உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் உடலில் இந்த பிரச்சனைகள் வருமாம்..

காட்சி படம்

நீண்ட நாட்களாக உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை எனில் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

 • Share this:
  உடலுறவு என்பது இன்பம் மட்டுமல்ல. அதனால் உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன. உடலுறவு வைத்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகளை பற்றி பல ஆய்வுகள், கட்டுரைகள் வந்துவிட்டன. ஆனால் நீண்ட நாட்களாக உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை எனில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா..? அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

  ஆற்றல் குறையும் : உடலுறவு வைத்துக்கொள்வதில் வேகமாகவும், ஆற்றலுடனும் செயல்பட்டு வந்தவர்கள் திடீரென நிறுத்திவிட்டால், 50 வயதை கடந்த பின்பு இது தேவையில்லை என விலக்கிக்கொள்வோருக்கு அந்த வேகமும் ஆற்றலும் குறைந்துவிடும் என 2008 ஆண்டு அமெரிக்க இதழ் வெளியிட்ட ஆய்வு கூறுகிறது. பல மாதங்கள் உடலுறவு கொள்ளவில்லை என்றால் உடனே களைப்பு வந்துவிடும். நீண்ட நேரம் செய்ய இயலாது.

  புற்றுநோய் அபாயம் : ஆண் குறி விந்தணுக்கள் வெளியேறாமல் வறண்டுவிட்டால், அந்த உறுப்பிற்கான ஆற்றல் தீவிரமாக கிடைக்காத பட்சத்தில் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்களுக்கான துணை இல்லாவிட்டாலும் சுய இன்பம் பெற்று அவற்றை வெளியேற்றுங்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  இரத்த அழுத்தம் உயரும் : உடலுறவின் போது இதய ஆரோக்கியம் வலுவாகும் என பல ஆய்வுகளை கடந்துள்ளோம். ஒருவேளை அது தடைபட்டால் இரத்த அழுத்தம் உயரும் என்கின்றனர்.

  மன அழுத்தம் அதிகரிக்கும் : உடலுறவின் சிறப்பே அதன் இன்பம் மற்றும் மனதிற்குக் கிடைக்கும் உட்சபட்ச ரிலாக்ஸ்தான். இதை மென்ஸ் ஹெல்த் இணையத்தில் பேட்டியளித்த Dr Debra W Soh என்னும் நரம்பியல் மருத்துவரே உறுதி செய்கிறார். அதோடு விந்தணுவை வெளியேற்றுவதாலும் ஆண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் ரிலாக்ஸ் கிடைக்குமாம். அப்படியிருக்க உடலுறவை நிறுத்திவிட்டால் அந்த ஓய்வை நீங்கள் ஒருபோதும் பெற முடியாமல் போகலாம். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

  Also read : நீங்கள் அடிக்கடி சுயஇன்பம் காணும் நபரா..? பாதிப்புகளும், புரிதல்களும்   வேலையில் கவனமின்மை : Oregon State University நடத்திய ஆய்வில் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்சியுடன் இருக்கும் தம்பதிகள் வேலையிலும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் செயல்படுவதாகக் கூறியுள்ளனர். எனவே உடலுறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்குஉற்சாகப்படுத்த, உந்துதல் செய்ய எந்த விஷயங்களும் இல்லாததால் கவனமின்மை இருக்கலாம் என ஆய்வு கூறுகிறது.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: