ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

செயற்கை கருத்தரிப்பு முயற்சிகள் திருமண உறவில் பிரிவை ஏற்படுத்துகிறதா..?

செயற்கை கருத்தரிப்பு முயற்சிகள் திருமண உறவில் பிரிவை ஏற்படுத்துகிறதா..?

செயற்கை கருத்தரிப்பு முயற்சிகள் திருமண உறவில் பிரிவை ஏற்படுத்துகிறதா..?

செயற்கை கருத்தரிப்பு முயற்சிகள் திருமண உறவில் பிரிவை ஏற்படுத்துகிறதா..?

திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே ஏதேனும் விசேஷமா என்று கேட்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் கூட குழந்தை இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சனையாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கருத்தரிக்க முடியவில்லை என்பது அதைவிட மன வருத்தம் தருவதாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எவ்வளவு அன்பாக, அன்னியோன்யமாக, புரிந்துணர்வோடு இருந்தாலும், தம்பதிகளின் வாழ்வில் குழந்தை இல்லாமல் போவது பெரிய துன்பம் தான். நிரப்ப முடியாத ஒரு வெற்றிடமாக அது பார்க்கப்படுகிறது. மருத்துவ ரீதியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் ஒரு பக்கம், செயற்கை முறை கருத்தரிப்பும் தோல்வி அடைந்தவர்கள், தத்து எடுக்க முழு மனதுடன் விருப்பம் இல்லாதவர்கள் மறு பக்கம் என்று தம்பதிகளின் வாழ்வில் இடைவெளி ஏற்பட்டு விரிசல் பெரிதாகும்.

  திருமணமாகி சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக சலிப்புத் தட்டும். அதை குழந்தைகள் சரி செய்வார்கள். ஆனால், எல்லாருக்கும் குழந்தை செல்வம் கிடைப்பதில்லை. அவ்வாறு, மழலை மொழியின் ஓசை கேட்காத தம்பதிகளின் வாழ்வில் என்ன விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்று இங்கே பார்க்கலாம்.

  இயற்கையாக கருத்தரிக்க முடியாத தம்பதிகளுக்கு, கருமுட்டைகளை உறைய வைக்கும் முறை முதல் IVF சிகிச்சைகள் வரை பலவிதமான கருத்தரிப்பு முறைகள் வந்துவிட்டன. ஆனால், சிலருக்கு இந்த சிகிச்சைகள் சரியான பலன்கள் தருவதில்லை. ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உடல் மற்றும் மன நலத்தை தீவிரமாக பாதிக்கின்றன, இதனால் தம்பதிகளுக்குள் இடைவெளி ஏற்படும். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய சூழலில், அது கிடைக்காத போது, பிரிந்து விடலாம் என்ற முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

  குழந்தை இல்லாமல் இருப்பது ஏதோ ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது!

  ஆனால், எல்லாருடைய வாழ்வில் இது தான் நடக்கிறதா?

  திருமணமான ஒரு தம்பதிக்கு குழந்தை வேண்டும் வேண்டாம் என்பது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. பல தம்பதிகளுமே தங்களுக்கு திருமணம் தேவையில்லை, உனக்கு நான் எனக்கு நீ என்ற முடிவெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் குழந்தை பிறக்காது என்பது உறுதியாக தெரிந்த பிறகும் அதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் ஒரு குழந்தையால் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி தங்களுடைய திருமண வாழ்க்கையில் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

  Also Read : எத்தனை நாட்கள் கழித்து நீங்கள் கர்பமாக இருப்பது தெரியும்..? எப்போது பரிசோதனை செய்தால் துல்லியமாக தெரியும்..?

  திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே ஏதேனும் விசேஷமா என்று கேட்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் கூட குழந்தை இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சனையாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கருத்தரிக்க முடியவில்லை என்பது அதைவிட மன வருத்தம் தருவதாக உள்ளது. சமீபத்தில் கூட பிரபலமான ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் ஆனிஸ்டன் தன்னால் கருத்தரிக்க முடியவில்லை என்பதை பற்றி வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இயற்கையாக கருத்தரிக்க முடியாமல் அவர் செயற்கை முறைப்படி பலவித சிகிச்சைகளை மேற்கொண்டும், உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொண்டும், உணவு கட்டுப்பாட்டை பின்பற்றியும் தன்னால் கருத்தரிக்க முடியவில்லை என்பதை மிகவும் வருத்தப்பட்டு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

  குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பது உறுதியான பிறகு வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?

