பொதுவாக முந்தைய தலைமுறையினர் வரை கூட்டுக்குடும்பம் சகிதமாக இருந்தோம். அதனால் இன்ப, துன்பங்கள் அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு, உதவிகள் செய்து வாழ்க்கையை எளிதாக கழித்தோம். ஆனால் உலக மயமாக்கல், பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களால் புலம் பெயர்ந்து தனியாக வாழ வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டுள்ளோம்.
இதன் காரணமாக குழந்தைபேறு உள்ளிட்ட விஷயங்களை கூட கணவன், மனைவி என இருவர் மட்டுமே சமாளிக்க வேண்டிய நிலை. அவர்கள் அதில் போதிய அனுபவமின்மை காரணமாக பெரும் சவாலானதாக இருக்கிறது. அதனால் அவர்களுக்குள் பிரச்சனைகளும் எழுகின்றன. கர்ப்பமாக இருக்கும்போது கணவர்கள் தங்கள் மனைவிகளை கவனித்துக்கொண்டால் இருவருக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். கர்ப்பமான மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்வதற்கு 7 வழிகள்.,
கிரியேட்டிவாக இருங்கள்
உங்களால் கவிதை எழுதவும், நன்றாக வரையவும் முடியுமா? அப்படியென்றால் ஒரு கவிதை எழுதி நீங்களே பிரத்யேகமாக லவ் கார்டு ஒன்றை உருவாக்கி பரிசளியுங்கள். அது உங்களை கூடுதல் கவனத்தை அளிப்பதோடு, அவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் பிரியத்தை உணரச்செய்யும்.
இரவு உணவை சமைத்துக்கொடுங்கள்
உங்கள் மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து பரிமாறுங்கள். அப்போது அவர்களுக்கு பிடித்த இசையை ஒலிக்க விடுங்கள். மெழுகுவர்த்திகள் பொறுத்தி வைத்து கேண்டில் லைட் டின்னர் போல் செட்டப் செய்தால் கூடுதல் சிறப்பு. மறக்காமல் உங்கள் மனைவி சாப்பிட்ட பிறகு பாத்திரங்களை கழுவி விடுங்கள்.
உங்கள் மனைவியின் கால் பாதத்திற்கு மசாஜ் செய்யுங்கள்
உங்கள் மனைவியின் கால் பாதத்தில் நல்ல வாசனையான எண்ணெய் கொண்டு தேய்த்து, விரல்களை சுகமாக உருவி விட்டு மசாஜ் செய்யுங்கள். இது அவர்களை ரிலாக்ஸாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் வைக்கும்.
நன்றாக தூங்குவதற்கு உதவுங்கள்
பொதுவாக கர்ப்பமாக பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் இருக்கும். எனவே உங்கள் மனைவியை காலையில் நன்றாக தூங்கவிடுங்கள். அந்த நேரம் அவர்கள் காலையில் செய்ய வேண்டிய பணிகளை நீங்களே செய்து முடியுங்கள். இதனால் அவர்களுக்கு நல்ல தூக்கம் கிடைப்பதோடு, புத்துணர்ச்சியாகவும் உணர்வார்கள்.
வீட்டிலேயே உங்கள் மனைவிக்காக ஸ்பா வசதி ஏற்பாடு செய்யுங்கள்
கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவிக்கு ஸ்பா போல வேறு எதுவும் புத்துணர்வாக வைத்திருக்காது. அதனால் வீட்டிலேயே ஸ்பா ஏற்பாடு செய்து உதவுங்கள். அதனால் உங்கள் மனைவிக்கு வீண் அலைச்சல் இருக்காது.
வார இறுதிநாட்களில் வெளியே அழைத்து செல்லுங்கள்
உங்கள் மனைவியை வார இறுதி நாட்களில் வெளியே அழைத்து சென்று சர்ப்ரைஸ் அளியுங்கள். அதற்காக பெரிதாக மெனக்கெட தேவையில்லை. அது இருவரையுமே ரிலாக்ஸாக வைத்திருக்கும்.
உங்கள் மனைவியை நேசியுங்கள்
அவர்களை கட்டிப்பிடியுங்கள், முத்தமிடுங்கள், எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் திட்டமிட்டிருப்பவை பற்றி உங்கள் மனைவியிடம் கூறுங்கள். உங்களது தொடுதல் அவர்களுக்கு பேரின்பத்தை அளிக்கும். பிரச்சனைகளை மறக்கச்செய்யும். அவர்களால் எப்படி அவற்றை நேசிக்காமல் இருக்க முடியும்
Published by:Arun
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.