தர்பூசணி வெயில் காலத்தில் கிடைக்கக் கூடிய அற்புதப் பழம் என்றே சொல்லலாம். உடல் நீரேற்றத்தை அதிகரித்து உடலைக் குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் தர்பூசணி ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையையும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதாவது ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையில் இருக்கும் பெரும் பிரச்னை ஆண்குறி விறைப்பின்மை. இதை ஆங்கிலத்தில் Erectile dysfunction (ED) என்பார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வாக பலரும் மருத்துவரின் ஆலோசனைபடி வயகரா மாத்திரை உட்கொண்டு வருவார்கள். ஆனால் இந்த மாத்திரைகள் இல்லாமலேயே இயற்கை வழியில் மூலிகைகள், காய்கறி பழங்கள் மூலமும் ஆண்குறி விறைப்பை சரிசெய்ய முடியும்.
அந்த வகையில் தர்பூசணியிலும் அந்த மகிமை உண்டு என யூரோலஜி இதழ் வெளியிட்டுள்ள ஆய்வுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஆண்குறி விறைப்பின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்ட 24 ஆண்களுக்கு ஒரு மாதம் வரை தர்பூசணி கொடுக்கப்பட்டதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. அதேபோல் சியாங் மாய் பல்கலைக்கழகமும் இந்த ஆய்வை நடத்தி உறுதி செய்துள்ளது.
அதாவது தர்பூசணி சதைகளில் அமினோ ஆசிட் , L-citrulline ஆகிய அமிலங்கள் நிறைவாக உள்ளன. இவை ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. அங்கு இரத்த ஓட்டம் அதிகரித்தாலே ஆண் விறைப்பின்மை பிரச்னை நீங்கும்.
எனவே தினமும் 3 1/2 கப் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வந்தால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கலாம். நீங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகள் உட்கொள்கிறீர்கள் எனில் அவரின் ஆலோசனைக்கு பிறகு தர்பூசணியைச் சாப்பிடலாம்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.