  சாதாரணமாக, ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியாமல் அல்லது ஒரு தம்பதிகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் போதே, அவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறைகளை பின்பற்றும் காலத்திலேயே, ஏகப்பட்ட மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பது தெரிந்துவிட்டால், அந்த மன வருத்தமும், கஷ்டமும் பல மடங்கு அதிகரிக்கின்றன. ஏதோ ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இதில் ஒரு நபருக்கு பிரச்சனை மற்றொரு நபர் ஆரோக்கியமாக இருக்கிறார் எண்ணும் பொழுது அது அவர்களின் உறவையே பாதிக்கிறது.

  அதுமட்டும் இல்லாமல், செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சிகிச்சைகளுக்கு லட்ச கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே இதுவும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக இது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

  நெருக்கடிகளே அதிகமாக சந்திக்கிறார்கள் :

  ஆர்டிமிஸ் மருத்துவமனையின் ஹோலிஸ்டிக் மெட் மற்றும் மென்டல் வெல்னஸ் துறையின் தலைவர் மற்றும் மருத்துவரான ரச்சனா கன்னா, நம் சமுதாயத்தில் ஆண் பெண் திருமணம் செய்து கொள்வது, அடுத்த சந்ததியை வளர்ப்பதற்கு, குடும்பத்தில் அடுத்த தலைமுறை வளர்வதற்கு என்ற கண்ணோட்டமும் ஒரு பக்கம் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் உறவில் வெறுமை அல்லது இடைவெளி ஏற்படாமல் இருப்பதற்கு குழந்தைகள் ஒரு பாலமாகவும், பலமாகவும் இருக்கின்றன. குழந்தைகள் கணவன் மனைவி உறவை மேம்படுத்துகின்றன என்று இந்தியாவில் பரவலாக பார்க்கப்படுகிறது. ஆனால், காலம் மாற மாற குழந்தைகள் பெற்றுக் கொள்வது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பமாகவும் மாறி இருக்கிறது.

  Also Read : கர்ப்பப் பரிசோதனை கிட்டை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரிசல்ட் கிடைக்குமா..?

  எந்த அளவுக்கு குழந்தைகள் வேண்டுமா வேண்டாமா என்பது ஒரு தம்பதிகள் முடிவு செய்யும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறதோ, அதே அளவுக்கு குழந்தைக்காக மிகவும் சிரமப்படும் தம்பதிகளும் அதிகரித்துள்ளார்கள். குடும்பத்தின் அழுத்தம், சுற்றி இருப்பவர்கள் கூறும் ஆலோசனைகள், சமூகம் என்பதையெல்லாம் கடந்து சிகிச்சை பெறுபவர்கள் பலவிதமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

  குறிப்பிட்ட நேரத்தில் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவேண்டும், இந்த மருந்துகளை சாப்பிட வேண்டும், இந்த ஹார்மோன்களை உடலில் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ அட்டவணையை மிகவும் தீவிரமாக பாத்து பின்பற்றுவது உணர்ச்சிபூர்வமாக தம்பதிகளை பாதிக்கிறது. இயல்பாக மகிழ்ச்சியாக இருக்கக்கூட முடியாமல், இந்த நேரத்தில் இதை செய்தால் கரு தரிக்கும், இந்த நேரத்தில் இதைத் தவிர்க்க வேண்டும் என்று எல்லாவற்றையுமே அவர்கள் பார்த்து பார்த்து குழந்தைக்காக செய்ய வேண்டும் என்பது ஒரு கட்டத்தில் வெறுப்படைய செய்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

  Published by:Josephine Aarthy
  First published:

  Tags: Infertility, IVF Treatment, Relationship Fights