Home /News /lifestyle /

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்..! இதை செய்தாலே நீங்கள்தான் அவர்களின் அன்புக்குரியவர்..

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்..! இதை செய்தாலே நீங்கள்தான் அவர்களின் அன்புக்குரியவர்..

பூக்கள் : நீங்கள் உங்கள் டேட்டிங்கை காதலுடன் தொடங்க விரும்பினால் பூக்கள் தான் இதற்கு சிறந்த தேர்வு. அழகான பூக்களை பரிசளிப்பதன் மூலம் டேட்டிங்கை துவக்குவது என்பது எப்போதும் ஒரு மோசமான யோசனை அல்ல, நல்ல யோசனையே.

பூக்கள் : நீங்கள் உங்கள் டேட்டிங்கை காதலுடன் தொடங்க விரும்பினால் பூக்கள் தான் இதற்கு சிறந்த தேர்வு. அழகான பூக்களை பரிசளிப்பதன் மூலம் டேட்டிங்கை துவக்குவது என்பது எப்போதும் ஒரு மோசமான யோசனை அல்ல, நல்ல யோசனையே.

தாங்கள் விரும்பும் பெண்ணுக்கு அழகு, அறிவு ஆகியவை இருக்க வேண்டும் என ஆண்கள் எதிர்பார்ப்பார்கள். அதனை பெண்கள் சரியாக கணிக்க தவறும்பட்சத்தில் இருவருக்கும் இடையே புரிதலில் சிக்கல் உருவாகலாம்.

பெண்களை புரிந்துகொள்ள ஆண்கள் எப்படி கஷ்டப்படுகிறார்களோ? அதைப்போலவே பெண்களும் ஆண்களை புரிந்துகொள்ள கஷ்டப்படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. தாங்கள் விரும்பும் பெண்ணுக்கு, இத்தகைய குண நலன்கள், அழகு, அறிவு ஆகியவை இருக்க வேண்டும் என ஆண்கள் எதிர்பார்ப்பார்கள். அதனை பெண்கள் சரியாக கணிக்க தவறும்பட்சத்தில் இருவருக்கும் இடையே புரிதலில் சிக்கல் உருவாகலாம். இதனை தவிர்க்க விரும்பும் பெண்கள், சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் தங்கள் பார்ட்னரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யலாம்.


அழகும் அறிவும் : அழகும், அறிவும் ஒருசேர இருக்கும் பெண்களை, ஆண்கள் அதிகம் விரும்புவார்கள் என கூறுவார்கள். ஆனால், தன் கண்களுக்கு அழகாக தெரியும் பெண்களை மட்டுமே விரும்புவதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்கள். சுட்டியாக இருப்பதுடன், தன் மீது அதிக அக்கறை செலுத்தும் பெண்களை விரும்பும் ஆண்கள், நல்ல பண்புகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். சமயோசித்தமாக செயல்படும் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.


தனித்துவம் : தனித்துவமாக இருக்கும் பெண்களின் குணாதிசயம் ஆண்களை ஈர்க்கிறது. எப்போதும், ஒருவரை சார்ந்து இருப்பது அல்லது எல்லாவற்றுக்கும் எதிர்பார்க்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை. அவர்களை விட்டு முடிந்தளவுக்கு விலக முயற்சிக்கிறார்கள். எல்லா விஷயங்களிலும் பங்கெடுத்து, தன்னால் இயன்ற அளவு குடும்ப பாரத்தை சுமக்க தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் திறன் உள்ள பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்.


முன் சிந்தனை :  நேர்மறையான மற்றும் வெளிப்படையான பேசுவதை விரும்பும் ஆண்கள், முன்கூட்டியே ஒரு விஷயத்தை அனுமானித்து அதற்கேற்ப ரியாக்ஷன் கொடுப்பவர்களை வெறுக்கிறார்கள். நடக்காத ஒன்றை அல்லது நீண்ட காலத்துக்கு பிறகு நடப்பதை அல்லது நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதை எடுத்து, நடந்துவிடுவது போல் பேசி, அதற்கு தற்போது தீர்வு கேட்கும் பெணகளை ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. இதனால், அவர்களுடனான உறவை முடிந்தளவுக்கு முறித்துக்கொள்ள ஆண்கள் முயற்சிப்பார்கள். முடிந்தளவுக்கு பிரச்சனைகளை வெளிப்படையாக உங்கள் பார்ட்னரிடம் பேச பழகிக்கொள்ளுங்கள்.


குழந்தையாக இருக்க விரும்புவார்கள் : யாரும் பார்க்காத நேரங்களில் பெண்களின் கைகளில் அல்லது மடியில் குழந்தை போல் படுப்பதற்கு ஆசைபடுவார்கள். அப்போது, அன்பான மற்றும் ஆசையான வார்த்தைகளை தங்கள் பார்ட்னர் பேசுவதை கேட்க ஆர்வமாக இருப்பார்கள். ஒரு கடினமான மாலைப்பொழுதில், அதாவது பணியிடத்தில் சந்தித்த பிரச்சனைகளுடன் வரும் ஆண்கள், தங்களை கட்டியணைத்து எல்லையற்ற முத்தங்களையும், ஸ்பரிசங்களையும் பெண்கள் பொழிய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அவர்களிடம் அந்த எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், நீங்கள் தானாக செய்யும்போது, மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.


பெண்களின் உடை : பெண்கள் அழகாக உடை அணிந்திருந்தால், ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் செல்ல இருக்கும் இடத்தைப் பொறுத்து அதற்கேற்ப உடை அணிந்து கொள்ள பழகிக்கொள்ளுங்கள். அதாவது, உங்கள் பார்ட்னரை இம்பரஸ் செய்ய விரும்பினால், அவர் விரும்பும் ஸ்டைலில் உடை அணியுங்கள். அதுவும், அவருக்கு பிடித்த நிறத்தில் உடை அணிவது இன்னும் சிறந்தது. அப்போது, உங்கள் இருவருக்கும் இடையே இனம்புரியாத மகிழ்ச்சி வெளிப்படும்.


பொசசிவ்னஸ் : பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பொசசிவ்னஸ் இருக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள். மேலும், தன்னைப் பற்றி நண்பர்களிடம் புகழந்து பேசும் பெண்களையும் ஆண்களுக்கு பிடிக்கும். எல்லோரும் இருக்கும்போது அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என ஆண்கள் விரும்புவார்கள் என்பதால், அந்த இடத்தில் உங்கள் பார்ட்னருக்கு ஒத்துழைப்பு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.


 
Published by:Sivaranjani E
First published:

Tags: Healthy sex Life, Love, Relationship

அடுத்த செய்தி