கேள்வி :துணையை வைத்துக்கொண்டு அவரின் கண் முன்னே சுய இன்பம் காணுதல் நல்லதா..? இதனால் அவருடைய மனநிலை என்னவாக இருக்கும்.
பதில் : துணையின் முன் சுய இன்பம் காண்பது அவருடைய பார்வையைப் பொருத்தது. ஒருவேளை அதை அவர் அருவருக்கத்தக்க விஷயமாக நினைக்கலாம் அல்லது அதை மிகவும் ஹாட்டான விஷயமாக ரசிக்கலாம்.
நிறைய பேர் உடலுறவுக்கு முன் பாலியல் ஆசையைத் தூண்ட சுய இன்பம் செய்வார்கள். இதனால் அந்த உடலுறவில் ஈர்ப்பு அதிகரிக்கும் என இப்படிச் செய்வார்கள். இப்படி ஒருவேளை இருவரும் பேசி வைத்துக்கொண்டு துணை சொல்ல அவ்வாறு சுய இன்பம் காண்பது தவறில்லை அல்லது உடலுறவுக்கு முன் விளையாடுவது போல்..அவர் உங்களைத் தொட்டால் என்ன உணர்ச்சி கொடுப்பீர்களோ அப்படி உங்களை நீங்களே தொட்டு அவரின் உணர்ச்சியைத் தூண்டச் செய்யலாம். ஒருவேளை அவ்வாறு அவர் தொடர்ந்து உங்கள் சுய இன்பத்தைக் காணும்போது எப்படி தொட்டால், எங்கு தொட்டால் உங்களுக்கு உணர்ச்சி அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். எந்த மாதிரியான தொடுதல் உங்களுக்குப் பிடிக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
எப்படி இருந்தாலும், பல சமயங்களில் குறிப்பாக சிறிய அறையில் வாழும் தம்பதிகளாக இருப்பின் அவர்களின் சுய இன்பத்தைக் காணக்கூடும். அதேபோல் சுய இன்பம் செய்வதன் அறிகுறி அவருக்கு தாம்பத்திய உறவில் திருப்தி இல்லை என்பது அர்த்தம் கிடையாது. பல சமயங்களில் உங்கள் துணைக்கு செக்ஸ் மூட் இல்லாமல் இருக்கலாம். எனவே உங்கள் பாலியல் ஆசையைத் தீர்த்துக்கொள்ள அவ்வாறு செய்யலாம். எனவே இது முற்றிலும் சாதாரண விஷயமே..குறிப்பாக இப்படி நீங்களாக சுய இன்பம் செய்துகொள்வதும் நல்லதுதான். இதனால் நீங்களோ, உங்கள் துணையோ அசிங்கமாக நினைக்க ஒன்றுமே இல்லை.
நிறைய பேருக்கு மற்றவர்களின் சுய இன்பத்தைக் காணுவதில் விருப்பம் இருக்காது. அசௌகரியமாக உணரலாம். ஒரு அறையில் இருந்துகொண்டு வேறு யாரேனும் சுய இன்பம் கண்டாலும் அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். அது அவர்களுடைய தனியுரிமை என நினைக்கலாம். எனவே இப்படியான மனநிலையில் உங்கள் துணை இருந்தால் அதை நீங்கள் மதிக்கவும் வேண்டும். எனவே எதுவாயினும் உங்கள் துணையின் மனநிலை, பார்வையைப் பொருத்தது.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.