கூட்டுக்குடும்ப வாழ்க்கை, படை சூழ்ந்த நண்பர்கள், சுற்றம், உறவுகள் என்பதெல்லாம் இப்போது காணக்கிடைக்காத அரிய விஷயங்களாக மாறி வருகின்றன. அதிலும் ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகு வீட்டிற்கு உள்ளேயே ஒவ்வொருவரும் தனித்து வாழ தொடங்கி விட்டோம். நாளடைவில் இப்படியே வாழ பழகி விட்டாலும் கூட, ஸ்மார்ட்போன்கள் போர் அடிக்கும் சமயத்தில், நம் அருகில் யாரும் இல்லாத போது இனம் புரியாத தனிமை உணர்ச்சி நம் மனதை வாட்ட தொடங்கும்.
இது ஏதோ சாதாரண உளவியல் பிரச்சினை என்று கருதி ஒதுக்கி விட முடியாது. முகத்தின் அழகு அகத்தில் தெரியும் என்பார்கள். தனிமை நம்முள் ஏற்படுத்தும் இறுக்கமானது நம் முகத்தை பொழிவிழக்கச் செய்யும். கவலை ரேகைகளை படர்ந்தால், நமக்கு வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. தொடர்ந்து தனிமை என்ற சூழலில் மனம் வெறுத்துவிட்டால், காரணமே இன்றி கோபம் கொள்ளும் நபராக நம்மை மாற்றி விடும். இதுமட்டுமின்றி ஸ்ட்ரெஸ், ரத்த அழுத்தம் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.
ஆக தனிமையை நம்மிடமிருந்து விரட்டுவதற்கு சிறந்த டிப்ஸ் இதோ..
* இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தனிமை என்பது எல்லோருக்குமான பிரச்சினை என்றாலும் கூட, முதலில் அதனை உளப்பூர்வமாக உணர்ந்து, ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* நம்மை சுற்றியிருக்கும் நபர்களுடன் அறிமுகமாகி பழக தொடங்க வேண்டும். நம்மை அவர்கள் புறக்கணிப்பார்கள் என்று எண்ணி தயங்கி நிற்க கூடாது.
* சமூகத்தில் உதவி தேவைப்படும் நபர்களுக்கு களத்தில் இறங்கி உதவிகளைச் செய்யும் தன்னார்வலராக நம்மை மாற்றிக் கொள்ளலாம். இதனால், கூடுதல் மன திருப்தியும் கிடைக்கும்.
* தோட்டம் பராமரித்தல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற ஏதேனும் ஒரு அன்றாட பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
* ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற ஆப்கள் மூலமாக ஆன்லைனில் நண்பர்களைத் தேடும் முயற்சிகளை கைவிட்டு, இயல்பு வாழ்க்கையில் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பிடித்தவராக இருக்க இந்த குணங்களை நீங்கள் கடைபிடித்தாலே போதும்...
* நாம் பராமரிப்பதற்கு ஒருவர் இருந்தால் நமக்கு பொழுது இயல்பாக கழிந்துவிடும். ஆகவே, நாய், பூனை போன்ற ஒரு செல்லப்பிராணியை வளர்க்கலாம்.
* வீட்டில் இருக்கும் சமயத்தில் ஸ்மார்ட்போன், டிவி போன்ற அனைத்தையும் ஆப் செய்து விட்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக மனம் விட்டு பேச நேரம் ஒதுக்க வேண்டியது கட்டாயம்.
* அருகில் உள்ள பார்க் மற்றும் ஜிம் போன்ற பொது இடங்களுக்கு ரெகுலராக சென்று புதிய நண்பர்களை தேடிக் கொள்ளலாம்.
* ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல் போன்ற தனித் திறன் பயிற்சிகளை வளர்த்துக் கொள்ளலாம்.
* புத்தக வாசிப்பு தரும் புத்துணர்ச்சியை வேறு எதுவும் ஒன்றும் தந்துவிட முடியாது. ஆகவே, நாம் இருக்கும் இடத்தில் புத்தகங்களை நிறைத்து, தனிமையாக இருக்கும் சூழலில், அவற்றை படிக்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.