங்கள் மீதே உங்களுக்கு ஒரு அவநம்பிக்கை இருக்கிறதா? இதற்கு நீங்கள் தான் காரணம் என்ற எண்ணம் ஏதாவதொரு வகையில் உங்களை அழுத்திக் கொண்டே இருக்கிறதா?. அப்படியான ஒரு சூழ்நிலையை நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நிச்சயம் நீங்கள் கேஸ்லைட்டிங் எனப்படும் எமோஷ்னல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. உங்களைச் சுற்றியிருக்கும், நெருங்கிய நபராக இருப்பவர் உங்களின் இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம். அதனை எப்படி தெரிந்து கொள்வது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

எமோஷனல் துஷ்பிரயோகம் அல்லது கேஸ்லைட்டிங் என்றால்?

சுற்றியிருக்கும் ஒரு சிலர் நம்முடைய அனைத்து செயல்களையும் கேள்விக்குள்ளாக்கி, நாம் செய்வது அனைத்தும் தவறு என்ற சித்திரத்தை உருவாக்கியிருப்பார்கள். சுய எண்ணங்களையும், செயல்பாடுகளையும் குறைகூறிக்கொண்டே இருக்கும் அவர்களால், உங்களின் சுய சிந்தனையை இழந்துவிடுவீர்கள். தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்து, நீங்கள் செய்யும் விஷயங்கள் தவறு என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, அதனை உங்களை நம்பவும் வைத்திருப்பார்கள். அவர்கள் கணவர், நண்பர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களுடைய எண்ணங்களை உங்கள் மீது திணிப்பார்கள்.

இது ஒரு விஷமத்தனமான எண்ணமும் கூட. அவர்கள் இருக்கும் சூழலில் நீங்கள் இருந்தீர்கள் என்றால், ஒரு எதிர்மறையான எண்ண ஓட்டம் உங்களுக்குள்ளாக நிறைந்துவிடும். உங்கள் மீது அக்கறை இருப்பதுபோல் காட்டி, அவர்கள் செய்வது சரி, நீங்கள் செய்வது தவறு என்ற மனோபாவத்தை உருவாக்கி உங்களையும் நம்ப வைத்துவிடுவார்கள். இது ஒருவிதமான மன அழுத்தத்தை ஏற்படுத்தி, உங்களால் சுயமாக செயல்படமுடியாத சூழலுக்கு தள்ளப்படுவீர்கள்.

நீங்கள் என்னவெல்லாம் நினைப்பீர்கள்?

எமோஷனல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உங்களால் உணர்ந்து கொள்வது என்பது உடனடியாக இயலாத ஒன்று. ஒருசில அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் ஒருவரால் உணர்ச்சியின் கீழ் அழுத்தப்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

உங்களைப் பற்றிய நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றாது அல்லது நினைக்க விரும்பமாட்டீர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர் போல் உணர்வீர்கள். பொதுவெளியில் செல்வதற்கு அல்லது சில இடங்களில் முன்பை விட கூச்ச சுபாவத்தை உணர்வீர்கள். நீங்கள் செய்யும் செயல்கள் தவறாக சென்றுவிடுமோ? என்ற பயம் இருக்கும். செய்த செயல்களும் தவறு என்று நீங்களே ஆணித்தரமாக நம்பிக்கொள்வீர்கள். எப்போதும் தனிமையை விரும்புவீர்கள். அடிக்கடி மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கும் பழக்கம் உருவாகும். தவறுகளை சுட்டிக்காட்டத் தெரியாது. வெறுப்பும் சோர்வும் அதிகமாக இருக்கும்.

எமோஷனல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாவது எப்படி?

அவர்கள் அன்பு வார்த்தைகளால் உங்களின் ஆழ்மனதை நனைப்பார்கள். உன்னை அதிகம் விரும்புவதால், உனக்காக இதனை செய்திருக்கிறேன் என தொடங்கி, அவர்கள் உங்கள் மீது அதீத அன்பு கொண்டவர்கள்போல் காட்டிக்கொள்வார்கள். இதுவரை நீங்கள் யோசிக்காத சில விஷயங்களைப் பற்றி தவறாக சித்தரிப்பார்கள். உதாரணமாக, நண்பர்களைப் பற்றி அல்லது உங்களுடைய செயல்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என தொடங்குவார்கள். நாளடைவில் ஒவ்வொரு விஷயமாக கூறி உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதை செய்யாதபோது உங்கள் மீது கோபத்தை வெளிக்காட்டுவார்கள். அன்பு, கட்டளை, கோபம் என அது பரிணமிக்கும்.

கேஷ்லைட்டிங் படிநிலைகள் என்ன?

அவர்கள் கூறுவதை முதலில் நீங்கள் நிராகரிப்பீர்கள், ஆனால் நாளடைவில் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்கத் தொடங்கும்போது, உங்கள் வார்த்தைகளின் மீது அவநம்பிக்கை ஏற்படும். மெதுவாக அவர்கள் கூறுவதை சரி என ஒப்புக்கொள்ளத் தொடங்குவீர்கள். பின்னர், அவர்கள் கூறுவதை முழுவதுமாக நம்பத் தொடங்கி உண்மைக்கும், தவறுக்கும் வித்தியாசம் தெரியாமல் மன அழுத்தத்தில் உழலுவீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் இருந்து விடுபடுவது எப்படி?

உங்களின் செயல்பாடுகளின் மீது அவநம்பிக்கை ஏற்படும்போது, உங்களை நீங்கள் பகுப்பாய்வு செய்யத் தொடங்குங்கள். உங்களுடைய கன்ட்ரோல் உங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். யார் சொல்வதையும் கேட்டு அதற்கேற்ப செயல்பட வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள். உங்களை எமோஷனல் துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கண்டவுடன் ஒருவித எதிர்மறை எண்ணங்கள், பயம் ஏற்படத் தொடங்கும். அத்தகைய நபர்களிடம் இருந்து விலகிக் கொள்ளுங்கள். பாசிட்டிவ் வைப்ரேஷனை உங்களுக்குள் உருவாக்கும்போது, புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் உங்களை ஆட்கொள்ளும்.

Published by:Archana R
First published:

Tags: Harassed mentally, Lifestyle, Mental Health